வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-11

11.11.2008. ஜனாதிபதியின் கொச்சைத் தமிழ் பேச்சினால், மட்டும் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. இந்த யுத்த குதூகலத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தால் தமிழ், இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை மேலும் பல இலட்சங்களாக அதிகரிக்கும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியினாலும் வாழ்க்கைச் சுமையினாலும் தோட்ட முதலாளிமார்கள் அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் ஆதாய நோக்கம் கொண்ட தொழில் மாற்றங்களிலும் 1/2 பட்டினி, 1/4 பட்டினி என அனுபவித்து அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் தலையில் [...]
அரசியலில் காமெடி செய்திகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை....

ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் அல்ல, அமெரிக்க உளவுத்துறையினர் தான் காரணம் - திருமாவளவன்


இந்த செய்தியை படித்துவிட்டு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனே வாய்விட்டு சிரித்தார் என்று பேசிக்கொள்கிறார்கள்


எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடப்பதே எனக்கு தெரியாது. எனக்கு அழைப்பு வரவில்லை. தொடர்ந்து என்னை புறக்கணித்து வருகிறார்கள். - எஸ்.வி.சேகர்


முன்னாடி உங்க டிராமா பார்த்து சிரித்தோம் இப்ப உங்களை பார்த்து. கலைஞர் டிவியில் உங்க காமெடி டிராமா எப்ப வரும் ?


என் மகள் திருமணத்திற்கு வரவேண்டும்; என் மகன் படபூஜைக்கு வர வேண்டும்; இன்று போல் என்றும் அன்பு காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு 3 நிபந்தனை விதித்து தான் அதிமுகவில் சேர்ந்தேன். - எஸ்.வி.சேகர்


மைலாப்பூர் தொகுதிக்கு அவசியமான நிபந்தனைகள் தான் இவை. திருமணத்துக்கும், பூஜைக்கும் வர அம்மா என்ன குருக்களா ?


விஜயகாந்துக்கு தலைவராகும் தகுதியோ, அரசியல் நடத்தும் தகுதியோ கிடையாது. அவரிடம் அரசியல்வாதி அந்தஸ்து, கட்சி நடத்தும் தகுதி எதுவுமே இல்லை. - ராமதாஸ்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது. அரசியல் அவருக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்று அவருக்கு நன்றாக தெரியும். ரஜினி ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் அரசியலில் வெற்றி பெற முடியாது. எனவே அவர் அரசியலில் இறங்க கூடாது. - ராமதாஸ்


இந்த மாதிரி பேசுவதற்கு எந்த தகுதியும் வேண்டாம் என்று புரிகிறது



ஒபாமா, பாகிஸ்தான் உள்பட 15-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்களுடன் பேசி விட்டார். ஆனால் இன்னும் அவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இன்னும் பேசவில்லை. - செய்தி


எதற்கும் சோனியாவிடம் விசாரித்து பாருங்க, அவரிடம் பேசினாலும் பேசியிருப்பார்.


தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி


புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? கனிமொழி = கலைஞர்மொழி


11.11.2008. கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும் வகையிலான இரகசிய சதித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரப் பலத்தை வலுவிழக்கச் செய்யும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் மிகவும் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.   ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் கருணாவிற்கும், முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   கிழக்கில் தமிழ் அல்லது முஸ்லிம் சமூகங்களின் [...]
மனது ஒரு நிலையில்லை.

'எது உண்மை, எது பொய்' எனப் புரியவில்லை.

'யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது' எனத் தெரியவில்லை.

எல்லாமே பொய்யா?!

எல்லாம் என்றால்... மனிதன்.. அவனைச் சுற்றியுள்ள அசையும் அசையாப் பொருட்கள்... பேசும் பேசாப் பொருட்கள்.. யாவுமே பொய்யா?!

குழப்பமாக இருந்தது.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்போர் ஒருபுறம். 'நம்ப நட, நம்பி நடவாதே' என்போர் இன்னொருபுறம். இதில் எதை நம்புவது. 'வாழ்வேன்' என்ற நம்பிக்கைதானே வாழ்க்கையைக் கொடுக்கிறது?! 'அசையாமல் தைரியமாக நிற்பேன்' என்ற நம்பிக்கைதானே உறுதியுடன் நின்று நிதானித்து முன்னேற உதவுகின்றது?!

பூமி சுற்றுகிறது.. அதோடு நாமும் சுற்றுகிறோம். அதனால் நமது அசைவுகளே அந்தரமானவை என நினைத்தால், எவ்வாறு நிரந்தரத்தைப்பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்?!

இதயத்திலிருந்து அன்பு ஊற்றெடுக்கின்றது என நம்பினால், அது அன்பாகத்தானே பொலிந்து பொய்கையாகின்றது?! அதே இதயம் வெறும் இரத்த அழுத்தப் பம்பி என எண்ணினால், அங்கே அன்புக்கும் பாசத்துக்கும் சொந்தங்களுக்கும் இடமேது?!

எண்ணங்கள்தானே நம்பிக்கைகளை ஏற்படுத்தி நாட்களை சுவாரசியாமாக நகர்த்தி எழிலாக்குகின்றன?!

'நலமாக நடக்கும்' என்ற நம்பிக்கையுடன் கூடிய முயற்சிகள்தானே நல்லனவற்றின் விளைச்சலுக்குக் காரணமாகின்றன?!

எனது மனக்குழப்பங்களிற்கு நானே சமாதானம் தேடிக்கொண்டிருந்தேன்.

அமைதியாக இருந்த மனமென்னும் குட்டையுள் சிறு கல்லொன்று வந்து விழுந்து, சலனங்களை உருவாக்கிவிட்டதுதான் என் குழப்பங்களுக்கும் அதற்கான சமாதானத் தேடல்களுக்கும் காரணம்.

அந்தக் கல் ஜோதியின் மூலம்தான் வந்தது.

அவள் வார்த்தைகளால் வீசிய சிறிய கல்லானது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி நிம்மதியைத் துரத்த முயன்றது.

"நீ.. ஜோ.. ஏய்! நீதான் என் மச்சாளை படிக்கவிடாமல் தொந்தரவுபண்ணுறதா.. முட்டாள்... எருமை... வெண்ணை... கவனம்டா.. கொன்னுடுவேன்.."

முதலில் வந்தவுடன் அவள் பேசிய பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போனேன்.

பதில் கூறுவதற்கு சிந்தனை எழ மறுத்தது.

மெளனம்.

"லொள்.." - பிருந்தாதான் சிரித்தது.

"என்ன ஜோ.. பயந்துட்டியாடா.. சரியான சென்சிடிவ்வா(sensitive) இருக்கிறாய்டா..ரேக் இற் ஈசி மான்..(take it easy Man)"

ஜோதிதான்.

எனக்கு பேச்சு வரமறுத்தது.

'டேக் இற் ஈசியாமே?!'

"ஐயோ..."

"என்ன ஐயோ.."

"லொள்.. ஜோதி மச்சாள்.. இந்த எம்மெம்முக்கு ஐயோதான் தெரியும்.."

"அது என்ன எம்மெம்.."

"மாங்காய் மண்டை.."

"லொள்.."

"ஜோதி.. நீங்க ஏன் அப்படி பேசினீங்க.. "

"ம்.. அது ஒரு ரெஸ்ற்.."

"ரெஸ்ற்றா..?"

"யா.. ரெஸ்ற்தான்.. சீரியஸ் ரைப் என்டா உன்னைமாதிரி பேசமாட்டாங்க.. லொள்ளுபார்ட்டி என்றால் திருப்பி திட்டுவாங்க.. வளவள பார்ட்டி என்றால் அட்வைஸ் பண்ணுவாங்க..."

"ஓ.. அப்பிடியும் இருக்கா.. "

"ம்.. ஜோ.. இவள் பிருந்தா எந்தநேரமும் சற்.. கொஞ்சம் குறைக்கச் சொல்லு.."

"மச்சாள்.. தொடங்கீட்டியா.. ஜோ.. அவள் அப்படித்தான்.. நீ கண்டுகொள்ளாதை.. லூசி.. போடி.."

பிருந்தா சீறினாள்.

"இல்லை.. நான் உன்ரை நல்லதுக்குத்தான் சொல்லுறன்.. நீ ரொம்ப ஓவர்.. உன்ரை வயசுக்க இது கூடாது.. எதுக்கும் அளவு வேணும்.. ஜோ.. நீ அவளுக்கு அட்வைஸ் பண்ணு.. சொல்லிப்போட்டன்.."

தர்மசங்கடத்தடன் மெளனமாக இருந்தேன்.

'எனது சற் அவளது படிப்பைக் குழப்புகிறதா?'

குற்ற உணர்வு என்னள் எழுந்தது.

"ஜோதி.. ரொம்ப பேசாதை.. என்ரை சந்தோசத்தை கெடுக்காதை.. பிறகு மச்சாள் என்றும் பார்க்காம உன்னோடை பேசமாட்டேன்.."

"பிருந்தா.. நீ பேசாட்டிலும் பரவாயில்லை.. உனது கெல்த்தான் முக்கியம்.."

"ஜோதி... கீப் யு(வ)ர் புறொமிஸ்.."

பிருந்தாவின் கோப மூஞ்சி பட வடிவில் மெசன்சர் திரையில் சிவப்புப் பொட்டாக தெரிந்தது.

"ஓகே.. ஓகே.. பட் எதுக்கும் லிமிட்.. லிமிட் முக்கியம்.. எனக்கு இருபத்தைந்து வயது.. உனக்கு...?"

"ஓ.. நோ... எனக்கு பத்தொன்பது வயது.. அதுக்கென்ன இப்போ மச்சாள்?"

"லொள்.. சரி சரி.. நீ பெரிய மனுசிதான்.. ஆனால் கவனம்.. உன்ரை மச்சாள் நான்.. இப்ப நீ போய் படுக்கணும்.. ஓகே..?"

எனக்கு ஜோதிக்கு இருபத்தைந்து வயது என்றதுமட்டும்தான் புரிந்தது.

படிப்பைப்பற்றிக் கதைத்தவள் ஏன் படுக்கைக்குப் போ என விரட்டுகிறாள் எனப் புரியவில்லை. எனினும் அப்போது கனடாவில் இரவுநேரம்தான்.

"ஓகே மச்சாள்.. நான் போறன்.. கெதியா போய் படுக்கிறன்.. நான் கெதியா படுக்கவேணும் என்றதுதானே உனது ஆசை..."

"ஐயோ.. என்ன பிருந்தாக்குட்டி... உன்ரை நல்லதுக்குத்தானே சொல்லுறேன்..?"

"ம்... மச்சாள் உனக்கு ஒன்று தெரியுமா? உன்னை ஏன் ஜோக்கு அறிமுகப்படுத்தினன் தெரியுமா?"

"சொல்லு.."

"சற் பிரண்ட்சிலை நான் அவனிலைதான் ரொம்ப அன்பு வைச்சிருக்கிறன்டி.. அதுதான்.. நீயும் அவனோடை அன்பாய் கதைக்கணும்.. அப்போ திட்டினமாதிரி இனி தீட்டக் கூடாது.. ஓகே..?"

எனக்கு கண்கள் பனித்தன. நெஞ்சு விம்மியது. என்மீது ஓரு ஜீவனுக்கு இவ்வளவு அன்பா?

"நன்றிடா ஐஸ்.. நானும் உன்னிலை நிறைய அன்பு வைச்சிருக்கேன்.."

"லொள்.. இவன் பொய் சொல்லுறான்.. இவன் அன்பு வைக்கேல்லை.. காதல் வைத்திருக்கிறான்.. லொள்.."

"ஐயோ.. போடி.. போய் படு.. "

பிருந்தா மெசன்சரைவிட்டு பறந்துவிட்டாள்.

எனினும் என் மனம் அவளைத் துரத்திப்பிடிக்க முயன்றுகொண்டிருந்தது.

அதேவேளை ஜோதிக்கு எனது மனதை காட்டியது சங்கடமாக இருந்தது. மெளனமாக இருந்தேன்.

"ஜோ...!!" - ஜோதிதான் அழைத்தாள்.

"டேய்.. நீ அவளை காதலிக்கிறியா..?"

மெளனம்.

"சற்றிலை எப்படிடா காதலிக்க முடியும்.. இருபத்தாறு வயதிலை உனக்கு என்ன விசரா?"

பதில் வரவில்லை. அவள் தொடர்ந்தாள்.

"ஜோ... சற் ஒரு சந்திமாதிரி.. நாலு பக்கத்திலை இருந்து வாகனங்கள் வரும்.. சிக்னல் சிவப்பானால் நிக்கும்.. பச்சையானால் போகும்.. சிலது சத்தம் போடும்.. சிலது 'கோன்' அடிக்கும்.. சிலது உறுமும்.. வேடிக்கை பார்க்க நல்லாயிருக்கும்.. அப்பிடித்தான்... பலரும் வருவாங்கள்.. பலவிதமாப் பேசுவாங்கள்.. வாழ்க்கையிலை பேச முடியாததை பேசுவாங்கள்.. இது எல்லாம் ஒரு நாடக வசனம்மாதிரி.. இதை உண்மை என்று நினைக்கிறியா..."

"அப்ப எல்லாமே பொய்யா?"

"பொய்.. பொய்.. பொழுதுபோக்குறதுக்காக பேசுற பழுகுற பொய்டா.. இதை உண்மை என்று எப்பிடி நம்புறாய்..?"

"இப்ப பிருந்தா பொய்யா.. நீ பொய்யா..?"

"ம்.. பிருந்தா.. நான்.. மச்சாள் என்றது உண்மை.. அதுக்காக எல்லாம் உண்மையில்லைடா.."

"ஐயோ.. என்ன உண்மையில்லை...?"

"நீ நினைக்கிறது எல்லாம் உண்மை இல்லை.. சிலது உண்மை.. பலது பொய்.."

"ஐயோ.. குழப்புறாய் ஜோதி.."

'லொள்.. குழப்புறது நானில்லை.. சற்.. சற்டா.. பிருந்தாவைபற்றி உனக்கு என்ன தெரியும்.. அவளது படம் பார்த்தியா..?"

"தரமாட்டேன் எண்டுட்டாள்.. தான் நினைக்கும்போது நான் கேட்காமலேயே அனுப்புவாளாம்.."

"லொள்.. ம்... அனுப்புவாள்.. சரி.. அவளைப் பார்க்காமல் எப்படிடா காதல்.. ஒரு பொம்பிளை சற் பண்ணுறாள் என்றால் உடன காதலா.. வேற வேலை இல்லை?"

"அப்பிடி மற்றவங்களைபோல நினைக்காதை ஜோதி.. நான் வித்தியாசமானவன்.. அவளை நான் தேவதையா மனசிலை வைச்சு பூசை செய்யுறன்... உனக்குப் புரியாது.. இங்கை ஜேர்மனிலை இல்லாத பெண்களா.. அழகா.. ஆனால் நான் அவளை பார்க்காமலே விரும்புறன் என்றால்.. அதை உனக்கு புரியவைக்க தெரியேல்லை.. ஆனால் அதைக் கொச்சைப்படுத்தாதை.. ப்ளீஸ்.."

"லொள்.. கொச்சைப்படுத்தேலை ஜோ.. உண்மையை சொல்ல முயற்சிக்கிறன்.."

"சற் பொய் என்றால் நீங்கள் ஏன் சற் பண்ணுறீங்கள் ஜோதி..?"

"வெல்.. வீட்டிலை ஒருவனோடை கதைத்தால் திட்டுவாங்க.. றோட்டில கதைத்தால் நம்ம சனம் வேறைமாதிரி பெரிய கதையெல்லாம் சோடிப்பாங்க.. இல்லையா.. அதனால சற்றிலை தமிழ் பொடியங்களோடை பேசுறேன்.."

"பேசி என்ன பிரயோசனம்..?"

"அவஙகளைபற்றி.. அவங்கட போக்குகளைப்பற்றி.. குணங்களைப்பற்றி ஓரளவாலும் ஸ்ரடி பண்ணலாம்.."

"ஸ்ரடி பண்ணி?"

"யாரோ ஒரு பொடியனோடை வாழப்போறன்.. அதுக்கு இது உதவும்தானே.. லொள்.."

பொய்யிலே ஒரு படிப்பு. ஆகா.. வேடிக்கையாக இருந்தது. எனினும் வித்தியாசமான சிந்தனையாகவும் இருந்தது. அதேநேரத்தில் ஆண்களெல்லாம் பெண்களைக் கண்டு பல்லிளிப்பவர்களென்று படிப்பு முடிவாக்கிவிடுமோ என்று அச்சமாகவுமிருந்தது.

"ஜோ.."

"ம்.. சொல்லுங்க.."

"போகணும்.. அதுக்கு முன்னாலை ஒன்றே ஒன்று சொல்லுறேன்.. பட் சத்தியமா பிருந்தாட்டை சொல்லக்கூடாது.. ஓகே?"

"ம்.. சொல்லமாட்டேன்.."

"அவளை காதலிக்க முதல் அவளின்ரை உண்மையான வயதை கேளுங்கோ.."

"என்ன ஜோதி.. அப்போ பத்தொன்பது வயது இல்லையா?எத்தினை வயது?"

அதிர்ச்சியாக இருந்தது.

எண்ணக் கற்பனையில் தினமும் ஒரு கனவென்ற கல்லெடுத்து எழுப்பிய காதல் மாளிகையில் சிறு நடுக்கம் ஏற்பட்ட பிரமை.

"அதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கோ.. பிறகு காதலிப்பதைபற்றி முடிவு செய்யலாம்.. சீ யூ.."

பதிலுக்குக் காத்திராமல் ஓடிவிட்டாள்.

சிந்தை குழம்பிவிட்டது.

மனம் என்ற குட்டையில் அவள் எறிந்த வயதென்ற சிறிய கல் சஞ்சலங்களை உருவாக்கி என் நிம்மதியைத் தொலைக்க ஆரம்பித்துவிட்டது.

அவளின் வருகைக்காக.. நான் காத்திருந்தேன்.

ம்.. அவள் வருவதற்கிடையில் சாரு வந்துவிட்டாள் தனது பெற்றோருடன்.

-தொடரும்..
- இராஜன் முருகவேல்.


More than a Blog Aggregator

by jai



கருத்துகள் இல்லை: