வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

பொருளீட்டும் வேட்கையால்
நலத்தைத் தொலைத்து
தொலைந்ததை மீட்க
இழப்பது ஈட்டிய பொருளை!
ஆத்தூர், மே 29 : தமிழ்நாடு காடு வளர்ப்பது திட்டத்தில் மோசடி செய்த ரேஞ்சர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.  பணியில் அலட்சியம் காட்டிய வன கோட்ட அலுவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆத்தூர் இடைவடுகாடு வனச்சரகத்திற்கு, காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்யப்பட்டது.
சென்னை, மே 29 : தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் மாதம் 17-ஆம்  தேதி துவங்கும் என தமிழக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.
சென்னை, மே 29 : தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் மாதம் 17-ஆம்  தேதி துவங்கும் என தமிழக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கு பாராஉஷார் செய்து நொந்து போயிருக்கும் போலீசாருக்கு இந்த சினிமாவைப் பார்த்து அதுபோல் காப்பி அடித்து காதல் பண்ணும் பெண்குலங்கள் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியவில்லை.

தினசரி இதுபோல் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் "காதல் பன்ணிட்டேன், பெற்றோரை ஏமாற்றி சேர்த்து வையுங்கள்" என்று கிளம்புகிறார்கள். இல்லையெனில், "உல்லாசமாக" இன்னாருடன் இருந்தேன் (யாருடன் இருந்தாளோ!), அவனை கட்டாயப் படுத்தி கட்டி வையுங்கள் என்று ஒரு பெரிய கோஷ்டி பெண்கள்.

போலீசார் பாடு பாவம் அய்யா!

கீழ்க்காணும்ச் செய்தி இதுபோல் தினந்தோரும் வெளிவரும் டசன் கணக்கான செய்திகளில் ஒரு சாம்பிள்தான்!

திருமணத்துக்கு 2-நாட்களுக்கு முன்பு காதலன் மாயம் புறநகர் கமிஷனரிடம் காதலி புகார் ஆலந்தூர், மே. 29- 2009.

திருமணம் நடைபெற 2 நாட்கள் இருந்த நிலையில் காதலன் மாயமானதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் காதலி புகார் செய்தார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ஒரு புகார் மனு தந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

காதல் சென்னையில் உள்ள கால்சென்டரில் நான் பணிபுரிகிறேன். என்னுடன் ஒன்றாக பணிபுரியும் திருச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் செந்தில்குமாரின் பெற்றோர் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் செந்தில்குமார் சம்மதத்துடன் சென்னையில் 28-ந் தேதி (நேற்று) திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்பாடு செய்தோம். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக செந்தில்குமார் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர் தங்கியிருந்த விடுதியிலும் சென்று பார்த்தோம். செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டார். திருமணத்திற்கு 2 தினங்களுக்கு முன்பு மாயமாகிவிட்ட செந்தில்குமாரை மீட்டு எங்கள் திருமணத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் ஜெயலட்சுமி கூறியிருந்தார்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மடிப்பாக்கம் போலீசாருக்கு புறநகர் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டார். மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கரிகாலன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சிக்கு விரைந்தனர்.

அங்கு இருந்த செந்தில்குமாரின் தந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது செந்தில்குமார் திருச்சிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து `திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு தலைமறைவான காதலனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை' என புதுமணப்பெண் ஜெயலட்சுமி போலீசாரிடம் எழுதிக்கொடுத்து விட்டு சென்றார். காதலன் ஓடியதால் திருமணம் நின்று போனது.



ஆடவர் என்ன விலை? என்ன விலை?
      மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம்
காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல
      காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர்
வீரம் பேசும் ஆண்களுக்கு
      பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
சோரம் போவது நாங்கள் அல்ல
      வீரம் பேசும் ஆண்கள் தான்


உடல் விற்று உலாவும் பெண்களே
      உலகம் அல்ல – ஆனால்
தம்மை தாமே பேரம் பேசும்
      ஆண்களும் அருமை அல்ல
வீட்டுக்குள்ளே கூடுகட்டி
      கூட்டினுள் எமை அமர்த்தி
நாட்டுக்குள் ஆண்மை பேசும் ஆடவரே
      உம்மை பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
நாளை நாம் உங்கள் வீட்டுக்கு வருவோம்
      அங்கே நீங்கள் சமைந்திருங்கள்
காளை உந்தன் ஆண்மை பார்க்க
      காசுப் பொதிகள் எங்கள் கையில் இருக்கு
சேலை கட்ட தெரியாவிட்டால் தேற்றிக் கொண்டு
      ஆடை மாற்று
சேதி சொல்ல ஆள் வருவார் அதுவரை
      காத்திருங்கள்


நான்கு பேரை கேட்டு உந்தன்
      பெயரை நாங்கள் அறிந்த பின்பு
சேதி சொல்ல ஆள் வருவார்
      அதுவரை நீங்கள் காத்திருங்கள்
கேடு கெட்ட ஆண்களுக்கு
      கோடு போட்டு வீட்டில் வைக்க
பெற்றோர் உமக்கு எச்சரிக்கை
      பொறுப்போடு கண்காணிக்க


நாளை நம்மவர் உன்வீடு வரும்போது – நீ
      தீயவன் எனக் கேட்டால்
கல்யாணச் சந்தையில் உனக்கு கால் ரூபா கூட
      கொடுக்க மாட்டோம்
காலம் தோறும் காத்திருந்து
      கந்தலாகி மனம் உடைந்து
மானங் கெட்டு மனிதர்களிடையில்
      தீய சொற்களுக்குள்ளாகி
கோலம் மாறி களையிழந்து
      காளை என்னும் செருக்கிழந்து
மூளை கெட்டு முதுமை பெற்று
      மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு




- நா. பகீரதன் -

கருத்துகள் இல்லை: