இந்தோனேசியாவில் தொடர் படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதியொருவர், "எனது கடைசி செயல் நிறைவேற்றம்' என்ற தலைப்பில் தன்னால் பாடப்பட்ட பொப் இசைப் பாடல்களை இம்மாதம் வெளியிடவுள்ளார்.
ஒரு தாயையும் அவரது கைக்குழந்தையையும் படுகொலை செய்தமை உள்ளடங்கலாக தொடர் கொலைகளைப் புரிந்தமை, முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் தன்னின சேர்க்கையில் ஈடுபடும் பழக்கத்தைக் கொண்டிருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் வெர்றி இதாம் ஹென்யென்ஸியாஹ் (31 வயது) மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிறையிலிருந்தவாறு கடந்த பெப்ரவரி மாதம் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டதன் மூலம், ரேயன் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் வெர்றி இதாம் பிரபலம் பெற்றார்.
தமிழ் நடிகைகளில் மிகச்சிறந்த நடனத் திறன் கொண்டவர் நயன்தாராதான் என்கிறார் இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் எனப் புகழப்பட்ட நடன இயக்குநரும் நடிகரும் திரைப்பட இயக்குநருமான பிரபு தேவா.
தமிழில் விஜய்யை வைத்து தான் இயக்கிய போக்கிரியை, சல்மான்கானை வைத்து இந்தியில் உருவாக்கி வருகிறார் பிரபுதேவா. படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் ரிலீசாக உள்ளது.
இதற்கிடையில் நயன்தாராவும், பிரபுதேவாவுக்கும் இடையே புதிய 'நட்பு' மலர்ந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
வில்லு படத்தில் நயன்தாரா நடித்த போது ஏற்பட்ட நெருக்கம்தான் இப்போது நயன்தாரா நடித்து வரும் பாடிகார்ட் மலையாள படத்தில் பிரபு தேவாவை டான்ஸ் மாஸ்டர் ஆக்கியுள்ளதாம்.
பெரிய இயக்குநராக இருந்தாலும், நயனின் அன்புக் கட்டளையை மீற முடியாமல்தான் இந்தப் படத்துக்கு நடனம் அமைத்துத் தர பிரபுதேவா ஒப்புக் கொண்டதாகக் கிசுகிசுக்கிறார்கள்.
இது பற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது,
பாடிகார்ட் பட இயக்குநர் சித்திக் எனது நீண்டகால நண்பர். அவர் இயக்கிய எங்கள் அண்ணா படத்தில் நான் நடித்துள்ளேன்.
அவர் மலையாளத்தில் எடுக்கும் படத்தில் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு நான்தான் நடனம் அமைக்க வேண்டும் என பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்.
அதனால்தான் ஒப்புக் கொண்டேன். இப்போது குடும்பம், குழந்தைகள் என வேறு மாதிரி செட்டப்பில் செட்டிலாகிவிட்டேன். இந்த சமயத்தில் போய் என்னையும், நயன்தாராவையும் பற்றி ஏன் இப்படி கிசுகிசு பரப்புகிறார்கள் என்று புரியவில்லை.
நயன்தாராவைப் பொறுத்தவரை அவர் மிகச் சிறந்த டான்ஸர். எங்களுடைய தொடர்பு முழுக்க தொழில் ரீதியிலானது.
மீண்டும் ஹீரோவாகியுள்ளது சந்தோஷம் தருகிறது. தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் மிகச் சிறந்த படைப்பாக வரும். இந்த மாதிரி ஒரு கதையில் நடிக்கத்தான் இவ்வளவு நாளாக நடிக்காமல் காத்திருந்தேன்.
என் நடிப்பு வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக களவாடிய பொழுதுகள் அமையும் என்றார்.
சென்னை, ஏப். 2: கச்சத்தீவில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கான உரிய சட்டநடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் வீணடிக்கப்படுவதை தடுக்க உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானின் சிறைக் காவலை வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக