ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார அமைச்சர் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை! சொல்லப் போனால் அவர் சொன்னது கொஞ்சம், எவரையும் புண்படுத்த வேண்டாமென்று சொல்லாமல் விட்டது மிக அதிகம்!

கால் சென்டர்களை ஆதரிப்பவர்களின் தரப்பு வாதம் என்னவென்றால்
" எந்த ஒரு நன்மையும் சமூகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது கூடவே நாலு தீமையும் நுழையத்தான் செய்யும் ! நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே தவிர ஒரேயடியாக அந்த நன்மைக்கே முட்டுக்கட்டை போடுவது கடைந்தெடுத்த பத்தாம் பசலித் தனம் !" 'பழையன கழிதலும் புதியன புகுதலும் ' வரவேற்க வேண்டியவையே என்று நம் பெரியவர்களே சொல்லவில்லையா ?' "Work hard, Party hard! (கடினமாக உழை ! மிகக் கடினமாக பார்ட்டி கொண்டாடு !) என்ற கொள்கை உடையவர்கள் இந்தத் துடிப்பு மிகு இளைஞர்கள் ! இதில் என்ன தவறு? இரண்டு மூன்று தலைமுறை பழசாய்ப் போனவர்களெல்லாம் பொறாமையில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கலாமா ?"

மேலெழுந்தவாரியாக நியாயம் போல் தோன்றும் இந்த வாதங்களில் பூசி மெழுகப்படும் விஷ(ய)ங்களை நாம் கூர்ந்து நோக்க வேண்டும் ! வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே , தன் தந்தையின் மாத சம்பளத்தை விட அதிகம் வாங்கும் ஒரு பையனோ பெண்ணோ , சற்று மிதப்புடன் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப் போய் விடக்கூடிய ஒரு சில்லறைக் குற்றம்தான் ! ஆனால் , வார இறுதியில் கொண்டாடப் படும் week end பார்ட்டிகள்தான் இந்த BPO க்களின் மாபெரும் சாபக்கேடு ! சிகரெட் , மது (பொதுவாக பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம் எனக் கொள்க !) என்றால் இயல்பாகவே நம் பெண்களுக்குள்ள அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம் அத்தனையையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வங்காள விரிகுடாவில் வீசிய புண்ணியத்தை இந்தக் கால் சென்டர்கள் தேடிக் கொண்டுள்ளன ! இந்திய (குறிப்பாகத் தமிழ் ) சமூகத்தில் கடந்த பல நூறு ஆண்டுகளாக நெறிகளில் மெல்ல மெல்ல ஏற்பட்ட சீரழிவை , நான்கைந்து வருடங்களிலேயே அசுரத்தனமாக மிஞ்சிக் காட்டிய பெருமையும் இவற்றையே சாரும் ! புகை , பீர் மற்றும் ரம் , விஸ்கி போன்றவை தண்ணீர் போலப் புழங்கும் ஒரு சூழலில் , ஆண்கள் பெரும்பாலானோர் தன் வயம் இழந்த சூழ்நிலையில் , திருமணம் ஆகாத பெண்கள் வளைய வருவது மேல்தட்டு வர்க்கத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம் ! என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற அக்கறையுள்ள மத்யமர்களுக்கு எந்நாளும் ஒத்து வராது !

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியது போல் 'நம் ஆட்களுக்கு அளவாகக் குடிக்கவும் தெரியாது !' இன்றுதான் உலகின் கடைசி நாள் என்பது போல் அரக்கத் தனமாகக் கொண்டாடப் படும் இந்த வார இறுதிப் பார்ட்டிகளில் பெண்கள் பலரும் குடித்து விட்டு 'அவுட் ' ஆகி விழுவதும் , 'கால் சென்டரில் இதெல்லாம் சகஜமப்பா !' என்று சில தடியன்கள் அவர்களை 'க்வாலிஸ் ' வண்டியில் தூக்கி வந்து வீட்டில் பெற்றோரிடம் நடு நிசியில் தள்ளி விட்டுப் போவதும் எத்தனையோ வீடுகளில் நடக்கின்றன ! காலையில் அதே பெண் எழுந்து , தேள் கொட்டிய திருடனாய் இருக்கும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் தன் உரிமைகளைப் பற்றி ஆவேசமாய் சர்ச்சை செய்வதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறதே ! பெண்களின் ஒழுக்க உணர்வு தளர்ந்தால் சமூகம் குட்டிச் சுவராக சில பத்தாண்டுகளே போதுமே ! பொருளாதார மேதைகள் நமக்குக் காட்டும் ரசவாதமான 10% GDP வளர்ச்சிக்கு நாம் கொடுத்துத் தொலைக்க வேண்டிய விலை இது என்று புறந்தள்ளி விட்டுப் போக முடியுமா பண்பாட்டின் இந்த அதல பாதாளச் சீர்கேட்டை ? நாளை சமூகத்தை மீட்டெடுக்க எத்தனை மகான்கள் முயன்றாலும் முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது போன்ற சமுதாயச் சிக்கல்களுக்கெல்லாம் 'RESET' பட்டன் இன்னமும் கண்டு பிடிக்கப் படவில்லையே !!!

சினிமா விரும்பி

(வடக்கு வாசல் நவம்பர் 2007 இதழில் சில சிறிய மாற்றங்களோடு வெளி வந்தது)

குந்தி சூரியனை கணவனாக எண்ணியதற்கே
கருவுற்று கர்ணனை ஈன்றதாக கதைகளில் கேட்டேன்.....
உன்னை காதலனாக எண்ணியதால்..............

என் நினைவுகள் கருவுற்று
ஈன்று எடுத்த கவிதை குழந்தைகளை
பெயரிடாமல் உன் பார்வைக்கு அனுப்புகிறேன்...........

பிழை இருந்தால் பொறுத்து
உன்போல் அழகாய் இருந்தால் ரசித்து
பெயரிட்டு அழை "தந்தை"என்ற முறையில் ..........

சற்று வேறுபட்டு மாறு பட்டு
காதலனை எழுதும்
ஒரு மரபு மீறிய கவிதையின் கவிதை இது .......

************************************************************************************
கல் கொண்டு என்னை சிலை வடித்தால்
உளி பட்டு நான் உடைந்து போவேன் என்று .........

சொல் கொண்டு வரைந்தான் என்னை
எங்கோ இருந்த என்னை
இதயத்திற்கு இடம் பெயர்த்தான்..........

இதயமெல்லாம் நீயே என்று
என் பெயரை எழுதி நிரப்பிவிட்டான்!!!!!!!!!!!

உள்ளிருந்து கொல்லச்சொல்லி
உயிர்வதை என்னை செய்யச் சொல்லி
காதல் கேட்டு வரவில்லை
கனவில் தொல்லை தரவில்லை.............

என் கருவில் வாழ ஆசைப்பட்டு
காற்றில் கரைய துடிக்கின்றான் !!!!!!!!!!!!!

வேண்டியது கிடைத்தால் தான் விளம்பரம் ஆவாய் நீ......
விளம்பரம் இல்லை என்றால்
விருந்தோம்பல் இல்லை உனக்கும்
காணிக்கை ஈட்டி தரும் கடவுள் நீ என்றால்

கவர்மெண்டுக்கும் கனிவு வரும் உன்மேல்
காசு பார்க்காத கடவுள் நீ என்றால்
கண்டுக்கொள்ளாது கவர்மெண்ட்டும் உன்னை
தங்கத்தகட்டால் தளத்தள என கோபுரமும் வாயுளும்

வான் உயர்ந்த கோபுரத்தில்
வண்ண விளக்குகளின் அணிவகுப்பு
பணம் படைத்தோர்க்கு பணம் படைத்தவுடன் தரிசனம்
மனம் மட்டும் படைத்தோர்க்கு கால் கடுக்க
கரிசனமாய் தர்ம தரிசனம்

உன்னை ஆதியும் அந்தமுமாய் காண ஒரு கட்டணம்
உன் அபிஷேகம் காண ஒரு கட்டணம்
உன்னை அலங்காரமாய் காண ஒரு கட்டணம்

அதுவும் இன்றிக் காண ஒரு கட்டணம்
உனக்கு அங்க பிரதட்சணம் செய்ய ஒரு கட்டணம்
உன்னை அவசரமாய் காண ஒரு கட்டணம்
உன்னை துயிலுரச் செய்வதை காண ஒரு கட்டணம்

உன்னை தூயில் எழுப்புவதை காண ஒரு கட்டணம் என
உன் நிர்வாக செலவுக்கு உன் சார்பாய்
நிர்வாகம் நிர்ணயம் செய்தது ஒரு கட்டணம்
பாமரனுக்கும் பசித்தவனுக்கும்
பஞ்சம் காட்டும் பணக்காரன் உனக்கு செய்கிறான்

பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
அவற்றில் குளித்து குளிப்பாட்டுபவனையும்
கும்பிடுபவனையும் நீ குளிரவை !!!!!!!
காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது புரியும்மப்பா !!!!!!!!!!!

குறிப்பு:- இங்கு ஆண்டவனையோ ஆன்மீகத்தையோ ஆத்திகர்களையோ குறிப்பிடவில்லை........

கருத்துகள் இல்லை: