வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12



More than a Blog Aggregator

by
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட சாதிபிரச்சனை தொடர்பான மோதலில் 2 மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் ரத்தம் சொட்ட, சொட்ட அடித்த கொடூர காட்சி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சியைவிட மோசமானதாக இருந்தது.


More than a Blog Aggregator

by குடந்தைக் குழந்தை
சாமியாரின் மரச்செருப்பு பூசையில. வயசான
மாமியார் வீட்டு மூலையில.

*****************************

வெள்ளை நூல் அது புனிதம்
கொள்ளை போனது மனிதம்.

****************************

சாமிகளுக்கெல்லாம் பாலில் குளியல்
பூமியில் பட்டினிச் சாவுக் குவியல்.

****************************

கங்கை நதி தேசிய மயமாக்கம்
அரசியல் பாவங்கள் கரைக்கப்பட.

****************************

பாரதத்தில் ஏற்றமாம் பாஞ்சாலிக்கு.
பாரதத்தில் அது ஏனோ குற்றமாம்.

****************************

வெட்டியான வீட்டுக்குள்ள விடாதேன்னு சொன்னவரு
வெட்டியான் வீட்டுக்குள்ள வசமா மாட்டிகிட்டவரு.

****************************
நடிகர் ரஜினிகாந்துடன் பேசியது என்ன? என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பேட்டி அளித்தார்.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்,கல்லூரித் தேர்வு நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் , சில மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி வளாகத்தினுள் உள்ள தகவலைக் கேட்டு நிறைய போலிசார் குவிக்கப்பட்டனர். மாலை 5 மணிவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால் 5  மணிக்கு ஒரு பிரிவு மாணவர்கள் கையில் கத்தி,கபடா, அரிவாள், ப்ளேடு,உருட்டுக்கட்டையுடன் கோஷமிட்டனர். இதைப்பார்த்த இன்னொரு பிரிவு மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி இருபிரிவினரும் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு இந்த கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. இந்த தாக்குதலை நிறுத்தாமல் போலிஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இந்தத் தாக்குதலை போலிசிடம் நிறுத்துமாறு கெஞ்ச , அவர்களோ கண்டுகொள்ளாமல் இருந்தனர். இத்தாக்குதலால் மூவர் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளனர். பதிமூன்று பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆறுபேர் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்குக் காரணம் ஜாதிச் சண்டை என கூறப்படுகிறது.

வன்னியில் ஸ்ரீலங்கா படை தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்று வரும் சண்டையில் ஏ - 32 வீதியில் பாலாவிக்கு அண்மித்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா படைதரப்பு கூறுகின்றது.

கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 வயதுடைய நிலாவெளி, 18 வயதுடைய இளவேனி, 19 வயதுடைய துருவேனி ஆகியோர் மற்றைய மூவருமென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவெளி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் ஸ்ரீலங்கா கல்வியமைச்சின் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: