அப்பாவுக்கு அன்பு மகனின் பதிவு . வாழ்க்கையில் அனைத்தையும் தாமதமாய் பெற்றவர் நீங்கள் . மனைவியிலிருந்து அன்பு மகன் நான் உட்பட .அதனாலேயே என்னவோ தங்களை பற்றி எல்லாமே நான் தாமதமாகவே அறிகிறேன் . மூன்று நாளுக்கு முந்தைய உங்களின் பிறந்த நாளைக்கூட .'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ' என்பது மாதிரியான அரசியல் வாசகத்தை உங்கள் முன் வைக்க விரும்பவில்லை . நீங்கள் வாழ்த்தவும் முடியாத வணங்கவும் முடியாத இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன் .
ஒரு தகப்பனாக என்னை தாங்கள் கண்டித்ததும் இல்லை , தோழனாக தோள் கொடுத்ததும் இல்லை . என் குறித்த உங்களது விமர்சனங்களை அம்மா வழியாகவே அறிந்தேன் . அதன் பொருட்டே உங்களை சராசரி அப்பாவின் இடத்தில் என்னால் இருத்த முடியவில்லை . அதே நேரம் உங்கள் கருத்துகளுடன் ஒருமித்து போகவும் முடியவில்லை . நீங்கள் சராசரி அப்பா இல்லைதான் , அதற்காக உங்கள் கனவை நான் காண முடியாது . உங்கள் வழியில் நான் பயணப்படவும் முடியாது . என்னுடைய இந்த கருத்திற்கு தாங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் .
இதை நான் உங்களிடம் நான் நேரில் கூறப் போவதுமில்லை , நீங்களும் இந்த பதிவை படித்து என்னிடம் வாதம் புரியப் போவதுமில்லை . ஒரு மகனாக உங்களிடம் கூற முடியாததை இங்கு பதிந்ததில் ஒரு சின்ன ஆசுவாசம் . ஒன்று மட்டும் உறுதி நான் என்றுமே உங்களுக்கு சராசரி மகனாக இருக்க மாட்டேன் .
தாமதிக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துகள்
இப்படிக்கு
பாலா
ஒரு தகப்பனாக என்னை தாங்கள் கண்டித்ததும் இல்லை , தோழனாக தோள் கொடுத்ததும் இல்லை . என் குறித்த உங்களது விமர்சனங்களை அம்மா வழியாகவே அறிந்தேன் . அதன் பொருட்டே உங்களை சராசரி அப்பாவின் இடத்தில் என்னால் இருத்த முடியவில்லை . அதே நேரம் உங்கள் கருத்துகளுடன் ஒருமித்து போகவும் முடியவில்லை . நீங்கள் சராசரி அப்பா இல்லைதான் , அதற்காக உங்கள் கனவை நான் காண முடியாது . உங்கள் வழியில் நான் பயணப்படவும் முடியாது . என்னுடைய இந்த கருத்திற்கு தாங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் .
இதை நான் உங்களிடம் நான் நேரில் கூறப் போவதுமில்லை , நீங்களும் இந்த பதிவை படித்து என்னிடம் வாதம் புரியப் போவதுமில்லை . ஒரு மகனாக உங்களிடம் கூற முடியாததை இங்கு பதிந்ததில் ஒரு சின்ன ஆசுவாசம் . ஒன்று மட்டும் உறுதி நான் என்றுமே உங்களுக்கு சராசரி மகனாக இருக்க மாட்டேன் .
தாமதிக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துகள்
இப்படிக்கு
பாலா

இந்த படத்தை கொஞ்சம் நல்லா உத்து பாருங்க. அமெரிக்க தொழிலாளியை கவுரவ படுத்த சிலை வைக்கப்படுகிறது . அதனடியில் made in china என பொறிக்கப்பட்டுள்ளது . உலகின் முதன்மை நாட்டாமையான அமெரிக்காவிலும் சீனா தனது கடையை விரித்துவிட்டது .செல்போன் முதல் மருந்து மாத்திரை வரை சகாய விலையில் வழங்க சீனா தயாராகி விட்டது . இன்னும் சில வருடங்களில் தீபாவளிக்கு இனிப்பும் உழவர் நாளுக்கு பொங்கலும் கூட சீனாவிலிருந்து இறக்குமதி ஆகலாம் .இந்த மார்க்கெட் தந்திரத்தின் பின்னணி என்ன ? இங்கிலாந்துடன் நட்பு பராட்டி கவிழ்த்து அவர்களது நாற்காலிக்கு வந்த அமெரிக்காவின் தந்திரம் தான் . உலகின் ஒட்டு மொத்த நாடுகளிலும் கடை விரித்து அதை ஆலதொடங்கும் எண்ணம்தான் .
இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்ததன் பின்னணியில் இந்த தந்திரம் உள்ளது . முதலில் ராணுவ தளவாடங்களை விற்கலாம். நல்ல லாபம் கிடைக்கும் . போருக்கு பிறகு உருக்குலைந்தும் கிடக்கும் நகரத்தை சீனாவின் trade mark சகாய விலையில் சீர் செய்யலாம் . அப்படியே இலங்கையுடன் நட்பு செய்யலாம் . இந்தியாவை கண்காணிக்கலாம் . ஆசியா மட்டுமின்றி உலகின் நாட்டாமை ஆகிவிடலாம் என்கிற நினைப்புதான் சீனாவுக்கு . நினைப்பு பொழப்பை கெடுக்கும் மாப்ளேய் .
கடந்த நான்கு நாட்களாக மண்டை குழப்பும் செய்தி இது . பிரபாகரன் உள்ளாரா அல்லது மாண்டரா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்பது பதிலாக இருக்கலாம் .பிரபாகரன் தவிர்க்கமுடியாத சூழலில் தனது முக்கியமான பிற தலைவர்களுடன் சிற்றூந்தில் தப்பிக்க முயலும்போது ஏவுகனை வீசி கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது .ஆனால் அவரது பிரேதத்தில் தீக்காயம் ஏதுமின்றி நெற்றிபொட்டில் குண்டடி காயம் மட்டும் இருந்தது . பின்பு போர்க்களத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவித்தது .ஏன் அவரது மரணத்தில் இத்தனை முரண்பட்ட தகவல் . எந்த ஒரு அவசர நிலையிலும் இயக்கத்தின் தலைவர்கள் ஓரிடத்தில் கூடவோ ஒன்றாய் தப்பிக்கவோ மாட்டர்கள் என்கிறார் எனது ஆசான் . இலங்கை அரசோ அனைவரும் ஓரிடத்தில் கொல்லப்பட்டதாக கூறுகிறது . புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரன் நலமுடன் உள்ளார் .இயக்கத்தை தொடர்ந்து வழி நடத்துவார் என்கின்றனர் .உண்மையை யாரும் யூகிக்க முடியாது . ஏனென்றால் போற்பகுதிக்கு எந்த ஒரு பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை.இலங்கை அரசு தருவதுதான் தகவல் .புலிகளோ பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாட்சியங்களை காட்டவில்லை.அனைத்து தமிழ் நாளேடுகளும் இந்த இரண்டு செய்தியையும் மாற்றி மாற்றி பிரசுரிக்கின்றதே தவிர உறுப்பு இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் நிலையை ஏறக்குறைய மறந்து விட்டது .தனக்கு சாதகமாய் செய்தி வெளியிடுவதால் இரு தரப்புமே புத்திசாளியகிவிடுகிறது. உண்மை தேடும் நானும் என்னை போன்ற பிற தமிழனுமே முட்டளாகின்றோம்
அடியேன் பாலா .பாலமுருகன் .பதிவுதளங்களின்பால் கொண்ட ஆர்வத்தால் எழுத துணிந்துள்ளேன். தமிழ் உலகிற்கு இவன் என்ன பெரிதாய் எழுதிவிட போகிறான் என்று நீங்கள் உங்கள் அருகிருக்கும் நண்பரின் காதில் கிசுகிசுக்கலாம்.பெரிதாய் இல்லை என்றாலும் நற்றமிழில் பார்த்ததையும் பழகியதையும் பாதித்ததையும் பதியவே விரும்புகிறேன் .என் பதிவுகளின்பால் ஏற்படும் உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் எழுத்துரு கொடுத்து எனக்கே திருப்பி விடுங்கள் .அது உங்கள் வசவோ வாழ்த்தோ எதுவாயினும் . பிழையெதுவும் கண்டால் சுட்டிக்காட்டி குட்டி விடுங்கள்.பெற்றுகொள்வேன் இப்படிக்கு
பாலா மற்றவர் செய்வதை திருப்பிச் செய்து
சுற்றமும் மகிழ்ந்திட
நானும் மகிழ்ந்திட்டேன்
மனதிலும் செயலிலும்
இறைவனை காட்டிடும்
குழந்தையாய்;
எதிர்கால எழுச்சிக்காக
நிகழ்கால வீழ்ச்சிகளை
மனதிலே தாங்கினேன்
துணிவுடனே இளைஞனாய்;
உழைப்பாலே தேடினேன்
விடியல் பல கோடியை
விடிந்து விட்டும் தேடினேன்
சராசரி மனிதனாய்;
- ஷேக் இப்ராஹிம்
சுற்றமும் மகிழ்ந்திட
நானும் மகிழ்ந்திட்டேன்
மனதிலும் செயலிலும்
இறைவனை காட்டிடும்
குழந்தையாய்;
எதிர்கால எழுச்சிக்காக
நிகழ்கால வீழ்ச்சிகளை
மனதிலே தாங்கினேன்
துணிவுடனே இளைஞனாய்;
உழைப்பாலே தேடினேன்
விடியல் பல கோடியை
விடிந்து விட்டும் தேடினேன்
சராசரி மனிதனாய்;
- ஷேக் இப்ராஹிம்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக