சனி, 30 மே, 2009

2009-05-30

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் Google , கர்நாடக கிராம மக்களுக்கு இண்டர்நெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மே 4 முதல் 18 ஆம் தேதி வரை இன்டெர்நெட் பேருந்தை இயக்குகிறது. கர்நாடகாவின் முக்கியமான 15 நகரங்களுக்குப் பேருந்து சென்று அங்குள்ள மக்களுக்கு இணைய விழிப்புணர்வை ஏற்படுத்தும். சென்ற முறை தமிழ்நாட்டில் நடைபெற்றபோது கோவையைச் சேர்ந்த பூ விற்கும் சிறுவன் பங்கேற்று Google Maps, Google Earth மற்றும் Google Search ஆகியவற்றைத் தமிழில் கற்றுக் கொண்டது நெகிழ வைக்கிறது.

மாண்டியா, கோலார், மைசூர், ஷிமோகா, பெல்காம் உள்ளிட்ட 15 நகரங்களுக்குப் பேருந்து செல்கிறது. வீடியோ, ஆடியோ இன்னும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எளிமையாக இன்டெர்நெட் குறித்து அனைவருக்கும் விளக்குவதே நிறுவனத்தின் நோக்கம். இந்த முயற்சியால் இந்திய மக்கள் நிச்சயம் பலனடைவார்கள். பொதுமக்களும் தானாக முன்வந்து வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

"இந்த INTERNET BUS PROJECT இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு. குறிப்பாக இளைஞர் மத்தியில். தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி ஆகியவற்றில் இணையம் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடு. " என்கிறார் Google ன் R & D பிரிவுத் தலைவர் ராம்.

கடந்த டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை தமிழ்நாட்டில் Google இந்த முயற்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. " தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றது எங்களுக்கு ஊக்கமளித்தது. நாங்களும் நிறையக் கற்றுக் கொண்டோம். இந்தியா முழுவதும் இன்டெர்நெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இனி எங்களது பணி" என Google தெரிவிக்கிறது. கிராமங்களைப் புறக்கணிக்காமல் சேவையாற்றும் Google நிறுவனத்துக்கு இந்திய மக்களின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

More than a Blog Aggregator

by கார்த்திகைப் பாண்டியன்
சம்பவம் 1: தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை. எங்கள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் மெயின் கேட்டின் அருகே சென்று கொண்டு இருந்தேன். அங்கே பிஹெச்டி முடித்த புரொபசர் ஒருவர் நின்று சக ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என அருகில் சென்றேன். அடுத்த நாள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதைப் பற்றி ரொம்பத் தீவிரமாக பேசினார். ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆன ஒரு ஜாதிக்கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சம்பவம் 2: கல்லூரியின் எதிரே இருக்கும் டீக்கடை. தேர்தலுக்கு மறுநாள். கடைக்கு பால் ஊற்ற வரும் பெரியவருக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். அவரிடம் டீ மாஸ்டர் கேட்கிறார்..

"என்ன பெரியவரே.. யாருக்கு ஓட்டு போட்டீங்க..?"

"எல்லாம் நம்ம ..................... தம்பி.."

"நீங்க ரொம்ப நாளா காங்கிரஸ் தான?"

"அட போப்பா.. இவ்வளவு நாளா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கட்சி இல்லாம இருந்தது.. கைக்கு போட்டேன்.. இப்போத்தான் நமக்குன்னு ஒரு கட்சி இருக்குல்ல.. என்னன்னாலும் நம்ம ஜாதிய விட்டுக் கொடுக்க முடியுமா..?
படித்தவர்கள் என்று பெரிதாக சொல்லிக் கொள்பவர்களுக்கும், படிக்காத பாமர மக்களுக்கும் என்ன வேற்றுமை உள்ளது? தங்களுடைய ஜாதி என்று வரும்போது எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்களே? ஜெயித்தால் நாட்டுக்கு என்ன நன்மை செய்வோம் என்பதைத் தாண்டி ஜாதிப்பாசத்துக்காக ஓட்டு போடும் நிலைமைதான் நம் நாட்டில் இன்னும் உள்ளது.எல்லாத்தையும் விடப் பெரிய கொடுமை, என்னுடைய மாணவர்களில் சிலரும் குறுஞ்செய்திகள் மூலம் இந்த கட்சிக்காக ஓட்டு சேகரித்ததுதான்.
எந்த ஒரு கட்சியானாலும் தொகுதிக்குள் இருக்கும் மக்களில் எந்த ஜாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனப் பார்த்துத்தான் வேட்பாளர்களை களம் இருக்குகிறார்கள். இங்கு மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் ஜாதிகள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. சமீபத்தில் நடந்தே சட்டக் கல்லூரி பிரச்சினை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அடிப்படைக் காரணம் - ஜாதி.இளைஞர்கள் இடையே இந்த ஜாதி உணர்வு பரவுவது மிகவும் ஆபத்தானது.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்து பள்ளிகள் தொடங்கி குடியிருக்கும் வீடுகள் வரை எல்லா இடத்திலும் கேட்கப்படும் முதல் கேள்வி.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?". அடுத்த தலைமுறையாவது ஜாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கும் என நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா இல்லை "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்பது வெறும் பாடப் புத்தகங்களோடு போக வேண்டியதுதானா? விடை தெரியா கேள்வி..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

கருத்துகள் இல்லை: