வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18



பட்டாம்பூச்சி விருது

நான் வலைஉலகம் வந்த போது இந்த பட்டாம்பூச்சியை யார் வலைப்பூவில் பார்த்தாலும் ரொம்ப ஏக்கமாயிருக்கும் ஏன்னா அதன் அழகு நம்ம வலையை அலங்கரிக்காதான்னு....

பிறகு சில நாட்கள் கழித்து என் அன்பு மகள் காயு இதை எனக்கு கொடுத்தப் போது ஐய்யோ என் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை....அப்படி ஒரு சந்தோஷம்.....


உடனே அதை என் வலையை அலங்கரிக்கச் செய்து விட்டேன்..அதை 3 பேருக்கு தரனும் என்று சொல்லவே அதே ஆவலோடும் தரும் தகுதியும் நமக்கு உண்டா என்றா சந்தோஷத்தோடும் ஜமால், சிபி,புதியவன் ஆகியோருக்கு கொடுத்தேன்...

புதியவன் உடனே அதை உவகையோடு கொண்டு தன் வலைப்பூவில் பதிவிட்டார்..ஆனால் ஏனோ ஜமால் சிபி ஆகிய இருவரும் அதை தங்கள் வலையில் போட்டார்களா என்று இன்று வரை நான் பார்த்து வருகிறேன்.ஆனால் ஏனோப் போடவில்லை..

ஜமால் தனக்கு எட்டுமுறை கிடைத்தாக சொன்னார்...ஆதலால் நிராகரித்து விட்டாரோ என்னவோ தெரியலை.... சிபியிடம் உரிமையோடு சண்டையும் போட்டேன்...ஹஹஹஹ்ஹ பலனில்லை...ஒரு வேளை இதை அவர்கள் என்னிடமிருந்து பெற எனக்கு தகுதியில்லை என்றே நினைக்கிறேன்...


இப்போது இரண்டு மாதமாகி விட்ட நிலையில் இதை நான்
என் நண்பர்களுக்கு அளிக்க நினைக்கிறேன் ஹஹஹ்ஹ இந்த முறை இதை நான் தருபவர்கள் ஏற்பார்களா? இல்லையா? என்றுத் தெரியாது...


என் வலைப்பட்டாம்பூச்சி தமிழ்த்தேன் அருந்த நினைப்பதால் இதை ""வேர்களைத்தேடி"" குணாவுக்கும்......


என் வலையில் யோசிக்கவேலை இல்லையென்றும் பொழுதே போகலையென்றும் வண்ணப்படங்களில் வட்டமிடவேண்டும் என்று பட்டாம்பூச்சி கூறியதால் "ப்ரிய்முடன் வசந்த்"க்கும்

அ.மு.செய்யது வின் "மழைக்கு ஒதுங்கியவை" இதில் ஜுன் 10 ஏனோ இது இன்னும் மனதை பிழிந்துக் கொண்டே இருக்கிறது...இவருக்கும்....

அண்மையில் அப்பாவான என் நண்பர் "என் உயிரே" அபுஅஃப்ஸருக்கு அவர் அன்பு மகளை அந்த வண்ணமலரை வட்டமிடவும்

புரட்சி எழுத்தாளர் துணிச்சல் திலகம் என் தோழி "வீட்டுப் புறா" சக்திக்கும் தர விரும்புகிறேன்......

மூன்று பேருக்குத் தானே என்னும் வலையின் விதிமுறை வேணாமே...... நண்பர்கள் எல்லாருக்கும் தர ஆசைத்தான்(ஆமா பெரிய பொற்காசு மூட்டைப்பாருன்னு முழங்குவது கேட்கிறது....) இருப்பினும்
இதைப் பெற்ற நண்பர்கள் தரப்போகும் அந்த நண்பர்களும் என் நண்பர்களே....

குறிப்பு:- இதை என் விருப்பத்தின் பால் தருகிறேன்...ஏற்றுக் கொள்வது நண்பர்களின் விருப்பம்(அடிப்பட்டதால் எச்சரிக்கை உணர்வு)

ஐவருக்கும் என் வாழ்த்துக்கள்......









J ->அடுத்த பதிவுக்கு செல்ல
K ->முந்தய பதிவுக்கு செல்ல.

Space -> படிக்கும் பக்கம் மேலே செல்ல.
Shift+Space -> படிக்கும் பக்கம் கிழே செல்ல.



S -> நீங்கள் படிக்கும் பதிவுக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுப்பது .
M -> read/unread டிக் செய்வது .

Shift+A -> அனைத்தும் படித்ததாக அக்குதல் .
R -> நாம் படிக்கும் பதிவை (refresh) செய்வது.

U ->subscription பானலை மறைப்பது /தெரியவைப்பது.
Shift+? -> அனைத்து குறுக்கு வழிகளை காட்டுதல்.



more shortcuts:-

Shift+s -> Share on item.
Shift+o -> open selected subscription .

T -> tag on item.
V -> open article source code in new window.


இனிமேல் நாம மௌஸ்(mouse) அதிகமா பயன்படுத்த மாட்டோம் .




J ->அடுத்த பதிவுக்கு செல்ல
K ->முந்தய பதிவுக்கு செல்ல.

Space -> படிக்கும் பக்கம் மேலே செல்ல.
Shift+Space -> படிக்கும் பக்கம் கிழே செல்ல.



S -> நீங்கள் படிக்கும் பதிவுக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுப்பது .
M -> read/unread டிக் செய்வது .

Shift+A -> அனைத்தும் படித்ததாக அக்குதல் .
R -> நாம் படிக்கும் பதிவை (refresh) செய்வது.

U ->subscription பானலை மறைப்பது /தெரியவைப்பது.
Shift+? -> அனைத்து குறுக்கு வழிகளை காட்டுதல்.



more shortcuts:-

Shift+s -> Share on item.
Shift+o -> open selected subscription .

T -> tag on item.
V -> open article source code in new window.


இனிமேல் நாம மௌஸ்(mouse) அதிகமா பயன்படுத்த மாட்டோம் .

ஸ்ரீதேவி - ராகுல் திருமணம்: ரஜினி, கமல் வாழ்த்து
sridevi-marriage.jpg
டிகை ஸ்ரீதேவி - ராகுல் திருமணம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.  ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகம் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகளான ஸ்ரீதேவிக்கும் ஐதராபாத் தொழிலதிபர் ராகுலுக்கும் கடந்த் மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இருவரும் இல்லறத்தில் நுழைந்தனர். காலை 7.30 மணிக்குள் மேல் 9 மணிக்குள் நடந்த  இந்தத் திருமணத்தில் மணமகன் ராகுல், மணமகள் ஸ்ரீதேவியின் கழுத்தில் தாலி கட்டினார்.

ரஜினி, கமல் சரத்குமார் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.


ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறேன்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை என்னிடம் கேட்கலாம்...

http://news.tamilveli.com/2009/06/blog-post.html

கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?

தலைப்பு - விடுபட்டவை
கோள்சாரத்தைப் (Transit of planets) பற்றிய புலிப்பாணி முனிவரின் பாடல்:

"கேளப்பா குருமூன்றில் கலை தானெட்டு
.......கேடு செய்யும் சனி ஜென்மம் புந்தி நாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
......சீறிவரும் பாம்பு நிதியில் தோன்ற
ஆரப்பா அசுரகுரு ஆறிலேற
......அப்பனே திசையுயினுடைய வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
......குழவிக்கு நிரியாணங் கூர்ந்து சொல்லே!"
-------------------------------------
குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும். அல்லது காரிய சித்தி,
காரிய ஜெயம் இருக்காது.அந்தக் காலகட்டத்தில் நல்ல திசை
அல்லது நல்ல திசையின் புத்தி (Sub period of a benefic planet)
நடந்து கொண்டிருந்தால் இந்தக் கோச்சாரப்பலன் செல்லுபடியாகாமல்
போய்விடும். இல்லையென்றால் படுத்தி எடுக்கும்.

கோச்சாரத்தைவிட தசா புத்திதான் முக்கியமானது!
தசாபுத்தியும் சரியில்லை என்றால் அதுவும் சேர்ந்து கொண்டு சாத்தும்
சாத்தும் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரி, இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் கோச்சாரத்தில் 12 ராசிகளிலும் வலம் வரும்
அமைப்பு இருந்தாலும், இந்தக் குறிப்பிட்டுள்ள இடங்கள் மட்டுமே
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிகக் கேடானது. கிரகத்திற்கல்ல -
அதை அமைப்பாகக் கொண்டுள்ள ஜாதகனுக்குக் கேடானது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சொல்லவே இந்தப் பாடல்

அர்த்தம் ஆகியதா கண்மணிகளா?

வாழ்க வளமுடன்!
இன்னும் சிறப்பாக எழுத ஊக்க மருந்து தேவை! ஊக்க மருந்து (Tonic) உங்களுடைய பின்னூட்டம்தான்! காசா? பணமா? ஒரு வரி எழுதிவிட்டுப் போங்கள் இலவசம்தானே மனிதனின் முதல் ஊக்க மருந்து:-)))

கருத்துகள் இல்லை: