நிர்வாணம்
நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...
குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...
பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..
தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்
தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..
என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...
துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...
காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....

நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...
குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...
பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..
தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்
தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..
என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...
துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...
காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....
"உலகில் எது அழகு?" என்று என்னை ஒரு கேள்வி கேட்டால்.... கைவிரல் மட்டுமல்ல .. கால்விரலையும் சேர்த்து எண்ணி சொல்வேன்… பசுமை போர்த்திய மலை, கொட்டும் மழை, வீசும் காற்று, அசையும் இலை, நீலக்கடல், மாலை வெயில், பால் நிலா, மணல் வீதி, செவ்வானம், வெண்மணல், காரிருள்… இவை அனைத்தும் அழகு.. ஆனால் இதனை மிஞ்சியதொரு அழகு உண்டு. மழையை, மாலை வெயிலை மிஞ்சியதொரு அழகா? என்று கேட்கிறீர்களா?? ....ஆம். அதுதான் 'குழந்தைப்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு அழகான விடியலைப் பார்த்தேன். வெண்முகில்களை ஊதித்துடைத்தாற்போல வானின் நீலம். எனது ஜன்னலோர மரத்தில் சிட்டுக்குருவிகளெல்லாம் "உய்க் உய்க்" என்று ஒலியெழுப்பியபடி தாவித்திரிந்தன. வீசிய காற்று முகத்தில் அறையவில்லை . இதமாக வருடிச் சென்றது. ஆசிய நாட்டு மக்களுக்கு, தோலைச் சுட்டெரித்த கோடைக்குப் பின் வரும் மழைக்காலம் மிகவும் பிடிக்குமென்று அப்பா சொல்வார். மரங்களுக்கு
வியக்க வைக்கும் இயற்கையையும், வித விதமான மனிதர்களையும், ஆச்சர்யங்களையும், கேள்விகளையும் கொண்ட கதைகளின் கைகளைப் பிடித்துத்தான் குழந்தைகள் வளர்கிறார்கள்.இயல்பாகவே குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடிருக்கிறார்கள். அவர்களுடைய உலகம் கேள்விகளால் நிரம்பியிருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து கதைகள் கேட்காமல், புத்தகங்கள் படிக்காமல் எந்த ஒரு இரவும் இருந்ததில்லை.
எனக்கு ஒரு பழக்கம்..ஒரு புத்தகமோ, ஒரு இசையோ, ஒரு திரைப்படமோ, ஒரு உறவோ...அது பிடித்து விட்டால், திரும்பத் திரும்ப மனது அதைச் சுற்றிச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். அதனுடைய முழுப் பரிமாணத்தையும் இன்னும் அறிந்து கொள்ளவில்லையென்ற எண்ணம் ஒவ்வொரு முறை வாசிக்கும்/கேட்கும்/பார்க்கும்/பழகும் போதும் ஏற்பட்டு, மீண்டும் மீண்டும் அதனை நோக்கி ஈர்க்கப்படுகிறேன். நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் 'மொழி' படமும்
இந்த உலகின் அழகை மட்டுமே ரசித்துக்கொண்டு, குரூரங்களோடு சுழன்று கொண்டிருக்கும் அதன் மற்றொரு முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமல் இருந்த என்னை, கனடாவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் (6 வயதில் அகதியாகத் தமிழ்நாட்டில் குடியேறியவர்) என் தோழியிடமிருந்து நேற்று வந்த ஒரு மின்னஞ்சல் துவளச் செய்து விட்டது.உலக இனமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு இனம் நிலமற்ற நாடோடிகளாகத் திரியும் அவலம் அவளது வரிகளில்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக