வெள்ளி, 29 மே, 2009

2009-05-29



அன்பு நண்பா உனக்கு,

எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது

கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்

உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !

புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது

சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்

மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !

கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்

தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது

கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !

ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,

என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்

துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............

1977 இல் பில்கேட்ஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதால் கைது செய்யபட்டார்.







மன்சூர் அலிகான் தோல்வி.






ஊதா கலரு சட்டை போட்டு
ஊரெல்லாம் சொல்லிகிட்டு
இலட்சியம் தான் உனக்கிருக்குன்னு
இலட்சிய தி.மு.கவிலுல சேர்ந்ததுமே
உன் தலைவர் உனக்கு தான்
திருச்சின்னு ஒதுக்கி வைச்சான்

கடல மிட்டாய் வாங்கி குடுத்து
கட்சிகாரனை இழுக்க நினைச்ச
கட்டிங் கிடைக்குதுன்னு - பல
கட்சிக்கு பயபுள்ளைக ஓடி போயிட்டான்

பட்டம் தான் உன் சின்னமுன்னு
பக்குவமா எலக்ஷன் கமிஷன் சொன்னதும்
பல தெருவுக்கு போய்
ஓட்ட கேட்ட - சத்திரம்
பஸ் ஸ்டாண்டுக்கும் போய்
ஓட்ட தான் - நீ கேட்ட

உன்னையே நாயின்னு -
நீ சொல்லிகிட்டு
திருஞ்சத பார்த்த மக்கள்
பைத்தியம் தான் நீ-ன்னு
பயந்து போயி
பக்கத்து கட்சிக்கு ஒட்ட போட்டு
படுதோல்வி உன்னை ஆக்கினாங்க

பல தோல்வி - நீ கண்ட
படு தோல்வியும் - நீ கண்ட
பக்க பலமா யார் இருக்க
பதினொன்னுல நீ முதல்வராக


ந்தியாவில் உள்ள சில மத்திய அரசின் ஆதரவு ஊடகங்கள் மட்டுமே தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு விட்டதாக இரண்டு நாட்களாக செய்திகளை வெளியிட்டு வருகிறது, ஆனால் அந்த தகவல்கள் விடுதலைப்புலிகளால் உறுதி படுத்தப்படவில்லை.


இது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இங்கிலாந்து நாட்டின் சேனலுக்கு வழங்கிய காணொளி இது.

 காணொளியை காண கீழே உள்ள "லிங்கை" கிளிக் செய்யவும்

http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=23547249001
மீபத்தில் பிரபல சோசியல் வலைத்தளமான  "பேஸ்புக்" தனது தளத்தை தமிழ் மொழியிலும் வழங்க தொடங்கி இருக்கிறது... இது அந்த தளத்தை பயன்படுத்தும் தமிழ்மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்கு  ரொம்பவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அதை தொடர்ந்து இப்போது உலகளாவிய அளவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சோசியல் தளமான "ஒர்குட்" தளமும் தனது சேவையை தமிழ் மொழியில் வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே "ஒர்குட்"டுக்கு  கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் பிராந்திய மொழிகளிலும் தனது சேவையை வழங்க முன்வந்திருக்கும் அதில் இன்னும் புதிதாக பயனாளர்கள் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர்குட் தளத்தை தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி,மராத்தி, ஆகிய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.

உலக அளவில் பிரபலமான இணையதளங்கள் தங்களது சேவையை தமிழ் மொழியிலும் தரதொடங்கி இருப்பது ஒரு நல்ல மாற்றம் என்று தான் சொல்ல வேண்டும், இவர்களைப்போல் மேலும் பல பிரபலமான தளங்கள் தங்களது சேவையை தமிழில் தருவதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையலாம்.

ஒர்க்குட்டை தமிழில் பயன்படுத்தும்  முறை:

"பேஸ்புக்" தளத்தில் முகப்பு பக்கத்திலேயே பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும்  மொழியைமாற்றும் வசதி தரப்பட்டுள்ளது, இதனால் தங்களது மொழியை முதலிலேயே தேர்வு செய்து பிறகு உள்ளே போகலாம்,ஆனால் ஓர்குட்டில் முகப்புபக்கத்தில் மொழி மாற்றும் வசதி இன்னும் தரப்படவில்லை, மாறாக முகப்புபக்கம் ஆங்கிலத்திலேயே உள்ளது. 

அதற்கு நாம் ஓர்குட்டில் "login" செய்து உள்ளே
சென்றவுடன் "my settings" என்ற பகுதிக்குள்  இடப்பக்க ஓரத்தில் "settings" என்பதை கிளிக் செய்து உள்ளே சென்று "general" என்பதில் உள்ள "display language"இல் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கவும். பிறகென்ன "ஓர்குட்" தளம் தமிழ் மொழிக்கு மாறிவிடும்.  விரைவில் "ஒர்குட்" தளமும்  முகப்பு பக்கத்தில் மொழிமாற்றும் வசதியை கொண்டு வரும் என்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை: