
ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் என்று சஞ்சய் ராம் படங்கள் என்றாலே வெட்டு குத்து சமாச்சாரங்கள்தான்! ஆனால் இவர் புதிதாக இயக்கிக் கொண்டிருக்கும் சுர்லா படத்தில் காமெடியும் இருக்கிறதாம். பொதுவா நான் பேசும்போது ரொம்ப காமெடியா பேசுறேன்னு சொல்வாங்க. இவ்வளவு காமெடியா பேசுற நீங்க, ஏன் ஆக்ஷன் படமா எடுக்கிறீங்க? என்று கேட்டவர்களும் உண்டு. இந்த படத்திலே ஆக்ஷனும் காமெடியும் ஈக்குவலா இருக்கும் என்றார் சஞ்சய்ராம். இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிப்பது கஞ்சா கருப்பும், ரமேஷ் கண்ணாவும்தான். காதல் சுகுமாரும் இருக்கிறார். இவருக்கு காமெடியுடன் கூடிய வித்தியாசமான கேரக்டராம்.
அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில் போன்ற படங்களை தயாரித்த அழகன் தமிழ்மணி இப்படத்தை தயாரிக்கிறார். நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்திருப்பாரே, அவர்தான் இவர்! இந்த படத்திலும் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இவரது மகன் அஜய் கிருஷ்ணா சுர்லாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
முக்கியமான காரியங்களில் மூத்தவர்களின் ஆசிர்வாதம் முக்கியமாச்சே? உன்னோட உயரத்திற்கும் கம்பீரத்துக்கும் ஆக்ஷன் படத்திலேதான் அறிமுகம் ஆகணும். நீ வந்து பிரேம்லே நின்னா எல்லாரையும் மறைச்சிடுவே. ஆக்ஷன் ஹீரோவாக நீ வந்தா, பெரிய பெரிய ஹீரோக்கள் மத்தியில் கூட உன்னால கம்பீரமா நிற்க முடியும் என்று அஜய் கிருஷ்ணாவை வாழ்த்தினார் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி. இந்த படத்தில் இவருக்கும் ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருக்கிறார் சஞ்சய் ராம். இவருக்காகவே ஸ்பெஷலாக ஒரு விக் தயார் செய்தாராம். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். இது மாதிரி ஒரு ரோலில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றார் ராதாரவி.
பிரஸ்மீட்டில் ராதாரவி பேசிய முக்கியமான விஷயங்களில் ரொம்ப முக்கியமான விஷயம் இது. தமிழ் படங்களில் நடிக்க மும்பையிலிருந்து ஹீரோயின்களை அழைச்சிட்டு வரணுமா? இங்கே தமிழ்லேயே நல்ல நல்ல பொண்ணுங்க இருக்காங்களே, அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். மும்பை ஹீரோயின்கள் நாலு நாள் ஷ§ட்டிங்கிற்கு வராமல் ஓடிட்டா கூட அவங்களை எங்கே போய் தேடுறது?
நூற்றில் ஒரு வார்த்தை! யோசிங்க இயக்குனர்களே....
திரைப்படத் துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளானாலும் இதுவரை சொந்தப் படம் தயாரிக்காதவர் மம்முட்டி.இப்போது முதல் முறையாக 'பிளே ஹவுஸ்' என்ற பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். புதிய படங்கள் தயாரிப்பது, படங்களை வினியோகம் செய்வது, நல்ல பிறமொழிப் படங்களை மலையாளத்தில் வெளியிடுவது போன்ற வேலைகளில் இந்த நிறுவனம் ஈடுபடும்.
இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சமீபத்தில் கொச்சியில் நடந்தது. பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி கூறுகையில்,
புதிய நடிகர்கள், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனம்தான் பிளே ஹவுஸ். பிரபல இயக்கும் படங்களையும் தயாரிப்போம்.
இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு ஜெயராம் நடித்துள்ள கானா கண்மணி படம்தான். இதனுடைய வெளியீட்டு உரிமையை நாங்கள் வாங்கியுள்ளோம் என்றார்.
யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாகவும், கூட்டுக்கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்ததைப்போன்று இணங்கி வந்தால் அவர்களுக்கு இடமளிக்கப்படும் என்றும் தமி்ழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து(ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு) பொதுச்சின்னமாகிய குத்துவிளக்கு சின்னத்தில் வவுனியாவில் போட்டியிடுவது என்று முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், தற்போது, ஜனநாயக [...]



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக