சனி, 27 ஜூன், 2009

2009-06-27


பெரியார், தம் 70 ஆவது வயதில், 30 வயதுடைய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். இதனை கடுமையாக எதிர்த்த அண்ணா துரை, இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக கூறி திராவிடக் கழகத்திலிருந்து வெளியறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். பிறகு, சிறிது காலம் கழித்து, கருணாநிதியும் வந்து சேர்ந்து கொண்டார் என்பது வரலாறு.

இங்க தான் நமக்கு சந்தேகம். இரண்டாவது திருமணம் என்பது அந்த காலத்தில் ரொம்ப சாதாரணமான விஷயம். நம்முடைய முப்பாட்டனுக்கு ரெண்டு மனைவிகள் இருந்த கதை எல்லாம் நமக்கு தெரியும். இந்த விஷயத்துக்காகவா, அண்ணா வெளியேறினார்? நம்பற மாதிரி இல்லையே....அதனால கொஞ்சம் தேடினேன், வரலாற்றை புரட்டிப் பார்த்தேன். எல்லா வரலாறுகளுக்கும் இரண்டு மூன்று வெர்ஷன்ஸ் இருப்பது இயல்பு. அதே மாதிரி தான் இதுவும்.

இன்னொரு தரப்பு சொல்றதையும் கேட்டு, எது உண்மை, எது பொய், நிஜமா என்னதான் நடந்துச்சுன்னு நம்ம யோசிச்சு முடிவு செஞ்சுக்கனும்.
பெரியார், அந்த காலத்திலேயே செல்வச் சீமான். ஆனால் செல்வந்தர்களுக்கே இருக்கும் கஞ்சத்தனம் அவருக்கு ரொம்ப அதிகம். சுருக்கமா சொல்லனும்னா எச்சைக் கையில் காக்காய் கூட ஓட்ட மாட்டார். இது பெரியார் அபிமானிகளுக்கு அவர் கூட இருந்தவங்களுக்கு நல்லா தெரியும்.
வயசு ஆக ஆக, பெரியாருக்கு ஒரு பயம் வந்துச்சு. அதாவது, வாரிசு இல்லாத சொத்தை நம்ம திராவிட கண்மணிகள் ஆட்டையை போட்டுறுவாங்களோன்னு பயந்தார் பெரியார். சரி, நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும், மணியம்மையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தார் பெரியார். இது குறித்து ஆலோசிக்க, அவருடைய நண்பர் ராஜ கோபாலாச்சாரியை(ராஜாஜி-பார்ப்பனன்), திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினார். வாழ்நாள் முழுக்க பார்ப்பன எதிர்ப்பாளியான பெரியார், தமக்கு ஆலோசனை வழங்க எந்த திராவிட நண்பனிடமும் போகவில்லை, மாறாக பார்ப்பனனிடம் சென்றார்.

பெரியாரின் குழப்பத்தைக் கேட்ட ராஜாஜி என்ன சொன்னார்னா....."மணியம்மையை தத்து எடுத்துக் கொண்டால், அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டால், உங்கள் சொத்துக்கள் கை மாறி விடும். ஆகையால், திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்கள் சொத்தை அபகரிக்க முடியாது" என்று சொன்னாராம் ராஜாஜி. இது பெரியார்க்கு சரியான யோசனையாக தோன்றியது. அதன்படி ஜூலை 9,1948 இல் திநகரில் ஒரு பிராமணரின் வீட்டில் நடந்தது பெரியாரின் திருமணம். ஒரு திராவிட கண்மணிகளுக்கு கூட அழைப்பு இல்லையாம்! இப்படி செஞ்சு, பீரோ சாவியை மணியம்மையிடம் ஒப்படைத்தாராம் பெரியார். இந்த ட்ரஸ்டை தான் இப்ப கீரமணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். (கொள்கைகளை அல்ல).
இதுல கடுப்பு ஆகி தான் அண்ணா திராவிட கழகத்தை விட்டு வெளியறி, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தாராம். அதன் பிறகு ஓடி வந்து ஒட்டிக் கொண்டவர் தான் கருணாநிதியாம்.
இதுல எது நம்பற மாதிரி இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!
அண்ணா கைல இருந்து என்னவெல்லாம் ப்ளான் பண்ணி கட்சி அதிகாரத்தை கருணாநிதி பெற்றார் என்பது இதை விட பெரிய கதை. அது இன்னொரு பதிப்புல பார்ப்போம் !

வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும். இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு. ரொம்ப கோவக்காரராக இருந்தால் படிக்காதீங்க.


நாத்திகம், ஆத்திகம்...என்னது இது?


தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்
அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்!

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி.


அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்.

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?
யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்.

இந்து சம்யத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன்.பிற்போக்கு சிந்தனை கொண்டவன்.
ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?

எல்லா சமுதாயத்திலும் ஏற்றத் தாழ்வு இருக்குது. இந்து சமயத்திலும் இருக்குது. அந்த காலத்துல ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. இது கலையப் பட வேண்டிய ஒன்று தான். இதுல மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
ஆனால் நகம் வளருதுன்னு, கையையே வெட்டிப்போமா? தலை வலி வருதுன்னு தலையை வெட்டிக்கிறோமா? கிடையாதே....

அந்த காலத்துல அப்பன் செஞ்ச வேலையை தான் புள்ளையும் செய்வான். அப்பன் சவரன் செய்ரவரா இருந்தா பையனும் அதே தான் செய்வார். நீங்க எத்தன பேரு சவரன் செய்ரவங்களை மரியாதையா பாக்குறீங்க? அக்குளை தூக்கி காட்டி ஷேவ் பண்ணிக்குறதுல்ல? இப்படி காலா காலாமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்துச்சு. இது அவங்க அவங்க செய்கிற தொழிலை வச்சு தான் உண்டாகி இருக்கணும். இதை சரி கட்ட தான், இட ஒதுக்கீடுகள் வந்தது. இப்போழுது ஓரளவுக்கு சமூக நீதி கிடைக்குது. பெரியாருக்கு இதுல பெரும் பங்கு இருக்குங்கறது யாராலையும் மறுக்க முடியாது.

சரி. இந்த பகுத்தறிவு பேசுறவங்க கிட்ட சின்ன சின்ன கேள்விகள்.

  • எல்லோரும் ஒன்னுன்னு சொல்லிட்டு, பணம் படைத்தவனிடம் எதுக்குங்க கைகட்டி நிற்கிறோம்?
  • மூளை வேலைக்கும் ஒரு சம்பளம், உடல் வேலைக்கு ஒரு சம்பளம்னு, நம்ம அரசுகளே ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்றத் தாழ்வு வச்சு சம்பளங்களை நிர்ணயிக்கராங்களே...ஏங்க?
  • நீ பெரிய ஆளா, உங்க முதலாளி பெரிய ஆளா?
  • பெரியார் பிறந்த நாளைக்கு அவர் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம் சொல்றீங்களே...ஒருவேளை பெரியாருக்கு தெரியுமோ?
  • அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பா, இந்திய பாஸ்ப்போர்ட் மதிப்பா?

இந்த மாதிரி நாகரிகமான ஏற்றத்தாழ்வுகள் உங்கள் கண்களுக்கு தெரியாதா?

ஏதோ சொல்லனுமேன்னு, இந்து சமயத்தை திட்டி தீர்க்காதீங்க! அப்படி திட்டி தீர்த்த பெரியாரே, சொர்க்க வாசல் திறக்குற நாளான வைகுண்ட ஏகாதசில தான் இறந்தார்.


இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு தெய்வ பக்தி உள்ள மாநிலம், தமிழ்நாடு தான்...இனமும் தமிழினம் தான் !


"ஐயோ, என் ஜாதிக்காரனுக்கு திரோகம் பண்றாங்க...கேவலப் படுத்துறாங்கோ....உங்களை எல்லம் பார்ப்பனர்கள் ஒடுக்கி வைக்குறாங்கன்னு" அரசியல் செய்ய மட்டும் தெரியும். அதுலயும் நம்ம ட்ரஸ்டீ கீரமணிக்கு டில்லி போய் சொத்து கணக்கு பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்குங்க...!

என்ன சொல்ல போறீங்க.....நீ எல்லாம் நிஜத் தமிழனே இல்ல...ஆர்யன்...அரை வேக்காடு, அது இதுன்னு தானே.....சொல்லிக்கோங்க..


இனியும் போலி பகுத்தறிவை மக்கள் நம்ப மாட்டார்கள் !

பாரதியின் அடுத்த கதை விரைவில்...........


More than a Blog Aggregator

by இவள்
ஏணியின் உச்சியை
தொடும் வேளையில்
பாம்பொன்று கொத்தி
சடாரென விழுகிறேன்..

நட்பென்னும்
பரமபதத்தில்
வீழ்வதும் எழுவதும்
உருட்டப்படும் கட்டைகளின்
தாயத்தை பொறுத்தமையும்..

தயங்களும் காயங்களும்
எப்போது விழுமென்று
யாராலும் யூகிக்க
முடிவதில்லை..

வெற்றி பெறவோ
தோல்வியுறவோ
தயாரான நிலையில்
பூச்சியத்திலிருந்து
ஆட்டத்தை துவங்குகிறேன்
மீண்டும்...
உனது காதலின்
எல்லைகள் விரிவடைந்தபடி...

எனது காதலோ
எல்லைக்குள்ளே...

உலகின்
ஒவ்வொரு மூலையிலிருந்தும்
தொடங்கிய உன்
காதல் பயணம்
கரைசேரும் நேரமென்றாய்..

முந்தைய உனது
காதலின் எச்சங்கள்
எனது காதலை
தின்று தீர்க்கிறது...

அறிதலுக்காய்
திறந்திருக்குமென்
ஜனக்குழி
ஒருபோதும் மூடியதில்லை..
உன் வருகை யறிந்து...

நீ
விழுந்தெழுந்த
குழிகள் பற்றி
கவலை இல்லை எனக்கு..

என்னிலும் அதற்கான
தடயங்கள் உண்டு என்பதாலே..
சிறிது உலர்ந்த முத்தங்கள்
காய்ந்த கண்ணீர் சுவடுகள்
அப்போதுதான்
முளைவிட்ட காயங்கள்...
இவற்றோடு
உடைத்து போன
சில காதல் துண்டுகளையும்..
சேகரித்து வெளியேறுகிறேன்...

என் சுவடுகளெங்கும்
உன் பிம்பங்களே தெரிய
சேகரித்த யாவற்றையும்
எரிக்கிறேன் அந்நிலவொளியில்..
பேருந்து நிலையத்தின் பலத்த
சத்தங்களுக்கிடையில்..

சாம்பல் துகள்கள் மிஞ்சுமென
பார்த்திருக்க
வெந்தும்
வேகாததுமான
கட்டையாக
கிடக்கின்றன அவைகள்..

அங்கிருப்பவர்களின்
அதட்டலுக்கும்
அன்னியப் பார்வைக்கும்
கரையொதுங்கி
பாதி கரியான
கட்டையோடு தொடர்ந்து
சுழல்கிறது என் காலச்சக்கரம்,...

கருத்துகள் இல்லை: