ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும்


More than a Blog Aggregator

by மலைநாடான்
என் காலடி மண்ணைகந்தகத் தீயில்சுட்டவர் நீங்கள்ஒட்டச் சொல்கின்றீர் ?
வெகு நாட்களாக அயன் படப்பாடல்கள் கணினியில் இருந்தாலும் இன்று வரை கேட்டதில்லை.
இன்று எதேச்சையாக வின்னாம்பில் (winamp) சேர்த்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.
அமைதியாக ஆரம்பித்து முழுமையாக மனதில் நிறம்பி அளுமை செயதது ஒரு பாடல்!!
அட!! இது நன்றாக இருக்கிறதே என்று பாடலை ரிப்பீட்டில் போட்டவன் தான்!! பாடல் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டே இருக்கிறது.
பல நாட்களுக்கு பின் இப்படி ஒரு பாடலை கேட்கிறேன்.மனதிற்கு அமைதி தந்து ஒற்றடம் தரவல்ல பாடல்!! இதை போன்ற பாடல்கள் புனையும் அதை உருவாக்கும் கலைஞர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் கூடுகிறது.நம்மை போல காதலில் இல்லாதவர்கள் கூட ஒரு நிமிடம் காதல் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்து பார்க்கக்கூடிய உணர்வுகளை தரக்கூடிய பாடல்!! காதலர்கள் எல்லாம் ஏன் இப்படி கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள் என்று புரிந்துக்கொள்ள உதவும் பாடல்!!
ஒரு அழகான பாடல்!
இந்தப்பாடல் கேட்டதில் இருந்து படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசை கூடுகிறது.

நீங்களும் கேட்டுதான் பாருங்களேன்.




Get Your Own Hindi Songs Player at Music Plugin




பாடல் வரிகள்:
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே(விழி மூடி யோசித்தால்)


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே
ஒ ..ஒ ..ஒ ..(விழி மூடி யோசித்தால்)



ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும் (விழி மூடி யோசித்தால்)

கருத்துகள் இல்லை: