புதன், 17 ஜூன், 2009

2009-06-17

தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் லோக்சபா தேர்தல் முறைகேடுகளைக் கண்டிப்பதாக கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால் அதிமுக எம்எல்ஏவான நடிகர் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யவில்லை. மாறாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேச அவருக்கு அனுமதி தரப்பட்டது. இதையடுத்து திமுதிமுவென மீண்டும் உள்ளே புகுந்த அதிமுகவினர், சேகருக்கு பேச அனுமதி தந்ததற்கு கடும் ஆட்சேபனை எழுப்பி பின்னர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் லால்கார் பகுதியில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 9 பேரை கடத்திச் சென்று மூவரை படுகொலை செய்துள்ளனர். மற்றவர்களின் கதி என்னவாயிற்று என இதுவரை தெரியவில்லை.
ஊராட்சி மன்றத் தலைவியைப் பார்த்து ஆபாசமாக பேசியதாக பாமக ஒன்றியச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்து உள்ளது வரகூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக இருப்பவர் மலர்க்கொடி. திமுகவை சேர்ந்தவர். இவரது கணவர் பெருமாள். மலர்க்கொடிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமிரி மேற்கு ஒன்றிய பாமக செயலாளர் புல்லட் ராதாகிருஷ்ணனுக்கும் (43) இடையே தேர்தல் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்

நிலவொளியில் நீயும், நானும்
சேர்ந்து நடக்கையில் - இது
கனவுதேசம் என்றலவோ
கருதத் தோன்றுது

பசுந்தறையில் அமர்ந்து நீயும்
பாட்டுப்பாடையில் - சுற்றி
மரத்தில் இருந்து
ரசிக்கிறது குயிலினங்களே

பனி விழும் பாதைதனில்
பயணம் செல்கையில் - நீ
இறுக்கிப் பிடித்த கைவழியே
என்னிதயம் உறையுதே

உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே

புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே

கருத்துகள் இல்லை: