புதன், 17 ஜூன், 2009

2009-06-17

தமிழர்களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதனை அரசாங்கம் யதார்த்தபூர்வமாக நிரூபிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதனை அரசாங்கம் யதார்த்தபூர்வமாக நிரூபிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள மக்களை ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் நடத்த வேண்டும் என சர்வதேச ஜுரிமார் சபை கோரியுள்ளது. இந்த முகாம்களில் 3 இலட்சம் மக்கள் தங்கியுள்ளார்கள். அவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் உள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் கெளவர நீதிபதியாக பிரபல இந்தியர் மோதி விசா நியமிக்கப்பட்டுள்ளார். விக்டோரியா மாகாணத்தில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் மோதி விசாவின் நியமனம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 65 வயதாகும் மோதி விசா, குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மெல்போர்ன் நகரில் 1983ம் ஆண்டு வந்து செட்டிலானவர். அவர் விக்டோரியா மாகாணத்தின் கெளரவ நீதிபதியாக நியமிக்கப்படுவதாக விக்டோரியா நீதித்துறை தெரிவித்துள்ளது. விக்டோரியாவின் அமைதி நீதிபதியாக மோதி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு சந்தை இன்றும் சரிவில் முடிந்திருக்கிறது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்திருந்த சந்தை குறியீட்டு எண்கள், மாலை வர்த்தக முடிவு வரை நீடித்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 435.07 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 14,522.84 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 161.65 புள்ளிகள் ( 3.58 சதவீதம் ) குறைந்து 4,356.15 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. கடந்த மூன்று நாட்களாகவே நிறுவன முதலீட்டாளர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: