ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

தமிழர் மீதான இனப்படுகொலையை நீதியின் முன் கொணர்ந்து, தீர்வாக தனித்தமிழீழத்தை கோரும் ஜனனியை ஆதரியுங்கள்: பிரி. தமிழர் பேரவை
[ சனிக்கிழமை, 30 மே 2009, 12:08.14 PM GMT +05:30 ]
ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜன் ஜனநாயகம் (ஜனனி) அவர்கள் வெற்றிபெற பிரித்தானிய தமிழர் பேரவை தமது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவிக்கின்றது. 
ஜனனி, தமிழரின் மீதான இனப்படுகொலையை நீதியின் முன் கொண்டுவந்து அதற்குத் தீர்வாக தனித் தமிழீழத்தை கோரும் அமைப்பில் அங்கம் வகிப்பவர், பேச்சாளர், ஊடகவியலாளர், மனித உரிமை ஆர்வலர். 

பிரித்தானிய தமிழர் பேரவையானது தமிழ்மக்களின் கெளரவத்துடன் கூடிய நீதிக்கும் சமதானத்திற்கும் பாடுபடும் அமைப்பாகும். பேரவையின் கொள்கைகளும் ஜனனியின் கொள்கைகளும் ஒத்த நோக்கம் கொண்டவையாகக் காணப்படுகின்றது. 

பிரித்தானிய தமிழர் பேரவையானது பிரித்தானிய அரசியலில் நடுவு நிலைமைக் கொள்கையோடு அனைத்துக் கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்றுகின்றது. ஆனால் ஈழத்தில் தமிழ்மக்கள் பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளதனால் பேரவையானது பெரும் துயரடைந்துள்ளது. இந்நிலையில் ஒரு நேர்மையான தமிழ் வேட்பாளரை ஆதரிப்பது காலத்தின் தேவையாகுமென பேரவை கருதுகின்றது. 

புலம் பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பாவின் அரசியலில் ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கு இத்தேர்தல் வழிவகுக்கும். 

பிரித்தானிய தமிழர் பேரவையானது தமது உறுப்புனர்கள் அனைவரையும் ஜனனி அவர்களின் வெற்றிக்குப் பாடுபடுமாறு கேட்டுக்கொள்வதோடு அனைத்து தமிழ் உறவுகளும் தேர்தலில் ஜனனிக்கு வாக்களிப்பதோடு உங்கள் வேற்று இன நண்பர்களையும் வாக்களிக்க வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றது. 

பிரித்தானிய தமிழர் பேரவை

மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து பிரபாகரனின் தந்தையான வீரசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயான பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.

பிரபாகரனின் தந்தை வழங்கியுள்ள தகவல்களில் கூறியுள்ளதாவது, நாம் திருச்சியில் இருந்து 2003ம் ஆண்டு வன்னி வந்தோம். வல்வெட்டித்துறையில் வாழ விரும்புகின்றோம் என பிரபாகரனிடம் கூறியபோதும் புலிகள் எம்மை அங்கு அனுமதிக்கவில்லை. விசுவமடுப் பிரதேசத்தில் வாழ்ந்தோம். ஆனால் பிரபாகரனின் வீட்டில் இருக்கவில்லை. நாம் எமது மகனை அடிக்கடி சந்திக்கவில்லை. எதாவது நிகழ்வுகளின் போது சந்திப்போம். புதுக்குடியிருப்பில் சண்டை ஆரம்பமானபோது பிரபாகரன் வாகனம் ஒன்றை அனுப்பி புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். அங்கு நாம் மக்களுடன் வாழ்ந்தோம்.

மே மாதம் 17ம் திகதி யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து இறுதியாக வெளியேறிய மக்களுடன் வட்டுவாக்கல் பாலமூடாக முல்லைத்தீவை வந்தடைந்தோம் என தெரிவித்துள்ளார்.

இடைவெளியின்

இருள் நீண்ட தடங்கள்

சுருங்கி

சூன்யத்தின் விளிம்பில்

நீங்களும் நானும்

சந்திக்கும் கணம்..

பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !

கருத்துகள் இல்லை: