சனி, 30 மே, 2009

2009-05-30

ஈழக் கோரிக்கைகளை கொண்ட கட்சிகளை ரத்துச் செய்து அவற்றை வேறு பெயரில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் ஈழக் கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் தோற்கடிக்க முடியுமென கூறியுள்ளது.

அரசு பயங்கரவாதத்தை அழித்துள்ள நிலையில், ஈழக் கோரிக்கையை தோற்கடிக்க ஐ.தே.க. அரசுக்கு முழுமையாக உதவும் என்று அக்கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்றுத்தந்த நாடுகளுடன் சிறப்பான உறவுகளை பேண வேண்டும். அதுபோல் எதிராக வாக்களித்த நாடுகளுடனும் நாம் நல்லுறவுகளை இராஜதந்திர ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளே தமது வாக்குகளை பிரயோகித்த நிலையில் அவர்களுடனான உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில் எமது ஏற்றுமதிகள் அதிகமாக மேற்கு நாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதுடன், ஈழக்கோரிக்கையை சர்வதேச ரீதியிலும் தோற்கடிக்க வேண்டும். இதற்கு சர்வதேச உதவியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும்.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள அதிகளவான மக்கள் பல காலமாக புலிகளின் பிடியில் இருந்துள்ளனர். இதனால் அவர்களின் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் உட்பட நிர்வாகத்தில் இருந்துள்ளதனால் அம்மக்களது சிந்தனை ஈழமாகவுள்ளது. இந்த சிந்தனையிலிருந்து இவர்களை விடுவித்து நாம் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு அம்மக்களுக்கான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இதன் மூலமே இதிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள ஈழக் கோரிக்கையை தோற்கடிக்க முடியும்.

தமிழ் மக்களுக்கான பிரச்சினை 1956 இல் சிங்கள மொழி அமுல்படுத்தப்பட்டதிலிருந்து ஆரம்பமானது முதல் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் என இதற்கு பின் வந்த தலைவர்களால் தீர்வு முன்வைக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகளால் இல்லாமல் செய்யப்பட்டது.

அரசாங்கம் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டுமென கோருகையில் அரசிலுள்ள மற்றுமொரு தரப்பினர் இன்னுமொன்றை கூறுகின்றனர். எனவே கடந்த கால பிழைகளை அரசிலுள்ள ஒரு சிலரால் மீண்டும் செய்யாது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு நாம் ஒத்துழைக்க தயாராகவுள்ளோம். இந்நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அரசிலுள்ள ஒரு சில அமைச்சர்கள் இது தொடர்பாக எம்மை விமர்சிப்பதுடன், சேறு பூசுகின்றனர். தேவையில்லாமல் நாம் கட்சி அடிப்படையில் செயற்படுவோம். எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

கடந்த காலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியவற்றை ஒவ்வொன்றாக காட்டி கட்சியை சேறு பூசுகின்றனர். எதிர்க்கட்சியென்ற வகையில் அரசின் சரி, பிழைகளை விமர்சிக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, அரசின் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகம் குறித்தும் விமர்சித்தோம். உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் யாரென தெரியாதுள்ளது.

நாட்டில் சுதந்திரமான சுகாதார சேவையில்லை. மக்கள் வைத்தியரையே சந்திக்கின்றனர். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை மருந்தகங்களில் அவர்கள் வாங்குகின்றனர். நாம் சுகாதாரம், கல்வி மற்றும் பொருட்கள் விலையேற்றம் குறித்தே கருத்து தெரிவித்தோம்.

இந்நிலையில் எமக்கு சேறு பூசுவதை விடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசுக்கு அக்கறையிருக்குமாயின் எமது உதவி குறித்து பதிலளிக்கட்டும் என்றார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்


kumudam

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.
இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்… இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

http://www.meenagam.org/?p=4298


இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் விபரங்களை சேகரிக்கும் தமிழக பொலிஸார்


இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவிக்கும் அகதிகளின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் தமிழகப் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போரினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கையரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கு இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. இதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதன் ஒரு கட்டமாகவே தற்போது இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் தொடர்பான விபரங்களைப் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

தமது உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பும் உத்தரவாதமும் இருக்கும் நிலையில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல தாம் விரும்புவதாக அகதிகள் கூறியதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

http://tamilwin.com/view.php?2a26QVZ4b32j9Eg04dcuWnZdb0eD7G024d3GYpD3e0dBZLuwce03g2hP3cc4Vj06ae
நீங்கள் தலை முடிக்கு ஷாம்பு யூஸ் பண்ணுறீங்களா? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்குத்தான். மார்கெட்டுல பிரபலமா இருக்குற சில முன்னணி பிராண்டுகள துபாய் அரசு தன்னோட நாட்டுல தடை பண்ணிருக்கு, காரணம் அதுல அளவுக்கு அதிகமா கேமிக்கல மிக்ஸ் பன்னுறதுனால அது நம்மளோட தலைமுடிக்கு தீங்கு விளைவிக்குதாம்,அவ்வளவு ஏன்? தலையே சொட்டை தலை ஆயிடுமாம்,அதனால கவனமா இருங்க?

ஆயிரம் சொல்லுங்க புலிமார்க் சியக்கா தூள் போட்டு குளிக்கிற சுகம் ஷாம்புல வருமா? கீழ இருக்குற பிராண்டுகள் சில நம்ம நாட்டுல கிடக்காம போகலாம்,அது கிடக்காதவரைக்கும் நமக்கு நல்லது,ஆனா வெளிநாட்டுக்கு பயணம்
போகும்
போது பிராண்டு பேர மனசுல வச்சுக்கங்க.அம்புட்டுத...

Dangerous Shampoo!!!
Banned By Dubai Government!!








SLS
CLEAR , FRUCTIS ,
Vo5, Palmolive, Paul Mitchell, L'Oreal, Body Shop

All these Shampoos use a chemical called SLS which is actually a floor cleaner. They are used so as to produce more foam.

Imagine what a floor cleaner can do to you hair and scalp. It will damage the very roots of your scalp.
Check out for SLS in toothpaste too!!!
Use the ones which are free from this extremely harmful chemical.
Type in 'SLS Free Shampoo' or 'SLS Free Toothpaste' in Google.Com to get a list of companies selling safe products.
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவும் மற்றும் சில சுயேச்சைக் குழுவினரும் முன் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் சுயேச்சைக்குழுக்களாகப் போட்டியிடுவது சம்பந்தமாக, முன்னாள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களுடன் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கலந்துரையாடி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் தென்னிலங்கை ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பிலும் இம்மறை வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் எனவும் யாழ்ப்பாண மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தக் [...]

கருத்துகள் இல்லை: