வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

பன்றிக் காய்ச்சல் வைரஸ் உலகின் தெற்கு பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"நேச்சர" என்ற பத்திரிகையில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான, ஸ்பானிஷ் காய்ச்சல் (1918-1919), ஆசியன் காய்ச்சல் (1957) மற்றும் ஹாங்காங் காய்ச்சல் (1968 ), பறவை காய்ச்சல் ஆகியவை குறித்து ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த கட்டுரையில், "வைரஸ் காய்ச்சல் பற்றி ஏராளமான தகவல்களை தெரிந்து கொண்டாலும், பதில் தெரியாத சில கேள்விகளும் உள்ளன.

உதாரணமாக, வைரஸ் ஒரு இனத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு பரவுதல், மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுதல், கடந்த கால தொற்று நோய்கள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொற்று நோய் ஆகியவற்றிற்கான காரணிகள் மற்றும் காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த புதிய பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான எச்1 என்1 வைரசை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம், இந்த நோய் ஆபத்தாக மாறுவது மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவுவது போன்றவற்றிற்கு காரணமான மரபியல் மாற்றத்தை கண்டறியலாம். இந்த வைரசை கண்காணிப்பதால், விஞ்ஞான ரீதியாக பல அரிய தகவல்கள் கிடைக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்த சர்வதேச அளவிலான குழு ஒன்று, பன்றிக் காய்ச்சல் வைரசின் தோற்றம் அதன் ஆரம்ப கால வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய பரிணாம ஆய்வு ஒன்று செய்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,"பன்றியின் உடம்பில் பல வைரஸ்கள் சேர்ந்து, அதிலிருந்து பன்றிக் காய்ச்சல் நோய்க்கு காரணமான வைரஸ் உருவாகிறது. அந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி உள்ளது" என்றனர்.

அதே சமயம் இது பறவைக் காய்ச்சல், அல்லது வேறு புளூ ரகங்கள் போல அதிக அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி பெரிதாகப் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்காட்லாந்தில், பன்றிக் காய்ச்சல் நோயால் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் நேற்று முன்தினம் வரை 498 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஸ்காட்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் நிகோலஸ் ஸ்டர்ஜன் கூறுகையில், "பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, கடுமையான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

எனவே ஒருவர் உயிரிழந்திருந்தாலும், பொது மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோயால் மிகவும் குறைந்தளவு அபாயமே நிலவுகிறது2 என்றார்.

பன்றிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 ஆயிரம் பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேவையானப்பொருட்கள்:

பெங்களூர் கத்திரிக்காய் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பெங்களூர் கத்திரிக்காயை, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பயத்தம் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீரை விட்டு, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை வறுத்தெடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வத்ங்கியவுடன், வேக வைத்துள்ள காயையும், பருப்பையும் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும். நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, பின்னர் இறக்கி வைக்கவும்.
நண்பர்களே நம்மிடம் நிறைய கோப்புகள் இருக்கும் அதை நேரடியாக ஜிமெயிலில் சேமிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி சாதரணமாக நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் மென்பொருளை திறந்து உங்கள் ஜிமெயில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுக்கவும். ஒகே கொடுங்கள் பின்னர் Exit கிளிக் செய்து வெளியேறுங்கள். ஒரு சிறிய ஐகான் ஒன்று உங்கள் டாஸ்க் மேனஜரில் அமர்ந்திருக்கும். பின்னர் எந்த கோப்புகள் வேண்டுமோ அதை ரைட் கிளிக் செய்து Backup 2 Email என்பதனை கிளிக் செய்தால் உங்கள் அஞ்சல் முகவரிக்கு நேரடியாக அந்த கோப்பை அப்லோடு செய்துவிடும். ுங்கள் கோப்பு 10 எம்பிக்கு மேல் இருந்தால் அதை தானாகவே Split செய்து அப்லோடு செய்துவிடும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சம் ஜிமெயில் மட்டுமல்லாமல் எல்லாவகை மெயிலும் ஆதரிக்கும் திறமை படைத்தவை. உதராணம் யாகூ, ஹாட்மெயில், ரெடிப்மெயில் போன்றவை சில

இதில் ஜிப் செய்யும் வசது உண்டு.

நேரடியாக போல்டரை தரவேற்றலாம்.

SSL SMTP செட்டிங்ஸ் மாற்ற முடியும்.

Default ஆக மெயில் என்று ஒன்று வைத்துக் கொண்டு இரண்டாவது மூன்றாவது என்று அஞ்சல் முகவரிகள் கொடுக்கலாம்.

மென்பொருள் சுட்டி
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் ‘உலக மனிதாபிமான விருது’ கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ [...]

கருத்துகள் இல்லை: