ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31



ஜனநாயகம்!

மக்களால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நன்நாள் தேர்தல் நாள்!....

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்காக தொண்டு செய்வதே! அரசியலாகும்!......

அரசியல் செய்வோருக்கு அரம் தவறு அறம் கூற்றாகும்!.....

மக்களுக்காக தொண்டு செய்வதற்காகவே அரசியல் செய்பவர்கள் தான் நமது அரசியல்தலைவர்கள்!...

தனது நலத்தைவிட பொது நலமே தனக்கு முக்கியம் என்று செயல்படுபவர்கள் தான் நமது அரசியல் தலைவர்கள்!..........

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு அமைப்பையும் நல்ல வழிகாட்டிகளையும் நமக்கு கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள்!.........

வாழ்க ஜனநாயகம்! வளர்க நம் நாடு!

(குறிப்பு: .மேலே நீங்கள் படித்தது, எங்க கிளாஸ் சாரு! நாளைக்கு கேள்வி கேட்பதாக சொன்ன வீட்டுப்பாடத்தை உங்களிடம் ஒப்பிச்சேன் அவ்வளவுதான்.... என்னடா.. இது என்று யாரும் குழப்பம் அடைய வேண்டாம்....உங்களுக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன்! நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக நான்,எங்க அப்பா ,எங்க தாத்தா,பாட்டி எல்லாரும் போயிருந்தோம் .அங்க எங்களுக்கு 18வயது இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் அதனால் நாங்கள் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் அதிகாரி சொல்லிவிட்டார்.
அதனால் மற்றற்ற மகிழ்ச்சிக்கு ஆழான நாங்கள் மீண்டும் பள்ளிக்கு படிக்க சென்றுவிட்டோம்!
படிக்கற வயசுல படிக்காம வோட்டுப் போடப்போனது தப்புதானே.....? என்ன சொல்றீங்க.....?)


Originally uploaded by ArunachalaM L

நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தடை பட்டு போன காரியங்களுள் ஒன்று இந்த ப்ளாக் எழுதுவது. இந்த முறை கொஞ்சம் பக்குவம் வந்ததாக நினைத்து கொண்டு ஆரம்பிக்கிறேன். புகைப்படங்கள், அரசியல் (பாமரன் பார்வை தான்), சமுதாய கவலைகள் (அதில் எனக்கு தெரிந்த நிவாரணகள்), பிடித்த இசை பற்றி எழுதலாம் என்று நினைகிறேன்.

இந்த புகைப்பட்ம் மனாலி அருகே எடுக்கப்பட்டது. மிகவும் அழகான மலர் நல்ல வெளிச்சதில், எனது புகைப்படங்களில் விருப்பமான ஒன்று.


Originally uploaded by ArunachalaM L

நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தடை பட்டு போன காரியங்களுள் ஒன்று இந்த ப்ளாக் எழுதுவது. இந்த முறை கொஞ்சம் பக்குவம் வந்ததாக நினைத்து கொண்டு ஆரம்பிக்கிறேன். புகைப்படங்கள், அரசியல் (பாமரன் பார்வை தான்), சமுதாய கவலைகள் (அதில் எனக்கு தெரிந்த நிவாரணகள்), பிடித்த இசை பற்றி எழுதலாம் என்று நினைகிறேன்.

இந்த புகைப்பட்ம் மனாலி அருகே எடுக்கப்பட்டது. மிகவும் அழகான மலர் நல்ல வெளிச்சதில், எனது புகைப்படங்களில் விருப்பமான ஒன்று.



_uacct = "UA-2205455-2";
urchinTracker();
எனக்கு பிடித்த ஒரு மராட்டிய பாடல். மிக அண்மையில் தன் எனக்கு இந்த பாடல் யூடியுபில் காண கிடைத்தது. வந்த புதிதில் மிக பிரபலமான ஒரு பாடல். வி சானலில் அடிக்கடி போடுவார்கள். துள்ளலான இசையும் காட்சியும் மிக சிறப்பாக இணைத்து வந்துள்ளது. என் பார்வையில் இந்த முழு பாடல் தொகுப்பும் அருமை.



_uacct = "UA-2205455-2";
urchinTracker();
எனக்கு பிடித்த ஒரு மராட்டிய பாடல். மிக அண்மையில் தன் எனக்கு இந்த பாடல் யூடியுபில் காண கிடைத்தது. வந்த புதிதில் மிக பிரபலமான ஒரு பாடல். வி சானலில் அடிக்கடி போடுவார்கள். துள்ளலான இசையும் காட்சியும் மிக சிறப்பாக இணைத்து வந்துள்ளது. என் பார்வையில் இந்த முழு பாடல் தொகுப்பும் அருமை.

நாம் இப்படித்தான்.........

****இரு சக்கர வாகனங்களில் செல்லும் முன் பின் தெரியாத நபர் வண்டியில் சைடு ஸ்டாண்ட் போடாமல் சென்றால் அலறி அடித்துக்கொண்டு எச்சரிக்கை செய்வோம்.லைட்டு போட்டுக் கொண்டு எவனாவது பகலில் வண்டி ஓட்டினால் கையை மடக்கி விரித்து மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு அவன் தான் காரணம் என்பது போல் பொதுச் சேவை செய்வோம்.ஆனால் அவனே எங்காவது அடிபட்டு விழுந்தாலோ அல்லது உயிருக்கு போராடினாலோ சந்தடியில்லாமல் இடத்தை காலி செய்வோம் நமக்கு ஏன் வீண் வம்பு என்று.

****ஊரல்லாம் லஞ்சம்,ஊழல் என்று புலம்புவோம்.ஆனால் நமக்கு அல்லது நமது பிள்ளைகளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு ஆனலும் சரி காரியம் நடந்தால் போதும் என்று கொடுக்க வேண்டியதை கொடுத்து நடக்க வேண்டியதை நடத்துவோம்.இதுல நாயகன் கமல் ரேஞ்சில் அவங்களை மாறச் சொல்லுங்க நான் மாறுகிறேன் ஞாயப் படுத்தவேற செய்வோம்.(எழுதுற நானும் இதில் விதிவிலக்கல்ல!)

****வாய் கிழிய மனித நேயம் பேசுவோம்.நம்மை தவிர நாட்டில் உள்ள அனைவருமே ஈவு இரக்கம் எதுவும் இல்லாதவர்கள் என்றும் நாம் தான் இந்த சுயநல நாட்டில் பிழைக்க தெரியாதவர்கள் என்றும் நம்மை நாமே இகழ்புகழ்ச்சி செய்து கொள்வோம்.ஆனால் பேருந்தில் இடம் போடுவதற்காக கை குட்டையிலிருந்து கோமனம் வரைக்கும் தூக்கி போட்டு இடம் பிடிப்போம்.(அரசியல்வாதிகளெல்லாம் நம்மிடம் தோற்றுப்போகும் அளவிற்க்கு).
அதே போல் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் பயணி அசதியில் நம்மீது தூங்கி விழுந்தால் அவ்வளவு தான் மனித நேயம் பொங்கப் பொங்க அவன் மயிரை ஆய்ந்து அவனை துன்புறுத்துவோம் தவறு துகில் களைப்போம்.(இதில் கை முட்டை கொண்டு இடிப்பது, நாக்கை பிடிங்கிக் கொண்டு சாவது போல் அவனை வார்த்தைகளாலே வறுத்தெடுப்பது என பல விதங்கள் உண்டு)

****அரசியல்வாதிகளைப் பற்றியும்,அரசு இயந்திரங்களைப் பற்றியும் ஆயிரம் குறைகள் சொல்வோம்.ஆனால் நாம் பொது இடத்தில்தான் மூத்திரம் போவோம். நடு ரோட்டில் தான் எச்சில் துப்புவோம்.கோபம் வந்தால் அரசாங்கப் பொருட்களை தான் சேதப்படுத்துவோம்.தண்ணி அடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுவோம்.

****தனி மனித உரிமை பேசுவோம்.ஆனால் நமது கவலைகளும்,கோபங்களும் எப்போதும் நமது ஆசைகளையும் ,சுயதேவைகளையும் பொறுத்தே எழும்.தனி மனித ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டதாக புலம்புவோம்.உலகம் நிறைய மாற வேண்டி உள்ளது என கருத்துரைப்போம் ஏன் கவலை கூட கொள்வோம்.ஆனால் எந்த ஒரு சிறு மாற்றத்திற்க்கும் நாம் நம்மை உட்படுத்த மாட்டோம்.

****அடுத்த வீட்டில் எழவு விழுந்தால் அது செய்தி ஆனால் அதுவே நம் வீட்டில் என்றால் அது மீளாத் துயர்,துக்கம்.
அப்படித்தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.

****நாம் நிழலை நிஜமாய் கொள்வோம். நிஜங்களை மௌனத்தால் கொல்வோம்.ஆனால் என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவன் வருவான் நம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவான் என தீர்க்கமாய் நம்புவோம்.கண்களை இறுக மூடிக்கொண்டு விடியல் காண துடிக்கும் குடிகாரன் போல்.

தனி மனித மாற்றங்களால் இந்த சமூகம் மாறுமா?

புள்ளிகள் சேர்ந்து கோடாவது போல் தனி மனிதர்கள் சேர்ந்தே சமூகம் உருவானது.அதனால் தனி மனித மாற்றங்களால் சமூக மாற்றம் ஏற்படுத்த முடியும்.
மாற்றங்கள் வேண்டி தலைவர்கள் தேடி காத்திருப்போரே!வாருங்கள் எந்த மாற்றமும் தானாய் வருவதில்லை நாமாய் ஏற்படுத்தும் வரை.

சுட்டால்தான் நெருப்பு!
சுற்றினால்தான் பூமி!
போராடினால்தான் மனிதன்!-ஆம் மாற்றங்கள் வேண்டி போராடுவோம்.

கருத்துகள் இல்லை: