புதன், 17 ஜூன், 2009

2009-06-17


டெல்லி செய்தி:
3 நாள் ரஷிய பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 16-ந்தேதியன்று தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அத்வானி, தேர்தல் பிரசாரத்தின் போதான தனது பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், தானும் தனது பேச்சுகளுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் எதிர்கட்சி தலைவரான அத்வானியுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் கூறினார்.


சபாஷ் அத்வானி, மன்மோகன் சிங்!


சென்னை செய்தி:

தமிழக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினர்....

...என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை. "உறுப்பினர் கலைராஜன், "அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன்" என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கோ,உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதல்-அமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்".

கலைராஜன் பேச்சு - இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் "படார்" என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை.


அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!, தமிழ் வாழ்க!!
Tamilish - தமிழ்
பயணிகள் யாரும் இல்லாத காலி விமானம் ஒன்றை ரியாத்தில் இருந்து மும்பைக்கு ஓட்டி வர மறுத்த ஏர் இந்தியாவின் மூத்த பைலட் ஒருவருக்கு அந்நிறுவனம் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. அது ஒரு பாதுகாப்பில்லாத விமானம். எனவே அதனை என்னால் ஒட்டி வர முடியாது என்று அந்த பைலட் ஓட்ட மறுத்து விட்டார். சரியான காரணம் எதுவுமின்றி கேப்டன் என்.கே.பெர்ரி என்ற பைலட் விமானத்தை ஓட்ட மறுத்ததால் அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஏர் - இந்தியா உயர் அதிகாரிகள். ஆனால் பெர்ரியோ, அந்த விமானத்தில் ஒரு கோளாறு இருக்கிறது. லேண்டிங் கியர் சரியில்லை. எனவே விமானத்தை லேண்ட் செய்யும்போது பிரச்னை வரும். இந் நிலையில் நான் எப்படி அதை ஓட்டி வருவது என்கிறார். ஆனால் அந்த விமானத்தில் அந்த கோளாறு இருப்பது உண்மைதான். மே 27 ம் தேதி ரியாத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தில் ( பிளைட் நம்பர் ஏஐ - 882 ) லேண்டிங் கியரில் கோளாறு இருப்பது தெரிய வந்து, அதிலிருந்த பயணிகள் இறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பப்பட்டனர். அந்த விமானத்தை சரி செய்ய ஏர் இந்தியாவுக்கு ரியாத்தில் வசதியில்லாததால்தான் கேப்டன் பெர்ரியை கொண்டு அதை மும்பைக்கு ஓட்டி வர சொன்னார்கள். ஆனால் அதை பெர்ரி ஓட்ட மறுத்ததால் வேறு பைலட்டை கொண்டு அந்த விமானத்தை மும்பைக்கு கொண்டு வந்து விட்டனர். இப்போது பெர்ரிக்கு, ஏன் விமானத்தை ஓட்ட மறுத்தீர்கள் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்



நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

நவம்பரில் மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானின் அதிபரும் சந்திக்கும் முதாலாவது உயர்மட்ட சந்திப்பு ரஷ்யாவில் நேற்று (ஜூன்16)நடந்தது.மூன்று நாள் பயணமாக ஜுன் 15ம் திகதி ரஷ்யாவின் ஷாங்காய் கூட்டு மாநாட்டிலும் பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா ஆகிய நாடுகளின் பிரிக் கவுன்சிலிலும் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்ய பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் சர்வதேச நாணய நிதியம் இது குறித்து உத்தியோக பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் சர்வதேச நாணய நிதியம் இது குறித்து உத்தியோக பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: