புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15



More than a Blog Aggregator

by We The People
இன்று தான்முத்து தமிழினி யின் இந்த பதிவை படித்தேன். என் நிலை விளக்கம் கேட்டிருந்தார், வேறு யார் கேட்டாலும் பதில் தந்திருப்பேனா என்று தெரியவில்லை! நம்ம முத்து கேட்கும் போது என் நிலையை விளக்க வேண்டும் என்று தோன்றியது! விளக்கம் நம்ம உண்மை தமிழன் மாதிரி ரெம்ப பெருசா போனதாலே தனி பதிவா போட வேண்டியதாயிற்று :)

முதலில் என் ஈழம் பற்றிய கருத்துக்கள் என் முந்தய பதிவி இருக்கிறது! அதை சொடுக்கி பார்க்கவும். நான் ஏழாவது படிக்கும் போதே ஈழ மக்களுக்கும், விடுதலை புலிகளுகும் ஆதரவாக போராட்டங்களில் விடுதலை புலிகளின் கொடி ஏந்தி உங்க தலைவரின் தலைமையில் கலந்து கொண்டவன் தான்! ஆனால் இன்று (ராஜீவ் படுகொலைக்கு பின்பு) நிச்சயம் எனக்கு சில கசப்பு உணர்வுகள் புலிகள் மேல் உண்டு, ஈழ மக்கள் மேல் அல்ல! ஈழ மக்கள் துயர் துடைக்கபட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் யாருக்கு இருக்க முடியாது என்னையும் சேர்த்து தான்! இதற்கு இந்தியா மூலமாக தான் ஒரு முடிவு வர முடியும் என்ற என்னாலும் மறுக்கமுடியாது! ஈழ மக்கள் நிம்மதியாக/அமைதியா வாழ ஒரு இடம் நிச்சயம் தேவை என்பதும், அதற்கு பேச்சுவார்த்தையே தீர்வு என்பதே என் கருத்து!

இப்ப உங்க பதிவில் வந்த சில வாதங்களுக்கு என்று கருத்துக்கள்:

//உனது பிள்ளைக்கும் உற்றார் உறவினருக்க உன் குடும்ப துதிபாடிகளுக்கும் கீழ்சபையில் எம்பி பதவியும் மத்தியில் அமைச்சர் பதவியும் உன்னால் தனித்து நின்று மத்தியரசிடம் வாங்கி கொடுக்கமுடியும் ஆனால் எந்த இனத்தின் பெயாரால் பிழைப்பு நடத்துகிறாயோ அந்த இனத்திற்கு எதாவது நன்மைசெய்யதான் உன்னால் முடியாது.//

நீங்க சொல்லுவதை போல நான் "நச்" போட்டது செலக்டிவ்வான சில விசயங்களுக்கு மட்டுமே! அது சரி செலக்டிவ் என்ற வார்த்தை ஏதோ அந்த அம்மாவுக்கு மட்டும் காப்பிரைட்ஸ் இருக்காமாதிரி எழுதியிருக்கீங்க. நான் யாரை தலைவராக கொண்டிருக்கிறேன் என்று நீங்களா முடிவு செய்வது நல்லதல்ல! அதை நான் தான் சொல்லனும்! கருணாநிதியை திட்டினா, ஜெயா தான் என் தலைவின்னு எப்படி சொல்லுறீங்க! ஜெயலலிதாவையும் திட்டி பல பதிவு போட்டிருக்கேன் அப்படின்ன நான் கருணாநிதி கட்சியா?? என்னய்யா உங்க லாஜிக்...கேட்கும் போதே புல்லரிக்குது!

//we the people என்ற பதிவர் சமீபத்தில் குழலியின் பதிவொன்றில் குழலி தன் அணியில் சேர்ந்து விட்டதாக புளகாங்கிதப்பட்டுள்ளார்.//

எனக்கும் ஏதோ அணி இருப்பதாக ஒரு மாயை தயார் செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி :)

எம்.பிக்கள் ராஜினாமா முடிவை, கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி மீட்டிங் போட்டு முடிவு எடுத்தார்கள் தானே, அப்படி இருக்கும் போது ராஜினாமா செய்ய வேண்டாம் என்ற முடிவையும் அனைத்து கட்சி கூட்டம் போட்டு தானே சார் முடிவெடுக்கனும்! மத்திய அரசுக்கு கொடுத்த முடிக்கு முன்பே உங்க தலைவரே தன்னிச்சையா ராஜினாமா தேவையில்லை என்று முடிவெடுத்தது சரியா?? அப்ப எதுக்கா இந்த நாடகம் என்று கேட்டா என்னை அ.தி.மு.க கட்சியில் நீங்களா கோத்துவிடுவது ஓவரா தெரியல???

//அன்புமணி ஏதாவது ராஜீனாமா செய்து கீய்து விட்டாரா என்று அனைத்து பேப்பரையும் புரட்டி பார்த்தேன். அப்படி எதுவும் செய்தி இல்லை. தீடிரென்று கலைஞர் ஈழபிரச்சினையில் வெறும் அரசியல் தான் செய்கிறார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை.//

//ராமதாஸ் தன் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்வதை எது தடுக்கிறது என்று புரியவில்லை.//

அனைத்துக்கட்சி தலைவர் எவ்வழி, அது போலவே மற்ற கட்சிகளும் செய்யும். அவருக்கு இருக்கும் பதவி வெறி, மற்றவர்களுக்கும் வரக்கூடாதா என்ன?? தமிழின தலைவனே சும்மா இருக்கும் போது, குட்டி தலைவர்களுக்கு என்ன தலை எழுத்தா என்ன??

//கலைஞரை தாண்டி நாம் ஏன் சிந்திப்பதில்லை? //

ஏன்னா அவர் தானே Self Styled தமிழின தலைவர், அப்ப அவரை சுற்றித்தானே கேள்விகள் விழவேண்டும்? அது தானே நியாயம்!

//கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன் ஒரு நாடகம் நடத்தியது.//

அது மட்டும் நாடகம் என்று நன்றாக தெரியும் உங்களுக்கு!! ஏன் உங்க தலைவர் நடத்தும் மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதங்களும் நாடகம் என்று புரியமாட்டிங்குது!!?? ஒரு வேலை இதுவும் செலக்டிவ் வகையை சேருமா??
வன்னி - கண்டாவளைக் கோட்டத்தில் கடந்த 2008.11.13 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.சி.சீராளன் ஏற்பாட்டில் கண்டாவளைக் கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுச் செயலாளர் திரு.செ.புஸ்பராஜா தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூரும் முன்னோடிக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினர், வட்டப் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மாவீரர் செயற்பாட்டுக் குழுவினர் மற்றும் தேசிய போரெழுச்சிக் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல், மாவீரர் துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல் மற்றும் இறுதிநாளில் மாவீரர் தினத்தை எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


More than a Blog Aggregator

by anbagam- a home for hiv affected children
திண்டுக்கலில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து "அன்பகம் காப்பகக் குழு " என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்துள்ளோம் .....
இந்த குழுவின் மூலம் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு மாதமும்,ஒரு குறிப்பிட்ட அளவு நிதி அளித்து , இந்த குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்(milk powder) ,மற்றும் இன்ன பிற உதவிகள் செய்து வருகின்றனர் ....
இராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த துர்கா தேவி என்ற சிறுமிக்கு 10,000 ரூபாயும், தொண்டி சகுபர் அலிக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக 10.000 ரூபாயும் RS.மங்களம் கலந்தர் சிரினுக்கு மருத்துவ உதவியாக 10.000 ரூபாய் உட்பட, கல்விஉதவிகள் 1,00,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி தொண்டி த.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட தலைவர் சாதிக்பாட்ஷா, பொருளாளர் காஜா நஜ்முதீன், மருத்துவ சேவை பொருளாளர் கலந்தர் ஆசிக், அஹமது பாய்ஸ், பசீர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். த.மு.மு.க மாவட்டத்தலைவர் சாதிக் பாட்ஷா நம்மிடம் கூறும்போது எங்கள் அமைப்பு இரத்ததானம், ஆம்புலனஸ் உதவி, கல்வி உதவி உள்ளிட்ட பல சேவைகளை செய்துவருகிறது. உதவிகள் வேண்டுவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். நமது சிறப்புச் செய்தியாளர் : மணிகண்டன்

கருத்துகள் இல்லை: