திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-08

08.11.2008. வன்னியில் உக்கிரமான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் ,இந்த வருட இறுதிக்குள் மேலதிகமாக 10,000 பேரை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் அடைந்த வெற்றிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இராணுவத்திற்கு மேலதிகமானவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும், "ஒக்டோபருக்கும், டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 14,000 இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள நாங்கள் முன்னர் தீர்மானித்திருந்தோம். ஏற்கனவே 3,300 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுவிட்டனர்" எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார கூறினார். 10,000 பேர் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த வருடத்தில் 40,000 பேரை இணைத்துக்கொள்வதென்ற [...]
ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.

மிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும். அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.

இதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின், அதுவும் முடியாது. ஓபாமா ஆட்சியிலும் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பவன் அதைக் குவித்துக் கொண்டே இருப்பான், இழப்பன் இழந்து கொண்டு இருப்பான்;. இது இந்த சமூக அமைப்பின் சொந்தவிதி. அதாவது ஜனநாயகமும், சுதந்திரமும்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


More than a Blog Aggregator

by முத்து தமிழினி
வீ த பீப்பிள் என்றால் நாம் எல்லாரும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். we the people என்ற பதிவர் சமீபத்தில் குழலியின் பதிவொன்றில் குழலி தன் அணியில் சேர்ந்து விட்டதாக புளகாங்கிதப்பட்டுள்ளார். ரொம்ப சந்தோசம். ஏத்தி விடுவதற்கு முன் அந்த செய்தியின் பின்னூட்டங்களில் ஈழத்தமிழன் சொல்லியிருக்கும் அனைத்து விசயங்களையும் மேற்படி தேசியவாதி ஒத்துக்கொள்கிறாரா என்பதை சொன்னால் பரவாயில்லை. அல்லது அவரது தலைவி பாணியில் செலக்டிவ்(?) நச் போடுகிறாரா?

அன்புமணி ஏதாவது ராஜீனாமா செய்து கீய்து விட்டாரா என்று அனைத்து பேப்பரையும் புரட்டி பார்த்தேன். அப்படி எதுவும் செய்தி இல்லை. தீடிரென்று கலைஞர் ஈழபிரச்சினையில் வெறும் அரசியல் தான் செய்கிறார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை.

கலைஞரை தாண்டி நாம் ஏன் சிந்திப்பதில்லை? ஊர் ஊருக்கு எத்தனை தமிழன் போராட்டம் நடத்தி கைதானான்? எத்தனை கட்சிகள் இன்று ஈழத்தமிழர்களுக்காக கச்சை கட்டி நிற்கின்றன? ஒரு பதிவில் பார்த்தேன்.(வீ.எம்). அமீரையும் சீமானையும் பாராட்டினாராம் புலிக்கோ. ஆனால் புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)

ராமதாஸ் தன் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்வதை எது தடுக்கிறது என்று புரியவில்லை. தேர்தலும் நெருங்கும் நேரம். ரொம்ப நஷ்டம் வராது. ஒருவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ரொம்ப படம் காட்டினால் நாளை ஜெயா கூட்டணியில் சேர முடியாதே என்று காய் நகர்த்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன் ஒரு நாடகம் நடத்தியது.ஏதோ ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக என்று உண்ணாவிரதமோ என்னமோ. கடைசியில் அது அதிமுக வுடன் கூட்டணி சேர ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாம். அதையும் விஜயகாந்த் கெடுத்துவிட்டார் :)

ஆக நாம் தமிழர்கள் அனைவரும் யாரையாவது குற்றம் சாட்டி இந்த பிரச்சினையில் நாம் நல்லவனாக முயற்சிக்கிறோம். இருக்கவே இருக்கார் தாத்தா. ஏற்கனவெ வயதாகி குடும்பம் உள்பட யாரையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறார்.போட்டு தாக்கு. எல்லாவற்றையும் கலந்து கட்டி ஊடு கட்டலாம்ல.

இந்த மாதிரி திசை திருப்பல்களை தவிர்ப்பதற்காகவாவது கலைஞர் அரசியலிருந்து விலகிவிடுவது நல்லது.
நேபாளத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி அளிப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளும் படிப்படியாக அரசுப் பள்ளிகளாக மாற்றப்படும் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கினால் கல்வியின் நடைபெறும் பகல் கொள்ளையை தடுக்கலாம். இந்தியாவில் கல்வித்துறைக்கு ஒதுக்கும் பணத்தை முறையாக பயன்படுத்தினால் இங்கேயும் அனைவருக்கும் நல்ல தரமான இலவச கல்வி வழங்கலாம். கல்வி வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்தியாவில் பொதுவுடமை கட்சியினர் ஆளும் மாநில அரசுகளாவது இதுபற்றி சிந்திக்குமா?
நண்பர்களே டெக்னாலஜி குருக்களே கீழே உள்ள நியூஸ் பேப்பரிலிருந்து கட் & பேஸ்ட் செய்ய முடியவில்லை, உதவி செய்வீர்களா ?


08.11.2008. ஓசாமா பின் லேடனின் மகனான ஓமர் பின் லேடன், ஸ்பெயின் நாட்டு அரசிடம் அரசியல் புகலிடம் கோரியுள்ளார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க ஸ்பெயின் அரசு மறுத்து விட்டது. ஓசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவர் ஓமர். 20 வயதுகளில் இருக்கும் ஓமர்,தீவிரவாதத்தைக் கைவிடுமாறு தனது தந்தைக்கு கோரிக்கையும் விடுத்தார். அமைதிக்காக பாடுபடப் போவதாகவும் அறிவித்தவர். சவூதி நாட்டு பாஸ்போர்ட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து அரசிடம் புகலிடம் கோரியிருந்தார் ஓமர். ஆனால் அதை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது. [...]

கருத்துகள் இல்லை: