





26/01/2008 அன்று குடியரசு தினத்தையொட்டி செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பொதுசுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் விருது மரு.மூர்த்தி,மரு.மேஜர்.சிவஞானம்,மரு.தெ.இரத்தினவேல்,மரு.எஸ்.ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது .திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சத்யபிரத சாகு விருதுகளை வழங்கினார் . பெருங்கட்டூர் I.C.T.C. ஆய்வக நுட்புனர் செல்வி.கிரிஜாவும் விருதினைப் பெற்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெருமை சேர்த்தார் .







மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட இலுப்பை கிராமத்தில் 02.02.2008 அன்று நடைபெற்றது . முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திருமதி . எஸ். இலட்சுமி சங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் . ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . அரியூர் உதவி மருத்துவர் மரு . பெ.செல்லதுரை நன்றி கூறினார் . முகாமில் மகப்பேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தூக்கத்திலிருந்து விழிக்கும் கதிரவன்
மரத்தினூடே பார்க்கும் இரண்டு காகங்கள்
தெரு ஓரத்தில் குறைக்கும் நாய்
தழுவிச் செல்லும் தென்றலால் சிலிர்க்கும் இலைகள்
தண்ணீர் தெளித்து பெருக்கித் தள்ளி
புள்ளிகள் வைத்தாள்
சில புள்ளிகள் நேராக
மற்றவைகள் வளைவாக இணைத்தாள்
கோலத்தின் அழகா? அம்மாவின் திறமையா?
விரிந்த விழிகளில் மகள் பார்க்க
கோலத்தை மிதித்து "பேப்பர்" எடுக்கச்
சென்ற அப்பா
புன்னகை மாறாமல் கோலத்தை
சரி செய்த அம்மா
அப்பா "சாரி" கேட்டால் என்ன
என்று மகள் கேட்க
"அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது"
என்றாள் அம்மா.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற திட்டம் குறித்து இலங்கை அரசு சார்பில் கருத்து வெளியிட்ட வெளியுறவுத்துறை செயலர் டாக்டர் பாலித கோஹன, “மனப்பிரமை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும், மற்ற சிலருக்கு இண்டர்போல் என்ற சர்வதேச போலிசிடம் இருந்து தப்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார். இதே வேளை, நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக தற்காலிசெயற்குழஒன்றுஅமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் [...]


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக