இப்போ கொஞ்ச நாளாவே இப்படித்தான் மண்டைக்குள் அடிக்கடி பல்ப் எரிகிறது....அன்னிக்கு இப்படித்தான் பைக்கில் போயிட்டிருக்கும் போது திடீர்னு மண்டைக்குள் பல்ப்......அவசர அவசரமாய் ஓரங்கட்டி பேப்பர் பேனா எடுத்து குறிச்சுக்கிட்டேன்........
அப்புறம் எங்க டேமேஜர் கிட்டே பேசிக்கிடிருக்கும் போது இப்படித்தான் பளிச்ச்னு பல்ப்....நான் பதறிப்போய் உடனே குறிச்சுக்கிட்டேன்........டேமேஜர் பதறிப் போய் ஆம்புலன்ஸ் கூப்பிட்டது தனிக் கதை!!!!
இன்னொரு நாள் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பளீர்னு பல்ப்.....வாயில் வைத்ததை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஓடிப் போய்க் குறிச்சுக்கிட்டேன்........தங்கமணி தூக்கமுடியாத உடம்பைத் தூக்கிட்டு ஓடிப்போய் டாக்டரக் கூட்டிட்டு வந்துட்டாங்க!!!
நேற்று டி.வி பார்த்துக்கிட்டிருக்கும்போது எரிஞ்ச பல்புக்கு நான் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டேன்...பக்கத்திலிருந்த பசங்க ஒரு தினுசாப் பார்த்துக்கிட்டு ஒதுங்கிப் போயிட்டாங்க........
சரின்னு வெறுத்துப் போய் தூங்கப் போனால் ஒரு பின்னிரவின் முன்னிரவில் மீண்டும் இந்தப் பல்ப் பளீர்னு எரிந்து ......நான் படுக்கையில் இருந்து துள்ளிக் கீழே விழுந்து மண்டை உடைஞ்சதுதான் மிச்சம்..........
இது என்ன வியாதின்னு தெரிலியே??? உட்கார்ந்தால் பல்ப்...நின்னா பல்ப்...நடந்தா பல்ப்னு.....பல்ப் எரிஞ்சு எரிஞ்சு மண்டையில் வலது பக்க மூலை எரிந்தே போச்சுங்க.........
ம்ம்ம்ம்...எப்போருந்து இப்படீன்னு யோசிச்சதிலே ஒரு விபரம் புரிஞ்சுதுங்கோ.....வலைப்பூ ஆரம்பிச்சதிலிருந்துதாங்க இப்படி!!!! வலைப்பூவுக்கு மேட்டர் தேடித் தேடிக் கிடைச்சவுடன் பல்ப் எரிய ஆரம்பிச்சு இப்போ இப்படி ஆயிரம் பல்ப் வாங்கிய அபூர்வ சிந்தாமணியாகிட்டேனே!!!!

என் குட்டி தேவதைக்குப் பிறந்த நாள் மார்ச் -8....எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....
.மார்ச் 9 குட்டி தேவதைக்குப் பரீட்சை அதனாலெ மார்ச் 8 பார்ட்டி எப்படி வைக்க?...
மார்ச் 9 பரீட்சை முடிஞ்சப்புறம் பஞ்சாபி ரசோயி கார்டன்லே வைத்து பார்ட்டி ...
எல்லோரும் வரீங்களா????

நீல நிற டைரி....அது சேமித்து வைத்த மயிலிறகுகளையும் மழைக் காலங்களையும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் நேரம் சிலு சிலுவென்று போகும்....
மீண்டும் மீண்டும் வாசித்துச் சுவாசித்த பக்கங்கள் அவை...அப்பாவிடம் அதிகம் பேசியதில்லை ...அம்மாவிடமும்தான்......தங்கையிடமும் அதிகம் பகிர்ந்ததில்லை....நீல டைரிதான் அப்பாவிடமும்,அம்மாவிடமும்,தங்கையிடமும் அதிகம் பேசியிருக்கிறது...
எனக்கும் அப்பாவுக்குமான பிணக்குகளில் நான் அதிகமாக மனம் விட்டுப் பேசுவது ,அழுவது எல்லாம் நீல டைரியிடம்தான்..கண்ணீர் தூரிகை சமயங்களில் எழுத்துக்களைக் கலைத்து அழகிய ஓவியமாக்கிவிட்டுப் போய்விடும் நீல டைரியின் பக்கங்களை...அழுது முடித்து எழுதி முடித்து மேசை மேல் வைத்து விட்டுப் போனால்....எனக்குத் தெரியும் அப்பா அதைப் படிப்பார் என்று......பிணக்குகளைத் தீர்க்கும் மந்திரக் கோலாகயிருந்திருக்கிறது நீல டைரி.......
நீல டைரி எனக்கும் அப்பாவுக்கும்,எனக்கும் அம்மாவுக்கும்,எனக்கும் தங்கைக்கும் ஒரு உணர்வுப் பாலமாகவேயிருந்திருக்கிறது. ஒவ்வொரு சண்டைக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டிருக்கும்.....ஒவ்வொரு சண்டை முடிவின் சந்தோஷச் சிலிர்ப்புக்கும் கூட பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும்.......என் ரகசியங்கள் குடும்பத்துக்குத் தெரிய வருவது கூட நீல டைரியினால்தான்.....
இவ்வ்ளோ ஏன்? சரண்யாவைக் குடும்பத்துக்கு அறிமுகப் படுத்தியது கூட நீல டைரிதான்...
சரண்யா பற்றிப் படித்து அம்மாவும் தங்கையும் நமட்டுச் சிரிப்புடன் கலாய்த்தது கூட நீல டைரியைப் படித்துத்தான்.....நான் தூங்குவது போல நடிக்கையில் "எப்படி எழுதிருக்கான் பாரு என் பிள்ளை ? ஒருநாள் பெரிய எழுத்தாளரா ஆகப் போறான் பாரு....."என்று சிலாகித்துப் பேசுவார்.அவருக்கென்ன தெரியும் நான் நீல டைரி தவிர வேறெதுவும் எழுதுவதில்லையென்று???
அந்த நீல டைரியைக் கையில் வைத்துத்தான் கத்திக் கொண்டிருந்தாள் சரண்யா....
"என்னங்க உங்க அப்பாவுக்கு விவஸ்தையே கிடையாதா???உங்க டைரியை எடுத்துப் படிச்சுட்டிருந்தார் இன்னிக்கு...நான் வாங்கி வச்சுட்டேன்....நமக்குள்ளே ஆயிரம் இருக்கும்.....இதை எல்லாமா படிக்கிறது?.....இந்த பேசிக் மேனர்ஸ் கூடக் கிடையாதா அடுத்தவங்க டைரியைப் படிக்கக் கூடாதுன்னு??? எனப் பட்டாசு வெடித்தாள்....
அவளுக்கென்ன தெரியும் என் உணர்வுப் பாலம் உடைந்து சுக்கு நூறாகியது????
நீல டைரி மேசை மேல் அநாதையாகக் கிடந்தது........ம்ம்ம் இனி எப்பவும் என்னால் டைரி எழுத முடியாது....

என் குட்டி தேவதைக்குப் பிறந்த நாள் மார்ச் -8....எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....
.மார்ச் 9 குட்டி தேவதைக்குப் பரீட்சை அதனாலெ மார்ச் 8 பார்ட்டி எப்படி வைக்க?...
மார்ச் 9 பரீட்சை முடிஞ்சப்புறம் பஞ்சாபி ரசோயி கார்டன்லே வைத்து பார்ட்டி ...
எல்லோரும் வரீங்களா????

அந்த பஸ் ஸ்டாண்டில் வெட்டியாய் நின்று கொண்டிருந்தேன்....ரெண்டு சின்னப் பொண்ணுங்க வந்துச்சு....அவங்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்மார்ட்டான இளைஞன் சிகரெட்டை ஊதிக் கொண்டே பல் வித்தைகள் செய்து கொண்டிருந்தான்...ம்ம்ம் அந்தப் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ணத்தான்.....
அதுலெ ஒரு பொண்ணு கொஞ்சம் சத்தமாகவே சொன்னது..."பையனுங்க சிகரெட் பிடிச்சா எனக்கு ரொம்பப் பிடிக்கும்....ரொம்ப மேன்லியா இருக்கும்" அப்படீன்னு ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கிளுக்கென்று சிரித்தது.....
உடனே வாங்கிட்டோம்லே...சிகரெட்....சின்னூண்டுப் பையனா இருந்தப்போ எங்க ஊர்ச் சின்னப் பள்ளிக்கூடச் சந்துக்குள்ளே நுழைஞ்சு கொஞ்ச நாள் ட்ரெயினிங் எடுத்துருக்கோமே....ஆனா ரொம்ப நாளாச்சே....அஞ்சாறு விதமா சிகரெட்டைப் பிடிக்க தனியா ஒருநாளுக்குள்ளே செல்ஃப் ட்ரெயினிங் எடுத்தாச்சு.....அப்புறமென்ன இதுக்கெல்லாம் கோச்சிங் க்ளாஸா போகமுடியும்??
கையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் மறுநாள் அதே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு அந்தப் பொண்ணுங்களுக்காகக் காத்திருந்தேன்....சரி....அதுங்க இல்லைன்னா வேற யாராவது பொண்ணுங்க வராமலா போய்விடுவார்கள்?? என ங்கே என்ற பார்வையுடன்...நின்றிருந்தேன்...
ம்ம்ம் ஜீன்ஸ் குர்த்தா போட்டுக் கொண்டு அழகா ஒண்ணு வந்தது.....நன் சிகரெட்டை ஸ்டைலாக உருவிப் பற்ற வைத்துக் கொண்டேன்....வித விதமாக புகையை வெளியே விட்டேன்....ஊஹும்...அது திரும்பியே பார்க்கவில்லை...அப்போ ஒரு பையன் பைக்கில் வந்தான்....இருவரும் சிரித்துச் சிரித்துப் பேசினார்கள்...எனக்கு ஒரு சிகரெட் வேஸ்ட்டாகிறதே என்று கவலையாயிருந்தது.......
அவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து வாயில் வைத்தான்....அவள் விருட்டென அதை பிடுங்கி...."சிகரெட் பிடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்வது???" சிகரெட் பிடிக்கிறவங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு ...?" என்று அதைத் தூக்கி எறிந்தாள்....
இப்போ நான் குழம்பிப் போயிருந்தேன்.......பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???..........

ஆனந்த விகடனுக்கான பதிவு இது!!!!
GOOD BLOGS வரிசையில் வைத்ததற்காகவும்,
மூன்று கவிதைகளைப் பிரசுரித்ததற்காகவும்....நன்றி....நன்றி...நன்றி....
GOOD BLOGS .........
எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்.....
உதிர்ந்த ஒற்றைச் சிறகு......
காதலினால் தோற்றுப் போகும் காதல்.....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக