வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02



More than a Blog Aggregator

by ANGEL MAYA

சில சொந்த வேலைகளினால் இன்று பதிவிட முடியவில்லை

புரிந்து கொண்டமைக்கு நன்றி

 

கவனிக்க வேண்டிய பங்குகள்

 

REL CAP ABOVE 390 TARGETS 410, 435


HDIL AB 90 TAR 100


FOLLOWINGS ARE HAVING CHANCE TO MOVE 4 TO 5 % FROM THIS RATE WITH 1% S/L 

PUNJLLOYD AB 95


SCI AB 81


SUZLON AB 47


THESE ARE LOOKS GOOD ABOVE THIS RATE,


ALL ARE POSITIONAL BASED 


More than a Blog Aggregator

by rammalar
A

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகருக்கு பிரச்சாரத்துக்குச் சென்றால் தனது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையில், தற்போது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்நகருக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா செல்லாமல் தவிர்த்துவிட்டாராம்!


குடிதண்ணீர் பற்றாக்குறை கொடுமை நிலவுகின்ற மாவட்டம் சாம்ராஜ் மாவட்டம். கடந்த 30 ஆண்டுகளாக எந்த முதலமைச்சரும் அம்மாவட்டத்திற்குள் செல்லவேயில்லை. ஹெச்.டி.குமாரசாமி (ஜனதா தளம்-எஸ்) முதல்வர் பதவியின் இறுதிகாலத்தில் அங்கு சென்றார்.


அதன்பின் அவர் முதல்வர் பதவியை இழந்தார். சாம்ராஜ் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தால் எஞ்சியுள்ள பாஜக கட்சியின் ஆட்சியும் பறிபோய்விடுமோ என அஞ்சி அங்கு போக மறுத்துவிட்டார்.


மிகவும் ஏழை மக்கள் வாழக்கூடிய அப்பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. வேலைவாய்ப்பு ஏற்படவில்லை. குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. தங்களின் குறைகளை அமைச்சர்களிடம் முறையிட, இங்கு அவர்கள் இந்தப் பகுதிக்கு வரமாட்டார்களா என ஏங்கித் தவித்துவருகின்றர்.


மக்களின் பிரச்சனையை விட, தமது பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில், மூடநம்பிக்கை கொண்ட அரசியல் வாதிகள் அங்கு செல்வது கிடையாது. மூடநம்பிக்கை வலுப்பெறும் வகையில், 1980ல், இந்நகருக்கு வருகை தந்த தேவரா அர்ஸ், தமது முதல்வர் பதவியை இழந்துள்ளார்.


குண்டு ராவ் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு அங்கு சென்று வந்தவுடன் அவர் முதல்வர் பதவியை இழந்துள்ளார். எனவே சாம்ராஜ்நகர், முதல்வர்களின் சுடுகாடாகத் திகழ்கிறது அங்கு சென்றாலே பதவியை இழந்துவிடுவோம் என்று நம்பி அஞ்சுகின்ற முதல்வர்கள், அந்நகரில் உள்ள மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கு அஞ்சாமல் உள்ளார்களே.


விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியடைந்த இக்காலத்தில் இதுபோன்ற முட்டாள் தனமும் நிலவுகிறது. இதையும் ஆளுவோர்கள் நம்பத்தான் செய்கின்றனர் என நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது.


இதுபோன்ற மூடநம்பிக்கையை நம்பும் அரசியல்வாதிகள், குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதியில் சாதாரண ஏழைக்குடிமகனும் சுயேட்சையாக நின்றாலும் வெற்றிபெறுவோம் என நம்பிக்கையுடன் ஜோதிடர்கள் கூறுவார்களா?

402px-Léon_poster

ஒரு புரபஷனல் கொலைகாரனுக்கும், பன்னிரெண்டு வய்து சிறுமிக்கும் நடக்க்கும் இமோஷனல், திரில்லர். லியோன் ஒரு ஹிட்மேன் அவன் நியுயார்கில் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறான். எந்த விதமான பந்த பாசத்துக்கும் அடிபணியாதவன். அவனுகென்று அவன் வளர்க்கும் செடியை தவிர எந்தவிதமான உறவுகளும்  இல்லாதவன்.
799px-Leonoutside2

ஒரு நாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் மடில்டா என்கிற பெண்ணை சந்திக்கிறான். அவளது அப்பா ஒரு தில்லாலங்கடி டிரக் என்போர்ஸ்மெண்ட் ஆபீஸர் ஸ்டான்பீல்டின்  கையாள் அவர் கொடுக்கும் போதை பொருட்களை ம்றைத்து  சப்ளை செய்யபவன். ஒரு நாள் சரக்குகளை தனக்கு எடுத்து வைத்து விற்க முயற்சிக்க, அது தெரிந்து அவனின் குடும்பத்தையே கொன்றுவிடுகிறான். அந்த நேரத்தில் மளிகை கடைக்கு போயிருந்த மடில்டா மட்டும் தம்பிக்க, லியோனின் ப்ளாட்டி அடைக்கலமாகிறாள். தன்னுடய சின்ன தம்பியை கொன்ற் ஸ்டான்பீல்டை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். இவர்களுக்குள் உறவு மலர்ந்ததா..? மடில்டா பழிவாங்கினாளா? லியோனுக்கு என்ன ஆயிற்று..? என்ற கேள்விகளுக்கு உயிரோட்டமான திரைக்கதை அமைத்து தந்திருக்கிறார்கள்
t51896eaone

மடில்டாகவரும் 12வயது கருமை கண்களுடய நடில்லாவின் நடிப்பும், அழகும் நம்மை ரொம்ப நாளைக்கு  நினைவில் துறத்தும். லியோனாக வரும் ஜீன் ரினோவின் நடிப்பும் அருமை. படத்தில் அவர் ஒரு வசனம் சொல்வார். மடில்டா லியோனிடம் உனக்கு அந்த செடி ரொம்ப பிடிக்குமா ? என்று தொட்டியில் வளர்க்க படும் செடியை பற்றி கேட்க, அதற்கு லியோன் " ஆம்.. இந்த  செடி என்னை போல..  இதற்கும் வேர்கள் கிடையாது" எனபது போன்ற அருமையான வசனங்கள் ஆங்காங்கே இயல்பாய் வருகிறது.

225px-Natalie_Portman
அதே போல் லியோனுக்கு மடில்டாவின் மேல் வரும்  தந்தையுணர்வை வெளிபடுத்த தெரியாமல் வெளிபடுத்தும் காட்சிகளும், மடில்டா லியோனிடம் ஏற்பட்டுள்ள உறவை வெளிபடுத்த தெரியாமல், அவனை காதலிப்பதய் சொல்லும் காட்சிகளாகட்டும்,  ஜீன் கெல்லியை தவிர வேறு யாரையும் தெரியாத லியோனிடம் மடோனா போல் வேடமணிந்து கொண்டு விளையாடும் காட்சிகளாகட்டும், க்ளைமாக்ஸில்  நடக்கும் சண்டைகாட்சிகளாகட்டும் இவர்களின் நடிப்பும், Theirry Arbocastன் ஒளீப்பதிவும், Luc Bessonனின் இயக்கமும் superb..
180px-Luc-Besson-Taken

இயக்குனர் நிகிதா, டிரான்ஸ்போர்டர், லேட்டஸ்டாய் டேக்கன் போன்ற படங்களை இயக்கிய பிரபலம்.

LEON – கல்லுக்குள் ஈரம்


Blogger Tips -பெ'ண்'களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..



More than a Blog Aggregator

by கார்க்கி


   நேற்றுதான் கவனித்தேன். ஹைதை எங்கும் நடிகர் பிராபசின் புதிய படத்திற்கான ஹோர்டிங்க்ஸ் ஆக்ரமித்திருந்தது. பார்த்த உடனே தெரிந்து விட்டது அது பில்லாவின் ரீமேக் என்று. படு ஸ்டைலாக இருப்பதாக அலுவலகம் முழுவது பேச்சு பரவ, ஆர்வத்துடன் இணையத்தில் மேய்ந்தேன்.ப்ச். அஜித்தின் கால் தூசிக்கு கூட இல்லை.


சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களுக்கு பிரபாஸை இதற்கு முன் அதிகம் பிடித்ததில்லையாம். ஆனால் இந்தப் படத்தில் சூப்பராக இருப்பதாக சொன்னார்கள். மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்கள் கூட பாராட்டு பத்திரம் வாசித்தார்கள். பெண்களிடம் சர்வே நடத்தலாம் என்று நினைத்தேன். ஆண்கள் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு இல்லை என்றாலும் அங்கேயும் கணிசமான வாக்குகள் வாங்கினார் பிரபாஸ்.

இன்று நான் என் தலையை பிய்த்துக் கொண்டேன். பின் மீண்டும் அடுத்த ரவுண்ட் சென்றேன். இந்த முறை நம்ம தலயின் படஙக்ளை அவர்களுக்கு காண்பித்தேன். அரண்டு விட்டார்கள். அவர்களுக்கு அஜித்தை தெரியுமாம். ஆனால் இந்த ஸ்டில்களை பார்த்ததில்லை என்றார்கள். தல தலதான்.




  ஹிந்தியில் ஷாருக்கு கலக்கி இருப்பார். ஆனாலும் நான் தேடிப் பார்த்த ஸ்டில்களில் அவரால் அஜித்தை தோற்கடிக்க முடியவில்லை. நான் அஜித்தை ரசித்தது பில்லாவில் அவர் நடந்த போதுதான். ச்சே பழக்க தோஷங்க. பில்லாவில் அவர் நடித்த போதுதான். Really thala rocks in Billa.



  நான் ஆறாவது படித்த போது ஆலமரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை படித்துவிட்டு தேர்வுக்கு சென்றேன். ஆனால் தேர்வில் பசு மாடு தன் வரலாறு கூறுதலை கேட்டிருந்தார்கள். சற்றே யோசித்துவிட்டு ஆலமரத்தை பற்றி சொல்லிவிட்டு "இத்தகையை சிறப்பு வாய்ந்த என்னில்தான் பசு மாட்டு கட்டப் பட்டிருக்கும்" என்று முடித்துவிட்டேன்.

  அதேப் போல்தான் இந்தப் பதிவும்...

(மீதியை சென்சார் செய்துவிட்டார்கள். என்னவாக இருக்கும் என்று சரியாக யூகிக்க முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் முயற்சி செய்யுங்களேன்.)

கருத்துகள் இல்லை: