வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

வவுனியா நிவாரணக் கிராமத்தில் பொதுமக்களுடன் தங்கியிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் படையினரால் இனங்காணப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை தெரிந்ததே.

பிரபாகரனின் தந்தையான 84வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை தாயாரான 78வயதுடைய வல்லிபுரம் பார்வதி ஆகிய இருவருமே வலயம் நான்கிலுள்ள மெனிக்பம் நிவாரணக் கிராமத்தில் வைத்து படையினரால் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 59வது படைப்பிரிவினரை நாடி இறுதியாக தப்பி வந்த பொதுமக்கள் கூட்டத்துடனேயே இவர்களும் மேமாதம் 17ம் திகதி முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்துள்ளனர். பிரபாகரனை விட்டு பிரிந்து தனியாகவே தாம் வாழ்ந்து வந்ததாகவும், அவருடைய கொள்கைளுக்கும் தமக்கும உடன்பாடு கிடையாதெனவும் பெற்றோர் படையினரிடம் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனது பெற்றோருக்கு அங்கே தங்கியிருக்கும் ஏனைய பொதுமக்கள் மூலம் ஏற்படக்கூடிய அநாவசிய தொந்தரவுகளை தவிர்க்கும் வகையில் அவர்கள் தனித்து வைக்கப்படவிருப்பதாகவும் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

தமது மகனான பிரபாகரன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்தார் என்பதனை பிரபாகரனின் பெற்றோர் பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ள நிலையில் பிரபாகரனினது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அவரது பெற்றோர் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் இராணுவத் தளபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

படையினரின் தகவல் அடிப்படையில் பிரபாகரனின் பெற்றோர் சமாதான காலத்தின்போது தமிழகம் திருச்சியில் வசித்து வந்த நிலையில் மீண்டும் இலங்கை வந்துள்ளனர். விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வந்த இவர்கள் மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு வலயத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரபாகரனும் மகன் சார்ள்ஸ் அன்ரனியும் உயிரிழந்தை டீ.என்.ஏ பரிசோதனையில் உறுதியாகியிருப்பதாகவும் இராணுவத்தளபதி தெரிவத்துள்ளார்.

அதிரடி இணையம்

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானை தவிர ஏனையோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பொட்டு அம்மான் படையினரின் விசாரணைக்கு உள்ளாகிவருவதுடன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வழங்கி வருகின்றார்.

கொழும்பில் தங்கியிருந்து தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டவர்கள் தொடர்பாகவும் அதற்கு உதவியவர்கள் குறித்தும் பல தகவல்களை பொட்டு அம்மான் வழங்கியுள்ளார். இவர் வழங்கிய தகவலின் பிரகாரமே கொழும்பில் பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்ல மேலும் பல உறுப்பினர்கள் குறித்தும் சரணடைந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள புலிகள் தொடர்பாகவும் தகவல்களை வழங்கி வருகின்றார் இவரது தகவலின் பிரகாரமே புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்களான எழிலன், புதுவை ரத்தினதுரை, கரிகாலன், ஞானம், இளம்பருதி, யோகி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும் படையினரிடம் சரணடைந்த நிலையில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. பொட்டு அம்மான் வழங்கிய தகவலின் பிரகாரம் நிவாரண முகாம்களில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி, பிரபாகரனின் பெற்றோர் ஆகியோரையும் மேலும் பல புலி உறுப்பினர்களையும் கைது செய்துள்ள படையினருக்கு பொட்டு அம்மான் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வழங்கி வருவதாக தெரியவருகின்றது.

neruppu.com

கருத்துகள் இல்லை: