வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம், மரபியல் கோட்டம், பாரதிபார்க் ரோடு, கோவை 641043 வழாகத்திலும், 16 ந்தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை 641003 தொழில்நுட்ப பூங்கா எண்-4 ன் வழாகத்திலும் தொடர்ந்து கருத்தரங்குகளை வனத்துறை மற்றும் விரிவாக்க கல்வி இயக்கம், த.நா.வே.ப. இவர்களுடன் இணைந்து நடத்தி வருகின்றது.

இந்த மாதம் 6 ந்தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து திரு எஸ்.கே. சண்முகசுந்தரம், ஐ.எப்.எஸ்., துணைவனப்பாதுகாவலர் அவர்கள் சந்தன மர சாகுபடி பற்றியும் அதன் சட்ட திட்டங்களைப் பற்றி விபரமாக விளக்கம் அளித்தார். சந்தன மரம் வெட்டும் போது 20 சதம் அரசுக்கும், 80 சதம் மர சொந்தக்காரருக்கும் அளிக்கப்படும். ஆனால் வரும் காலத்தில் சட்டங்கள் மேலும் தளரலாம். ஆஸ்திரேலியாவில் ஒரு சந்தன மரத்திற்கு நான்கு பக்கத்திலும் அகத்தி மரம் வளர்க்கிறார்கள். 13 ஆண்டுகளில் முதிர்வடையும் மரங்களை வளர்க்கிறார்கள். இது போன்று மேலும் பல தகவல்களைச் சொன்னார்.

அடுத்து திரு.ஏ.ஜொசப் ரெக்ஸின், பி.எஸ்சி., இயக்குனர் TIST Tree Planting India (P) Ltd., அவர்கள் கார்பன் வணிகம் பற்றி விளக்கமாகச் சொன்னார். பின் திரு. மு.அ.அப்பன், நிறுவனர் இயற்கை வாழ்வு மையம், குலசேகரப்பட்டினம், தூத்துக் குடி அவர்கள் ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்ற இயற்கை உணவு பற்றி சிறப்பான விளக்கம் அளித்தார். அவரே உதாரணமாக சமைக்காத உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். பின் சித்த மருத்துவர் திரு.திருமலைசாமி அவர்கள் ஓரிதழ் தாமரை பற்றி விளக்கம் அளித்து அதன் மருத்துவ குணங்களை எடுத்துறைத்தார். மதிய உணவு சமைக்காத உணவு வகைகள்.
அவுல், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பேரிட்சை, தேங்காய், வெள்ளரி, கேரட் இயற்கை சூப் முதலியன மட்டும் கொடுக்கப் பட்டது.

பிற்பகல் வைத்தியர் நாதாநந்த சுவாமிகள் மூலிகைகள் எவ்வாறு வைத்தியத்தில் பயன் படுகின்றன என்று விளக்கங்கள் அளித்தார். பின் சித்த மருந்து தயாரிக்கும் தென் மாவட்ட அம்மையாரும் விளக்கத்துடன் மருந்துகளை விற்பனை செய்தார். அத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.

மூலிகை கருத்தரங்கு.
சென்ற 16-06-2009 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்க கல்வி இயக்கம் உதவியுடன் இச்சங்கம் மூலிகை கருத்தரங்கு தொழில் நுட்ப பூங்கா எண்-4 ல் காலை பத்து மணிக்கு மேல் தொடங்கிற்று. இச்சங்க தலைவர் தேவராஜன் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இலவசமா ஏற்பாடு செய்திருந்த பண்ணைச் சுற்றுலா பாண்டிச்சேரி ஏரோவில் சென்று வந்தது (13,14, 15-6-2009) பற்றி அனுபவங்களைச் சொன்னார். அளவாக 20 பேர் மட்டுமே சென்று வந்தனர். பின் திரு.கணேசன், திருநெல்வேலி, மூலிகை ஏற்றுமதியாளர் அவர்கள் திருநெல்வேலி சென்னா, நித்தியகல்யணி, துளசி, சர்கரைத் துளசி, கண்வெளிக்கழங்கு, அஸ்வகந்தா, ஆர்கானிக் மஞ்சள் போன்றவைப் பற்றிக் கூறி அவை ஆர்கானிக்கில் விளைந்ததற்கான சான்றும் தேவை என்றார். ஒப்பந்த முறையில் சாகுபடிக்கு ஏற்றுக் கொள்வதாக க்கூறினார். பின் அதற்கு முனைவர் கே.இராஜாமணி பிஎச்டி, துறைத்தலைவர் வாசனை பயிர் மற்றும் மலைத்தோட்டத் துறை, TNAU., அவர்கள் அந்த மூலிகைகள் குறித்து விளக்கம் அளித்து, அதை விளைவிப்பது பற்றிக் கூறி, ஆர்கானிக் சான்று பெருவது பற்றிக் கூறினார். கே.ஸ்ரீதர்புதூர் அமுதம் இயற்கை உணவகம் அமைத்திருப்பது பற்றிக் கூறி அவர் இயற்கை சூப் அளித்தார். திருமதி கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்கள் அஸ்வகந்தா சூப் மற்றும் டீ கொடுத்தார். மதிய உணவுக்குப்பின் சுற்றுலா சென்றவர்கள் பயனடைந்ததைப் பற்றிக் கூறினார்கள். டாக்டர் சித்திரா அவர்கள் பல்கலைகழகத்தில் மூலிகைக் குடி நீர் தயார் செய்து வெற்றியடைந்தது பற்றிக் கூறினார். பதிமுகம் துண்டுப்பவுடர் .5 கிராம் திப்பிலி காய், வேர் பவுடர் .5 கிராம் ஒரு லிட்டர் குடி நீரில் அரை மணி நேரம் வைத்திருந்தால் நல்ல குடிநீர் தயார் என்று கூறினார் விலை மிகவும் குறைவு. பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. இது 4 வது கருத்தாய்வுக் கூட்டம்.
-----------------------------------------------(தொடரும்)

தனது வளர்ப்பு பிராணியான நாயின் உடல்நலத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால் நாயின் உடல் எடை கூடியதன் விளைவாக உரிமையாளருக்கு அதற்கு மேல் பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது நடந்தது இங்கிலாந்தில்...

Border Collie இனத்தைச் சேர்ந்த Taz...

ஐந்தே வயதான Taz எனப்படும் இந்த நாயானது border collie இனத்தை சார்ந்தது.
இந்த வளர்ப்பு நாயின் சொந்தக்காரர் 63 வயதான ronald West என்பவர்.
நாயின் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காமல் உணவுமுறையை பழக்கியதால் அந்த நாயின் உடல் எடை இருக்க வேண்டிய அளவிற்கு இருமடங்காக இருந்தது.

தகவல் அறிந்தவுடனே Brighton and Hove City Councilஆல் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
அப்போது நாயின் எடை 88 றாத்தலாக இருந்ததாம்.

இதனால் Ronald West குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் அடுத்த 12 மாதங்களுக்கு எந்த ஒரு வளர்ப்பு பிராணியையும் வளர்க்க முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் படி மிருக நல அதிகாரிகள் Brightonஇலுள்ள Westஇன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

"நான் ஒரு வளர்ப்புப் பிராணி விரும்பி எனவும் தனது நாயுக்கு சிறந்ததை தர வேண்டும் என முடிவு செய்து செயற்பட்டதன் விளைவே இது" எனவும் West கூறியுள்ளார்.

தற்போது Tazஇன் எடை 58 றாத்தலாக குறைந்துள்ளதாம்.
முதலில் தொடர்ந்து 10 நிமிடம் கூட ஓட முடியாமலிருந்த Taz தற்போது ஒரு மணிநேரம் வரை ஒடுகிறதாம்...

தற்போது Taz வளர்ப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாம்..
ஆனால் Westஇடம் அல்ல... :-)
Councilக்கு West அபராதமாக £1,477 செலுத்த வேண்டும்.

நம்ம நாடுகள்ல எல்லாம் மிருகங்களை வதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா????
தெரியாதா????
விடை
|
|
|
|
|
|
ஒன்னுமே நடக்காது...
:-(

வருத்தம் தான்...

அன்புடன்,
1.பாராட்டும் அங்கீகாரமும் இல்லாமல் நிறைய பேரின் திறமை வெளியே தெரியாமலே போயிருக்கு. சின்னக் குழந்தைக்குக் கூட பாராட்டினா மேலும் ஊக்கத்தோட வேலைப் பாக்குது. ஓவியர்கள்ல ஆதிமூலம்,மருது போன்றவங்கல்லாம் நவீன ஓவியத்துல நிறைய பேர் எடுத்தவங்க. ஜெ...,ம.செல்லாம் வெகுஜன பத்திரிகைகள்ல பெரும் உயரங்களைப் பார்த்தவர்கள்.

சமீபத்தில் பாலு சத்யாவின் அசோகமித்ரன் ஒரு நேர் காணலில் -

கேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது?

அசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்- என்று பதில் அளித்திருந்தார்.

எனக்கு ராமுவின் படங்கள் நன்றாக நினைவிருக்கிறது..நான் சிறுமியா இருந்தப்பலருந்து வரைஞ்சவர். அவ்ர் ஓவியங்கள்ல அழுத்தமன கோடுகள் இருக்கும். முகங்கள் சதுர அமைப்பில் லேசான இறுக்கத்துடன் அமைந்திருக்கும்.அவரைப் பற்றி அவ்ளவாக செய்திகளோ.பேட்டிகளோ நான் படித்ததில்லை என்பதால அசோகமித்ரனின் இந்த நினைவூஉட்டல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நம்முள் எத்தனைப் பேர் நம் கதைகளுக்குப் படம் போடும் ஓவியர்களுக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் போட்டிருக்கிறோம். அல்லது அவர்கள் தொலைப்பேசி எண்களைப் பத்திரிகை அலுவலகத்தில் பெற்று ஓவியங்கள் பற்றி பேசியிருக்கிறோம்?

இலக்கிய பீடங்களிலிருந்து இறங்கி மனிதர்களாய் மாறுவோமே?

2.சமீபத்தில் மாசிலாமணி பாடம் பார்த்தேன். கொஞ்சம் தில்லுமுல்லு..கொஞ்சம் விஜய்ப் படங்கள்னு புரட்டி எடுத்த ஒரு புளியோதரையாய் இருந்துச்சு. என்னய்யா குரல் அந்தப் பையனுக்குனு ஒரு ஆள் நகுலனின் குரலைப் பத்தி விசனப் பட்டார்.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்:

அதென்ன ஹீரோனா அழகான தோற்றம்,கம்பீரமான குரலோடத் தான் இருக்கணுமா? சன் பிக்சர்சின் இந்த நூற்றாண்டு சாதனை நகுலனைப் பிரபலமாக்கியதா தான் இருக்கும்.

படத்தை பொறுமையா பாத்து வரி பிசகாம பின்னூட்டம் போடுறவங்களுக்கு டி.ஆர். வச்சு நான் எடுக்கும் பக்கிரிசாமி பட பஞ்ச் டயலாக் (என் பேரு டி.ஆரு.என்னை மிஞ்ச இங்க யாரு.செருப்புனா வேணும் வாரு,தண்ணிக்கு போடணும் போரு,தண்ணிக்கோ போகணும் பாரு..உலகம்னா தமிழ்ல பாரு.இப்பதமிழ்ல பேசினா புரியுமா பாரு..)அடங்கின சி.டி. பரிசு.

3.நெலலையோட ரெட்டை மேம்பாலம் ஒரு தனி உலகம். அதுக்கு கீழே வீடில்லாதவங்க மேம்பால சுவற்றுல பாலன்ஸ் பண்ணி தூங்கிட்டு இருப்பாங்க. கஷ்டப்பட்டு எண்ணை கேனோட வண்டியை இழுத்து போயிட்டு இருப்பாங்க.மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் அங்கும் இங்கும் அலைந்தபடியே இருப்பாங்க.

என்ன ஆயிருச்சுனா, மேல்பாலத்து கைப்பிடி சுவர் இடிஞ்சி அதுலருந்து கல் கீழே விழுந்து கீழே போய் கொண்டிருந்த மக்கள் தலைல விழுந்து தயல் போடுற அள்வுக்கு பாதிபைக் கொடுத்துச்சு.கலை நிகழ்ச்சில ஒரு நாள் சொன்ன உடனேயே அதை சரி பண்ணிட்டாங்க.

அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

4. பழைய விகடன் ஒண்ணுல இருந்த சிறுகதை ஒண்ண வாசிச்சேன். மாதவனை நான் வெறுக்கேன்னு ஆரம்பிச்ச கதை,ஏன் மாதவனை வெறுக்கிறேன்...ஏன்னா அவர் மொபைல் வாங்க சொல்றார்.மொபைல்லால பிரச்னை வருதுனு ரொம்ப அழகா அந்த கதை சொல்லுது. ஒரே ஒரு நாள் மொபைல வீட்டுல வச்சிட்டு நிம்மதியா இருந்துட்டு வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் மிஸ்டு கால் இல்லாம இருக்கிறதப் பாத்து..அப்படின்னா யாருமே நம்மலைத் தேடலையானு பதறி..

கதை எழுதியது யாரா இருந்தாலும் அவருக்கு ஒரு குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் பார்சல்.

5. அப்புறம். வாசிச்சுமா போனமானு இல்லாம தமிழ்மணம் கருவிப் பட்டைல மேல தூக்கி இருக்கிற கைல குத்தி, தமிழிஷ்ல வோட்ல குத்திட்டுப் போவல...டி.ஆர் நடிச்ச முத படத்துலருந்து சி.டிலாம் வீட்டுக்கே அனுப்பி வச்சு மாற் மாறி பாக்க வச்சிறுவேனில்ல..
பன்றிக் காய்ச்சல் வைரஸ் உலகின் தெற்கு பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"நேச்சர" என்ற பத்திரிகையில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான, ஸ்பானிஷ் காய்ச்சல் (1918-1919), ஆசியன் காய்ச்சல் (1957) மற்றும் ஹாங்காங் காய்ச்சல் (1968 ), பறவை காய்ச்சல் ஆகியவை குறித்து ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த கட்டுரையில், "வைரஸ் காய்ச்சல் பற்றி ஏராளமான தகவல்களை தெரிந்து கொண்டாலும், பதில் தெரியாத சில கேள்விகளும் உள்ளன.

உதாரணமாக, வைரஸ் ஒரு இனத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு பரவுதல், மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுதல், கடந்த கால தொற்று நோய்கள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொற்று நோய் ஆகியவற்றிற்கான காரணிகள் மற்றும் காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த புதிய பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான எச்1 என்1 வைரசை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம், இந்த நோய் ஆபத்தாக மாறுவது மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவுவது போன்றவற்றிற்கு காரணமான மரபியல் மாற்றத்தை கண்டறியலாம். இந்த வைரசை கண்காணிப்பதால், விஞ்ஞான ரீதியாக பல அரிய தகவல்கள் கிடைக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்த சர்வதேச அளவிலான குழு ஒன்று, பன்றிக் காய்ச்சல் வைரசின் தோற்றம் அதன் ஆரம்ப கால வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய பரிணாம ஆய்வு ஒன்று செய்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,"பன்றியின் உடம்பில் பல வைரஸ்கள் சேர்ந்து, அதிலிருந்து பன்றிக் காய்ச்சல் நோய்க்கு காரணமான வைரஸ் உருவாகிறது. அந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி உள்ளது" என்றனர்.

அதே சமயம் இது பறவைக் காய்ச்சல், அல்லது வேறு புளூ ரகங்கள் போல அதிக அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி பெரிதாகப் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்காட்லாந்தில், பன்றிக் காய்ச்சல் நோயால் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் நேற்று முன்தினம் வரை 498 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஸ்காட்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் நிகோலஸ் ஸ்டர்ஜன் கூறுகையில், "பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, கடுமையான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

எனவே ஒருவர் உயிரிழந்திருந்தாலும், பொது மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோயால் மிகவும் குறைந்தளவு அபாயமே நிலவுகிறது2 என்றார்.

பன்றிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 ஆயிரம் பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: