தேசிய விருதுக்கு அடுத்து இந்தியாவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் விருது, பிலிம்ஃபேர் பத்திரிகை வழங்கும் பிலிம்ஃபேர் விருதுகள். முதலில் இந்தி சினிமாவுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. சில வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுக்கான விருதுகள் எங்கு எப்போது வழங்கப்படுகின்றன என்பது குறித்து நேற்று நடந்த பத்திரிகையார்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. விழா குறித்து பேசிய பிலிமஃபேர் பத்திரிகையின் ஆசிரியர் ஜித்தேஷ் பிள்ளை, ஜூலை 31 ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான விருதுகள் ஹைதராபாத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் என்றார்.
பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். சென்ற ஆண்டு சென்னையில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்தமுறை ஹைதராபாத். இந்த சுழற்சி முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று ஜித்தேஷ் பிள்ளை குறிப்பிட்டார். இந்த அறிவிப்பின்போது நடிகை சினேகாவும் உடனிருந்தார்.

காமெடி, வில்லன் இரண்டையும் கலந்துகட்டி அடிப்பதில் கலாபவன்மணி வித்தகர். ரஜினியின் எந்திரன் படத்திலும் அப்படியொரு வேடத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறாராம் மணி. சரணின் மோதி விளையாடு, சாமியின் சரித்திரம் என மேலும் இரு படங்கள் இவர் கைவசம் இருக்கிறது.வில்லனாக அறிமுகமாகி, காமெடியனாக கால் பதித்து இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார் மணி. ஆனால், மலையாளத்தைப் போல் தனி ஹீரோவாக எந்த தமிழ்ப் படத்திலும் இதுவரை நடித்ததில்லை. அந்தக் குறையும் விரைவில் மாறப் போகிறது.
சரித்திரம் படத்தில் மணியின் நடிப்பைப் பார்த்த சாமி, தனது அடுத்தப் படத்தில் மணியையே ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார். கதைக்குதான் நடிகன், நடிகனுக்காக கதை கிடையாது என கறாராக கூறி வருகிறவர் சாமி. அந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த தீர்மானம். வாழ்த்தி வரவேற்போம்.

இனி தலைவிரி கோலமாக பார்க்க முடியாது ஜீவாவை. அதிலும் அந்த தடித்த கண்ணாடி மேல் நிரந்தர கோபமே வந்திருச்சு அவருக்கு. போதும் சார். ரொம்ப போரடிச்சிருச்சு. அழுது புரண்டு நடிச்சா இப்போ யாரு பார்க்கிறாங்க. டிரெண்டு மாறிடுச்சு. நானும் அதுக்கேத்த மாதிரி நம்ம டிரெண்ட்டை மாத்திட்டேன் என்கிறார் தெளிவாக.கதைகேட்க அமரும் போதே "நல்ல என்டர்டெயினிங்கான சப்ஜெக்ட் இருந்தா மட்டும் சொல்லுங்க" என்கிறாராம். எஸ்எம்எஸ் சரியா போகலேன்னு சிலர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால், அந்த படத்திற்கு பிறகு விநியோகஸ்ர்கள் என்மேல நிஜமாகவே ஒரு மரியாதையான அன்பு செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா எல்லா இடத்திலேயும் பணம் போட்டவங்களுக்கு லாபம். நானும் இனிமே அது மாதிரி ஜாலி ப்ளஸ் ஆக்ஷனுக்கு இறங்கிட்டேன் என்றார்.
காட்டிலே ரொம்ப வலிமையுள்ள ரெண்டு மிருங்கள் சிங்கம் புலிதான். அதே வலிமையுள்ள இரண்டு கேரக்டரில் நானே நடிச்சிருக்கேன். முதல் தடவையா டபுள் ஆக்ட் பண்றேனா, லேசா நடுங்குது. ஆனால், ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்கு படப்பிடிப்பு. இந்த படத்திற்காக நிறைய ஹோம் வொர்க் பண்ணியிருக்கேன். கடல் தண்ணியிலேயே கிடந்து ஊறியிருக்கேன். ஊரே சுனாமின்னு பயந்து ஓடினப்போ, தனியாளா தண்ணியிலே கிடந்து நீச்சல் அடிச்சிருக்கேன். படத்தை பாருங்க, வேற ஜீவா தெரிவான்" என்கிறார் தன்னம்பிக்கையோடு.
பாலா தாடி வளர்க்க சொல்லியிருக்கிறாராம். நம்ம முகத்துக்கு முழுக்க வளராது. இருந்தாலும், அவரு மனசிலே ஒன்ணு வச்சிருப்பார் என்று காத்திருக்கிறார் ஜீவா. எதற்கு? சிங்கம் புலி, கச்சேரியை முடிச்சிட்டு தாடி வளர்க்க!
இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.
புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக