புதன், 17 ஜூன், 2009

2009-06-17


புதுவை நகரமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை வாபஸ் பெற வலியுறுத்தி நடைபெற்ற வாக்குவாதம் காரணமாக நகரமன்ற கூட்டத்தில் இன்று காலை அமளி ஏற்பட்டது. மேலும் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி நகரமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவை நகரமன்ற கூட்டம் இன்று காலை சேர்மன் டாக்டர். ஸ்ரீதேவி தலைமையில் துவங்கியதும், காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர்களின் தலைவர் கோவிந்தராஜ், நகராட்சியில் உள்ள கமிட்டிகளை கலைக்க பரிந்துரை செய்துவிட்டு புதிதாக பணியாளர்களை எப்படி நியமிக்க முடியுமென்று கேள்வி எழுப்பினார். மேலும், நகரமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை வாபஸ் பெற வேண்டுமென்றார்.

இதே கருத்தினை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜலட்சுமி, புமுகா உறுப்பினர்கள் குமரன், டேனியல், செல்வகணபதி, சுயேட்சை உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் வலியுறுத்தினர். இதன்பின்னர் அவர்கள் நகரமன்ற தலைவி ஸ்ரீதேவியின் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜலட்சுமி, நகரமன்ற தலைவியின் செயல்பாட்டினை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நகரமன்ற தலைவி ஸ்ரீதேவி, பதவி உயர்வு கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக காலி இடங்களுக்கு ஆட்களை நியமித்தோம் என்று விளக்கம் அளித்தார். இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது அதிமுக உறுப்பினர் பாஸ்கர், ஒருசில உறுப்பினர்கள் மட்டும் இப்படி பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் எப்போது பேசுவது என்று கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் குமாரி, கிருஷ்ணமூர்த்தி, சத்தியராஜ் ஆகியோரும் அவையில் இருந்து வெளியேறினர்.

நகரமன்ற தலைவி ஸ்ரீதேவியை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டநேரத்தில் அவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் எவரும் பேச முன்வரவில்லை. சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற அமளிக்கு பின்னர் நகரமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை வாபஸ் பெற அரசுக்கு பரிந்துரை செய்வது, நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும், புதுவை நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆளும் கட்சியே இந்ந நாட்டுக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகளினால் நாட்டுக்கு பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படக் கூடுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒப்ராய் மற்றும் பொப் ரேய் ஆகியோருக்கு விசா வழங்க இலங்கை மறுத்துள்ள போதிலும், தமிழர் விவகாரம் மற்றும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைத்திட்டம் என்பவற்றில் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒப்ராய் மற்றும் பொப் ரேய் ஆகியோருக்கு விசா வழங்க இலங்கை மறுத்துள்ள போதிலும், தமிழர் விவகாரம் மற்றும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைத்திட்டம் என்பவற்றில் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: