புதன், 17 ஜூன், 2009

2009-06-17



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Short FilmDirector of Photography: Vasanth KumarMusic: James Vasanthan (His Debut Project)Art: A.ChellaA SURESH GEORGE FILMProduced by A&A Entertainment (1994) Via : http://www.youtube.com/user/TWOSG




More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Via : http://www.youtube.com/user/VIJDEEEAn incident in small boy's life which makes you thrill and intresting while watching...It was a non-voice short film but has BG music for support..This short film was presented by YAKKAI STUDIO, directed by V.VIJAY in association with S.LINGESH.



இரண்டு நாளைக்கு முன் மழைபெய்த ஒரு இரவில் எழுத துவங்கியது... ஒவ்வொரு முறை அடுத்த வரி யோசிக்கும் போதும் உன் நினைவுகளால் எழுத முடியாமல் ஒரு சுகமான சோம்பேறித்தனம் வருது. இது உன்னைப்பற்றி எப்ப யோசிச்சாலும் வரும், அதற்கு பெயர் சோம்பேறித்தனம் அல்ல. உன் நினைவுகள் ஏற்ப்படுத்தும் உணர்வுகள், மேற்கொண்டு எந்த வேலையும் செய்ய விடாது. அதனுள் அமிழ்ந்து போகவேண்டும் என்று தான் தோன்றும்.

மழை பெய்து முடிந்துவிட்டது, என் ஜன்னலின் வெளியில், மழை மீண்டும் பெய்யும் அறிகுறிகளுடன் இருட்டு கலந்த மஞ்சள் வான பின்னணியில் பக்கத்துக்கு வீடு வேப்ப மரமும், கொய்யமரமும், அதற்கு காவல் காக்கும் தென்னை மரங்களும்...எனக்கு ரொம்ப பிடிச்ச பவளமல்லி வாசனை.... என் காதில் மட்டும் கேக்கும் எனக்கு பிடித்த பாட்டு.... வாழ்க்கையின் அரைசதவிகித சுவர்க்கம் இதுதான் போலும்....

இவ்வளவு அமைதியா நான்.....இப்படி இருக்கணும் என்பதுதான் என் ஆசையும், ஆனால் இப்படித்தான் என்ற பிம்பம் எனக்கு ரொம்ப சவுகர்யமா இருக்கு. என் தனி(மை)ப்பட்ட நேரங்களை தவிர,,,,,,

என்றோ ஒரு நாள் நீ கனவில் வந்து போகிறாய், உன் வாசம் பகல் முழுதும் என்னை சுற்றி,பல் பதிந்த காயம் கனவா??அடுத்த முறை அழுந்த கடி,தழும்பாவது எப்போதும் இருக்கும்.

தனிமை சில நேரம் ரொம்ப கொடியது... சிலநேரம் ரொம்ப இனியது.. அதுவும் உன்னை நினைக்கும் நேரத்தில் தனிமை மிக மிக இனியது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது எனக்கு மட்டுமா?

நீயும் உன் நிழலும் என்னை தொடர்ந்து வருவது எப்போது நிற்கும்??

டிஸ்கி: என்ன எழுதறேன்னு எனக்கே புரியல.. எதோ தோனுச்சு..

கருத்துகள் இல்லை: