இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள, வவுனியா நலன்புறிமுகாம்களை சென்று பார்வையிடுவதற்கு தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலக மக்கள் முன்னணியின் மனோகணேசன், ஐக்கிய தேசியக்கட்சியின் ஜெயலத் ஜெயவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் மங்களசமரவீர மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலி ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தமக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.
கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1 1/2 கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது. 2ம் உலகப்போரில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கைக்கும், அன்றைய உலக மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை, விட அதிகமானது. மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட வரிசையில் ஹிரோஷிமா, நாகசாகியை அடுத்து தமிழீழம் வந்துள்ளது.
அளவில்லாத மொக்கையுடன்
சென்ஷி
1977 வரை சிங்கள அரசு பொறுப்பு 77-க்குப்பிறகு சிங்களப்பேரினம் முழுவதும், சர்வதேசிய சமூகமும் பொறுப்பு. ஏனெனில் 77-ல்தான் 90 சதவீதற்கும் மேற்பட்ட மக்கள் தேர்தல் மூலம் வாக்களித்து தமிழ்ஈழப்பிரிவினை வேண்டுவதை உலகிற்கு பகிரங்க பறைசாற்றினார்கள். 'உலகில் ஓர் இனம் விருப்பதிற்கு மாறாக ஆளப்படுகிறது' என்ற செய்தியை அறிந்ததிலிருந்தே அதைக் கண்காணிக்கவும் காப்பாற்றவும், பிரிவினையை அங்கீகரிக்கவுமான பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு தொடங்குகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக