
அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட தொலைக்காட்சி சானல்களை வைத்துள்ளன என்பதை யாவரும் அறிந்ததே.தமிழ் தமிழ் என்று தமிழை கொன்று சினிமா அதை சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில்,மக்கள் தொலைக்காட்சி தனது வித்யாசமான அணுகுமுறையால் தனக்கென தனி இடத்தை பெற்றது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொலைக்காட்சி .மண் பயனுற வேண்டும் என்ற கூறிய நோக்கத்திற்கு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் வித்யாசப்பட்டது .அரசியலில் ஆயிரம் பல்டி அடித்தாலும் மக்கள் தொலைக்காட்சி எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை தனது நிகழ்ச்சிகளில் .
சுதந்திரதினம், பொங்கல், தீபாவளி நடிகைகள் பேட்டி எடுக்கும் தொலைகாட்சிகளுக்கு மத்தியில் மக்கள் சார்ந்த கிராமிய மனம் கமழும் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் மக்கள் இடத்தே ஒரு நற்பெயரை பெற்று இருந்தது .
கோட்டு,சூட்டு போட்டு கொண்டு செய்திவாசிபவர்கள் மத்தியில் சட்டை ,வேட்டி,வெள்ளை துண்டு அணிந்து செய்திவாசிபதிலும் வித்யாசம் காட்டியது ,அதிலும் முடிந்தவரை தமிழ் பெயரையே பயன்படுத்தி வந்தார்கள் .நிகழ்ச்சிகளில் ஒரு தரம் முகம் சுளிக்க வைக்காத காட்சி அமைப்பு என்று பலதரப்பிலும் பாராடப்ப்டது.
விளம்பரத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஏற்று கொள்ளவதில்லை என்ற கட்டுப்பாடு .மக்களை ஆட்டுவிக்கும் மெகா சீரியல் நாடகங்களுக்கு மத்தியில் சந்தன காடு ,ஈழம் நேற்றும் இன்றும் ,நேதாஜியின் வரலாறு போன்ற தொடர்களை ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சி நேயர்களை தன் பக்கம் கவர்தது .
இப்படி அனைத்திலும் வித்யாசம் காட்டிய இந்த மக்கள் தொலைகாட்சியில் டெலி
ஷாப்பிங் விளம்பரங்கள் அண்மைக்காலமாக ஒளிபரப்ப படுகிறது .வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாத மற்ற தொலைக்காட்சிகள் தான் இப்படி டெலி ஷாப்பிங் விளம்பரங்களை காட்டி காலம் கடத்தி கொண்டு இருகிறார்கள் .ஏன் இந்த மாற்றம் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி என்ற பெயர் பெற்ற இந்த தொலைக்காட்சி எப்படி தனது நிகழ்ச்சிகளை சமரசம் செய்து கொண்டது .
விரைவில் இயேசு அழைக்கிறார் போன்ற நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப படும் என்று வார ஏடுகளில் படித்தேன் .
மக்கள் தொலைக்காட்சி ஏன் இப்படி ஆகிவிட்டது?. மாற்றத்தை கொண்டுவந்து உலகு வாழ் தமிழர்களிடையே ஊடக புரட்சி செய்த இந்த தொலைக்காட்சி மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாற வேண்டும் .மாறுமா ?
என் கணவர் ஒரு அப்பாவி : அனுபம் ஆகுஜா
வேலைக்காரப் பெண்ணை கற்பழித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷைனி ஆகுஜாவுக்கு ஒரே ஒரு பெண் மட்டும் ஆதரவாக உள்ளார். அது அவருடைய மனைவியான அனுபம் ஆகுஜா.
”அவர் என்னுடையவர். 100 சதவிகித அப்பாவி. திருமதி ஷைனி ஆகுஜா என அழைக்கப்படுவதில் நான் பெருமையாக உணர்கிறேன்” என்றெல்லாம் அனுபம் ஆகுஜா கூறியிருக்கிறார்.
வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறப்பட்டு, மும்பை காவல்துறையினரால், கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் ஷைனி ஆகுஜா.
வேலைக்காரப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்மீது கற்பழிப்பு வழக்கும், பெண்ணை தவறான நடத்தைக்கு உட்படுத்துதல் மற்றும் மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் புகார்களை எல்லாம் ஷைனி ஆகுஜாவின் வழக்கறிஞர் மறுக்கிறார். இது காவல்துறையின் இட்டுக்கட்டும் வேலை என்கிறார்.
ஆனால் வேலைக்காரப் பெண்ணுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டது உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தடயவியல் துறையின் அறிக்கை வரவேண்டியிருக்கிறது. ஆனால் சட்டத்துறை நிபுணர்களின் கருத்துபடி, ஷைனி ஆகுஜா மீதான பிடி இறுகுவதாகத் தெரிகிறது.
”பாதிப்புக்குள்ளான அந்தப் பெண் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவித்ததும், அவளுடைய பரிதாப நிலையும் தான் அவளுக்குள்ள பலம்” என்கிறார் பெண் உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ஃபிளாவியா அக்னஸ்.
ஆனால் நேற்றுநடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தன் கணவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார் மனைவி அனுபம் ஆகுஜா.
”என் கணவர் ஒரு அப்பாவி” என்றவர், ”இங்கு நடப்பதில் எதை நம்புவது? என் கணவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து பல்வேறு வடிவங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் எது உண்மை? ஆனால் உண்மைக்கு ஒரு வடிவம்தான். உண்மை என்பது தான் உண்மை. அதற்கு வேறு வடிவம் கிடையாது. அந்த உண்மை என்னவென்றால், என் கணவர் நிச்சயமாக ஒரு அப்பாவி,
அவர் தவறிழைக்காதவர். உண்மை வெல்லும்” என்றெல்லாம் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.
நான் வலைஉலகம் வந்த போது இந்த பட்டாம்பூச்சியை யார் வலைப்பூவில் பார்த்தாலும் ரொம்ப ஏக்கமாயிருக்கும் ஏன்னா அதன் அழகு நம்ம வலையை அலங்கரிக்காதான்னு....
பிறகு சில நாட்கள் கழித்து என் அன்பு மகள் காயு இதை எனக்கு கொடுத்தப் போது ஐய்யோ என் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை....அப்படி ஒரு சந்தோஷம்.....
புதியவன் உடனே அதை உவகையோடு கொண்டு தன் வலைப்பூவில் பதிவிட்டார்..ஆனால் ஏனோ ஜமால் சிபி ஆகிய இருவரும் அதை தங்கள் வலையில் போட்டார்களா என்று இன்று வரை நான் பார்த்து வருகிறேன்.ஆனால் ஏனோப் போடவில்லை..
ஜமால் தனக்கு எட்டுமுறை கிடைத்தாக சொன்னார்...ஆதலால் நிராகரித்து விட்டாரோ என்னவோ தெரியலை.... சிபியிடம் உரிமையோடு சண்டையும் போட்டேன்...ஹஹஹஹ்ஹ பலனில்லை...ஒரு வேளை இதை அவர்கள் என்னிடமிருந்து பெற எனக்கு தகுதியில்லை என்றே நினைக்கிறேன்...
என் நண்பர்களுக்கு அளிக்க நினைக்கிறேன் ஹஹஹ்ஹ இந்த முறை இதை நான் தருபவர்கள் ஏற்பார்களா? இல்லையா? என்றுத் தெரியாது...

அ.மு.செய்யது வின் "மழைக்கு ஒதுங்கியவை" இதில் ஜுன் 10 ஏனோ இது இன்னும் மனதை பிழிந்துக் கொண்டே இருக்கிறது...இவருக்கும்....
அண்மையில் அப்பாவான என் நண்பர் "என் உயிரே" அபுஅஃப்ஸருக்கு அவர் அன்பு மகளை அந்த வண்ணமலரை வட்டமிடவும்
புரட்சி எழுத்தாளர் துணிச்சல் திலகம் என் தோழி "வீட்டுப் புறா" சக்திக்கும் தர விரும்புகிறேன்......
மூன்று பேருக்குத் தானே என்னும் வலையின் விதிமுறை வேணாமே...... நண்பர்கள் எல்லாருக்கும் தர ஆசைத்தான்(ஆமா பெரிய பொற்காசு மூட்டைப்பாருன்னு முழங்குவது கேட்கிறது....) இருப்பினும்
இதைப் பெற்ற நண்பர்கள் தரப்போகும் அந்த நண்பர்களும் என் நண்பர்களே....
குறிப்பு:- இதை என் விருப்பத்தின் பால் தருகிறேன்...ஏற்றுக் கொள்வது நண்பர்களின் விருப்பம்(அடிப்பட்டதால் எச்சரிக்கை உணர்வு)
ஐவருக்கும் என் வாழ்த்துக்கள்......


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக