வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

அவர்கள் வீட்டுக்கு மின்சார விளக்கு எரியவில்லையென்றால் ஆட்கள் கூட்டி செல்வான். யாருக்கும் உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் கூட்டி போவான். மீன் தேவையென்றால் வாங்கி வந்து தருவான். கிட்டதட்ட அவர்கள் வீட்டு ஆளாய் நின்றான்.

அவர்களும் வஞ்சகம் இல்லாமல் வேலை வாங்கி கொண்டார்கள். பழக்க வழக்கம் நன்றாகத்தான் சென்றது.

இவன் வீட்டில் தங்கைக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தது.
அவர்களை விடவும் மிகவும் சுமரான குடும்பம் இவனுடையது. தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது சொல்லி கொண்டிருப்பான் .

எப்படி செய்யபோகிறீர்கள் ? என்றோ அவனுடைய நல்லது கெட்டது குறித்தோ வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்க மாட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி அவனிடம் வேலை சொல்வதையே குறைத்து கொண்டார்கள். இவனுக்கு குழப்பம் ஏன் அழைக்கவேயில்லை . அவனும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. கொஞ்ச நாட்களில் பழையப்படி வேலைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். இவனுக்கு புரிந்து போனது அவர்களுடைய மனது பற்றி இனியும் இந்த பழக்க வழக்கம் தேவையா என்று யோசித்தவாறு அந்த நட்பை உதறினான்.

மனிதன் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பிராணி தான். யார் எதை செய்தாலும் நேரடியாக அல்லது மறைமுக எதிர்பார்ப்புகள் கட்டாயம் உண்டு. உதவி இல்லையென்றாலும் கூட ஆறுதல் வார்த்தைகள் தேவை.
அதற்கு கூட மனது இல்லாத மனிதர்களிடம் பழகி என்ன பயன்?
பிரபல சீன நடிகர் ஜெட் லீ சிங்கப்பூர் குடியுரிமை வாங்கியிருக்கிறார். இதற்காக சிங்கப்பூரில் 14 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.66.5 கோடி ) மதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கியிருப்பதாக பிசினஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு அங்கு சொந்தமாக ஏதாவது ஒரு சொத்து இருக்க வேண்டும் என்பது விதி. சீன தலைநகரான பெய்ஜிங்கில் பிறந்த நடிகர் ஜெட் லீ எப்போது சிங்கப்பூரில் சொத்து வாங்கினார்; எப்போது குடியுரிமை பெற்றார் என்ற விபரம் சொல்லப்படவில்லை. ஏற்கனவே கோங் லீ என்ற சீன நடிகை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருக்கிறார். இப்போது இரண்டாவதாக ஒரு சீன நடிகர் சிங்கப்பூர் பிரஜை ஆகியிருக்கிறார்.
நன்றி : தினமலர்
மே 30ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 0.13 சதவீதமாக இருந்த இந்தியாவின் பணவீக்க விகிதம், ஜூன் 6 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மைனஸ் 1.61 சதவீதமாக ஆனது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த 30 ஆண்டுகளில் இப்போதுதான் மைனஸ் நிலைக்கு சென்றிருக்கிறது. இப்போதைய நிலையில் உலகிலேயே பணவீக்க விகிதம் மைனஸ் நிலைக்கு சென்றது இந்தியாவில் மட்டுமே. ஐரோப்பிய நாடுகளில் கூட சைபர் நிலை வரைக்குமே பணவீக்கம் சென்றிருக்கிறது.
நன்றி : தினமலர்
முதல் காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் இது...

1965 ஆம் ஆண்டில் வியட்நாமின் ரகசிய ஆயுத கிடங்குகளை அழிக்கின்றது அமேரிக்க ராணுவம் அப்போது கடற்படை விமானியாக பணியாற்றுபவன்
Dieter Dengler

இவனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ரெஸ்க்யூ டவுன்....இதில் பிரதான பாத்திரத்தில்
Christian Bale நடித்து இருக்கின்றார்...


அதாவது ரகசியமான நடவடிக்கை ஆதலால் குடும்பத்தினர் யாருடனும் கடிதம் மற்றும் போன் தொடர்பு வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.. அமேரிக்கா தலமை அதிகாரிகள், அது மட்டும் இல்லாமல் எதிர்பாராத விதமாக, அங்கும் மாட்டும சூழல் ஏற்பட்டால், எப்படி எல்லாம் அந்த அடர்ந்த காட்டில் தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கபடம் காட்டி அவர்களை வீயட்நாமுக்கு அனுப்புகின்றார்கள்.
அமேரிக்க கடற்படை தளத்தில் இருந்து புறப்படும் விமானம் நேராக
வியட்நாமின் அழகான வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் ரகசிய ஆயுத கிடங்குகளை எவுகனை வீசித் தகர்கையில் டென், விமானம் குண்டு பட்டு நிலைகுலைந்து வியட்நாம் வயல் வெளியில் விபத்துக்குள்ளாகின்றது...

வியட்நாம் வீரர்கள் அவனை பிடித்து பல கொடுர சித்தரவதைகள் செய்கின்றார்கள்... போர்கைதியாக எதிரியிடம் பிடிப்ட்டால் அவன் நிலமை என்னாகும் என்பதே கதை.....முதல் காட்சியில் விமானத்தில் இருந்து வியட்நாம் பசுமை வயல் வெளிகளில்குண்டு வீசும் காட்சி கிராபி்க்ஸ் காட்சி என்றாலும் மிக மிக அற்புதமான காட்சி....

படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்...


டென் தங்கி இருக்கம் கொட்டடியில் இருந்து அவன் தப்பிக்கும் முயற்ச்சிகள் மிக மிக அற்புதமான காட்சிகள்....

அதை விட இந்த படத்தின் பெரும்பாலான படப்பி்டிப்பு நடந்த இடங்கள் எல்லாம் தாய்லாந்தின் கிராமபுர பகுதிகள்...

மிக மிக அற்புதமான ஒளிப்பதிவில் பச்சை பசேல் கிராமங்கள் கவிதை...

சாப்பாடு ஏதும் இல்லை பசி உயிர் போகின்றது எதிரிகளிடம் இருந்து தப்பிக்க உயிர் வாழ வேண்டும் அதற்க்கு உடலில் தெம்பு வேண்டும்...பக்கத்தில் போகும் பாம்பை பிடித்து பச்சையாக சாப்பிடுவது பகீர் ரகம்.

Christian Bale மாட்க்கொண்டு தவிக்கும் கொட்டடிகாட்சிகள் இயல்பாய் இருக்க வேண்டும் என்பதற்க்காக, நம் சியான் சேது விக்ரம் போல் உடம்பை பட்டினியால் குறைத்து நடித்து இருக்கின்றார். அவர் டெடிக்கேஷனுக்காகவாவது படத்தை பார்க்க வேண்டும்....

கடைசியாக தன் நண்பர்கள் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க? எனக்கு மீன் இறைச்சி வேண்டும் என்கிறான்... அந்த அளவுக்கு பட்டினியால் நொந்து போயிருப்பான்...இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் இந்த படம் நான் தொடர்ந்து எழுதிவரும் பாத்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் வந்து இருக்க வேண்டிய படம் இது... இப்போது பார்க்க வேண்டிய லேபிளில் வந்து இருக்கின்றது..

Directed by Werner Herzog
Produced by Elton Brand
Steve Marlton
Written by Werner Herzog
Starring Christian Bale
Steve Zahn
Jeremy Davies
Music by Klaus Badelt
Cinematography Peter Zeitlinger
Editing by Joe Bini
Distributed by Metro-Goldwyn-Mayer
Running time 126 minutes
Language English
Budget $10,000,000
Gross revenue $7,037,886


அன்புடன்/ஜாக்கிசேகர்

ஓட்டுப்போட மறவாதீர்கள்





ஓடி விளையாடு பாப்பான்னு
உக்காந்து படிச்சேன்
ஒன்னுக்கு விடும் போது
ஓடி ஓடி திரிஞ்சேன்

ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது
தெருவில நிக்கும் பாட்டிக்கு
சத்துணவு உருண்டயை தெரியாம குடுத்தேன்
ஊருக்குள்ள திரிஞ்ச நாய்க்கு
சோறு போடலைன்னு
அம்மாகிட்ட சண்டைக்கு நின்னேன்


காலையில வாத்தியார் சொல்லி
கொட்டு வைச்சவன் பகையாளியா ஆக்கினேன்
சாயங்காலம் நெல்லிகாய் கொடுத்தவுடன்
அவனே என் தோஸ்த்துன்னு ஓடினேன்


தங்கச்சிகிட்ட போட்ட அடி புடி
சண்டை இன்னும் மறக்கல
அண்ணன்கிட்ட திருடி தின்ன லட்டு
நெஞ்ச விட்டு இன்னும் இறங்கல

பக்கத்து வீட்டு மாமா மண்ட சொல்லுது
நான் எறிஞ்ச கல்லை
அப்பா அடிச்ச அடி இன்னும் சொல்லுது
நான் பறிச்ச மாங்காயை

பொறுப்பு கூடி போச்சுன்னு
பொறுமை இழந்து நிக்கிறேன்
வெறுமையான வாழ்க்கையில
வெந்து வெந்து தவிக்கிறேன்


அன்பை தூக்கி சாப்பிட்டு
ஆணவம் முழிச்சி நிக்குது
பொறமை தீயை வச்சுகிட்ட - எனக்கு
சுடுகிற காரணமும் தெரியல


உன் குழந்தைகளுல ஒருத்தன்னு
சொல்லிகிட்டு திரிகிறேன்
குழந்தை மனசை
அழிச்சிட்டு நிக்கிறேன் - என் ஆத்தா மகமாயி
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதி்ல் ஊதியதாரர்கள், நடுத்தரப் பிரிவு மக்கள் பயன் பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது.இப்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உள்ளது. இதை ரூ. 1.8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக இது ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், இதனால் அதிக வருமான இழப்பு ஏற்படும் என்பதால் ரூ. 1.8 லட்சமாக மட்டுமே உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலம் : தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை: