சனி, 27 ஜூன், 2009

2009-06-27

என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இருவர்
ஒன்று என்னுயிர்
மற்றொன்று அதற்குள்
நீ!

அலைபேசி அழைப்பாய்
மின்னஞ்சல் அரட்டையாய்
தினம் என்னை
சந்திக்கும் நீ
எப்போது காட்டப் போகிறாய்
உன் 'முக'வரி!

உன்னை மாற்றிவிட நானும்
என்னை மாற்றிவிட நீயும்
செய்யும் செயல்களிலாவது
ஒற்றுமையாய் மகிழ்வுறட்டும்
நம் நினைவுகள்!!

- ஷேக் இப்ராஹிம்
மறந்துவிட்ட பக்கங்களை
மறுமுறை தேடுகிறேன்
நாளை எனக்கு
தேர்வு நாளாம்!!


நான் தினம்
நிறம் மாறினாலும்
இவன் நிறம் மாறவில்லை
சலிப்புடன்,
உடை!!

செய்வது தெரியாது
சொல்வது புரியாது
தூக்கமுமில்லை
மரணிக்கவுமில்லை
போதையுடன்

மயக்கம்!!

அனுதினமும் யாருக்கும்
தெரியாமல் நடக்கும்
ஓர் தேடல்
விடியல் இரவையும்
இரவு விடியலையும் !!

எதையும் தடுத்து
நிறுத்த முடியவில்லை
சொற்றொடரை நிறுத்தியது
முற்றுப்புள்ளி!!

- ஷேக் இப்ராஹிம்


More than a Blog Aggregator

by Shaikh Amjath Ibrahim
மறந்து
மறைந்து
மறையாதது
ஆசை!


முகம் முழுவதாய்
நனைத்தப் போதிலும்
தலை நனைக்காத மழை
கண்ணீர்!


பிரிந்து செல்லும்
திசை அறியாததால்
கூடி நின்று அழுதன
மழையாய் மேகங்கள்!


ஐந்து லட்சம்
கொடுக்க மறுத்த
கஞ்சனின் பிள்ளையின்
உயிரைப் பறித்தது
கொள்ளைக் காரனின்
ஐம்பது ருபாய்த்
துப்பாக்கித் தோட்டா!

இறுதியில் போய்
முடியும் இடம்
தெரியாமல் இருக்கின்றன
எல்லோர்க்கும் வழிகாட்டும்
பாதைகள்!


பல லட்ச நபரின்
மரணச் செய்தியை
வாசித்தச் செய்தியாளர்
அவர் மரணத்தன்று மட்டும்
மௌனமாய்!

அனைவரும்
கூச்சல் போடும் நேரத்திலும்
அமைதியாய் இருந்தது
மின்சார வெட்டில் மாட்டிக்கொண்ட
ஒலிப்பெருக்கி!

-ஷேக் இப்ராஹிம்


முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்
வாழ்வின் அடிப்படை தத்துவம்;

நாம் கடந்து வந்த
வாழ்க்கை புத்தகத்தில்
வருடங்கள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
நிமிடங்கள் நொடிகளென
அனைத்து பக்கங்களை
புரட்டிப் பார்த்தால்
நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்
புத்தாண்டு என்பது
வருங்கால தேதிகளை மாற்றிவிடும்
ஒரு நாள்தான் என்று ;

கடந்து வந்த பாதைகள்
கடக்கவிருக்கும் பாதைகளில்
நமக்கு சந்திக்க போகும்
அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;

திசை திரும்பிவிட்ட
படகுமேலேரி பயணிக்கும் நம்மை
இந்த புத்தாண்டு
நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;

மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி
நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்
என்றும் நிலைத்துவிட
இறைவனிடம் பிரார்த்தித்து
என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

- ஷேக் இப்ராஹிம்


More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
"வர்ஷினி, வீட்டுக்குத்தான் போகணும், அம்மாகிட்டே போணும்னு அழுதுச்சு. நான் வேன்லே கூப்டு போய் அவங்க வீட்டுலே விட்டேன். வர்ஷினி அம்மாகிட்ட, "ஒங்களைதான் வர்ஷினிக்கு வேணுமாம"னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அப்றமா,அவங்கம்மா வர்ஷினியை ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டாங்க..அப்புறம் வர்ஷினி ஸ்கூல்லேயே இருந்துச்சு. நாங்க வீட்டுக்கு வரும்போது, "நான் ஸ்கூல்லேயேதான் இருப்பேன், வீட்டுக்கு போக மாட்டேன்"னு அழுதுச்சு!"

இது (கதை) நேற்று நடந்ததாக பப்புவால் எனக்குச் சொல்லப்பட்டது.


செய்தி 1 :
கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 - 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக, "அம்மாகிட்டே போகணும்" என்று அழுவதாக ஆன்ட்டி செய்தியனுப்பினார்.

செய்தி 2 :
இந்த திங்களன்று பப்புவின் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது - 11.30 வாக்கில். ..அழைத்துக் கொண்டு செல்லும்படி.அவள் மிகவும் அழுதுக் கொண்டிருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போலிருப்பதாகவும்!!

(சளிதான் கொஞ்சம் அதிகமாக இருந்ததே தவிர, இவர்கள் அழுததில் கொஞ்சம் பயந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காய்ச்சல் எதுவுமில்லை. மேலும், பப்பு இப்போது அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதால் ஆண்ட்டி மாறியிருக்கிறார்கள். மோதி ஆன்ட்டியை மிஸ் செய்கிறாள் போல!)



நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ? - பப்பு

நான் போடலியே....(அதற்குமேல் என்ன சொல்வது..அழகாயில்லன்னு நெகடிவா சொல்லவேணாமே..வேற எப்படி..) - யோசித்தபடி நான்.

"நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!" - பப்பு!

ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!



"இது பச்சை தண்ணியா?" - கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்!

"இல்ல, இது க்ரீன் தண்ணி!" - பப்பு!
தொடர்பதிவெழுத பிரபலப்பதிவர் திரு.முரளிக்கண்ணன் அழைத்தது வியப்பும், திகைப்பும் தந்தது. அவரது பதிவுகள் தமிழ்சினிமாவின் காலக்கண்ணாடி. இயல்பான நகைச்சுவை அவர் பதிவுகளில் எப்போதும் எதிரொலிக்கும். அவரது அழைப்புக்கு மிக்க நன்றி. இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணம்.

வாழும்போது கசப்பாகவும், நினைக்கும்போது இனிப்பாகவும் இருக்கும் காலம்., பள்ளிக்காலம். எங்கள் பள்ளி படித்த 44 மாணவர்களுக்கும் பொதுவான போதிமரம் என்று இன்று புரிகிறது. எனது பள்ளியின் அமைப்பு அவ்வளவு எழிலானது. மரங்களும், செடிகளும் சிறு உயிரினங்களும் எங்களோடு இலவசக் கல்வி பயின்றன. பள்ளியில் எனது பெஞ்ச்முதல் வேதியியல் சோதனைக்கூடம் வரை யாவும் அழகு. பன்னிரண்டாம் வகுப்பு (அல்லது பன்னண்டாப்பு!) வரைக்கும் தமிழில் பயின்றது, பிற்காலத்தில் ஆங்கிலத்தை எளிதாகக் கையாள உதவியது.

இருபாலர் பயிலும் பள்ளி.  பெண்களை வேண்டாவெறுப்பாகப் பார்க்கத் துவங்கி, வியந்துநோக்கும் "முதிர்ச்சிக்கு" முன்னேறிய நாட்கள் பள்ளி நாட்கள். மாணவிகள் படிப்பில் வல்லவர்கள். எப்போது படிப்பார்கள் என்று கணிக்கும் ஆற்றல் இன்றுவரை யாருக்கும் இல்லை. வகுப்பில் அதிகம் பேசி அடிவாங்குவார்கள். ஆண்கள், ஒவ்வொரு தேர்வுமுடிவின் போதும்  அடிவாங்குவோம்.

தீபாவளிக்கு மறுநாளும், பிறந்தநாளும் எங்களது சிறப்பு தினங்கள். அன்றுமட்டும் சீருடையில்லாமல் வேறுடையில்வரும் சலுகை. (எனது பிறந்த நாள் மே மாதத்தில்!). காலை 8:30 க்கு முதல் மணி. 8:45 க்கு இரண்டாவது. 8:46 க்கு வந்தால்கூட முடிவுகிடைக்கும் விசாரணைக் கமிஷன் உதவித் தலைமை ஆசிரியரின் தலைமையில் நடக்கும். பெரும்பாலும் P.T வாத்தியாரின் பிரம்படி என்ற தீர்ப்பே கிடைக்கும். அடிக்கடி அவர் புதுப்பிரம்பு மாற்ற நானும் ஒரு காரணம்.

வகுப்பில் நான் ஓரளவு பிரபலம். பாடம் நடக்கும் போது ஏதாவது சொல்லி பிற மாணவர்களைச் சிரிக்கவைத்து விடுவேன் (நான் சிரிக்காமல்). ஆசிரியர் எப்படியும் நோய் முதல் நாடிவிடுவார். பிறகென்ன, மாணவிகளும் சிரிக்கும்வண்ணம் தண்டனை கிடைக்கும். திட்டுவாங்கிவிடவே கூடாது என ஒவ்வொருநாளும் சபதமெடுத்து நானே முறியடித்த காலங்கள் அவை.

கால்பந்து விளையாடி சீருடையெல்லாம் அழுக்கோடும், வாயெல்லாம் மண்ணோடும் கேலிக்கு ஆளாகி, சிறந்தவீரனாவேன் என ரகசிய சபதமெடுத்து, மறுவாரமே கிரிக்கெட் அணியில் சேர்ந்தது, ஜாதி,மத,நிற வேற்றுமைகளின்றி நிம்மதியாய்த் திரிந்தது, பள்ளிக் கேண்டீனுக்குப் பெண்களோடு சென்றால் ஐஸ்கிரீம்; ஆண்களெனில் டீ  என்ற உணவுபேதம் அறிந்தது, ஞாயிறு இரவுவரை விளையாடிவிட்டு, திங்கள் காலை வீட்டுப்பாட நோட்டைத் தேடியது, அரசுவிடுமுறைக்கோ, அரசியல்விடுமுறைக்கோ ஏங்கியது, புதர்ப்பாதை கண்டுபிடித்து ஆண்டுவிழா, விளையாட்டு தினம் இவற்றிலிருந்து பாதியில் ஓடியது இதெல்லாம் என் பள்ளி வழங்கிய வரங்களில் சில!

கிரிக்கெட்டில் கோப்பை, அழகான பெண்களின், அற்புதமான பையன்களின் நட்பு, பத்தாம் வகுப்பில் காலாண்டில் தோல்வியுற்று பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்,இன்றுவரை நான் எழுதும் தமிழுக்குக் காரணம் இவை பள்ளியை நினைவுகொள்வதற்கான காரணங்களின் குறைந்தபட்சம்.

பழைய மாணவர்கள் ஒன்றுசேரும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற இருப்பதாக நண்பன் சொன்னான். அறிவிப்புக்காகக் காத்திருக்கிறேன்.

டிஸ்கி: அழகான நாட்களில் வாழும் வாய்ப்பினைத் தந்த திரு.முரளிக்கண்ணன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. தொடர்பதிவெழுத நான் அழைப்பது அக்னிப்பார்வையை!


 

 

   

கருத்துகள் இல்லை: