வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12



More than a Blog Aggregator

by pon.venkat
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br />:: Tamil blogs, news, ezines
ந்திரன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி குல்லு – மணாலியில் அடுத்த சில தினங்களில் தொடங்குகிறது.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

உண்மை நிலவரம் என்ன?

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியான விஜய்குமாரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தோம்.

அவர் கூறியதாவது:

என்ன ஒரு மோசமான கற்பனை பாருங்கள்... சூப்பர் ஸ்டாரின் எந்திரன் உலகளாவிய படம். இந்தியாவின் திரையுலக சாதனையாக சர்வதேச அளவில் பேசப்படப்போகும் படம்.

அதன் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் எந்த சுணக்கமும் நேராமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்த நிலையில் இப்படி ஒரு செய்தியா... வதந்திகள் பற்றிக் கவலை வேண்டாம். எந்திரன் தொடர்பான அனைத்தும் திட்டமிட்டபடி மிகச் சரியாக நடக்கும்... என்றார்.

http://www.envazhi.com



More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
பப்புவிற்கு என்ன பிடிக்கும் என்றும் அவளைப் பற்றியும் எனக்குத்தான் தெரியும் என்று சிலசமயங்களில் பெருமை/பூரிப்பு எல்லாம் வருவதுண்டு! எல்லா அம்மாக்களுக்குமே அந்த பெருமை..நினைப்பு உண்டென்று அறிந்திருக்கிறேன்.

ஏனெனில் யார் வீட்டிற்காவது செல்லும்போது "அவளுக்கு காரம் பிடிக்காது, வேண்டாங்க, அதெல்லாம் சாப்பிட மாட்டா" என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்..ஆனால், அவர்கள் முன் நாம் அந்த சாப்பாட்டு ஐட்டங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்போம்!! அப்போது ஒரு பார்வை வருமே..அப்போது அம்மா/பெரிம்மாவிடமிருந்து!!:-))

ஆம்பூரிலிருந்து பெரிம்மா வரும்போதெல்லாம் பிரியாணியும், மக்கப் பேடாவும் வாங்கி வருவது வழக்கம். இனிப்புப் பெட்டியைப் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நானும் உண்ணத் துவங்கினேன்..பாதி சாப்பிட்ட பப்பு, மீதியை என் வாயில் திணித்தாள். நான் தான் வச்சிருக்கேனே பப்பு, நீ சாப்பிடு என்ற போது,

"நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!" -என்றாள்!!

பப்புவிற்கு ஜிராஃப்பும், சிங்கமும், முயலும் மானும் பிடிக்குமெம்று அறிந்திருக்கிறேன்.
மொறு மொறு தின்பண்டங்கள் பிரியமென்று அறிந்திருக்கிறேன்..ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!



ஒரு சின்னக் கடி: அறிவாள்மனை வெங்காயத்தை பார்த்து பாடினால் என்னப் பாடும்?

யோசிங்க..

யோசிங்க...

விடை:

தலைப்பைப் பார்க்கவும்!! :-))



தமிழில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் நடிகை பாவனா போராடி வெற்றி கண்டு வருகிறார். இதற்காக நடிப்பிலும் பல புதுமைகளை அவர்செய்து வருகிறார்.

அறிமுகப் படமான 'சித்திரம் பேசுதடி' அவரின் நடிப்பை வெளிச்சம் போட்டுக் காட்ட, சமீபத்தில் வெளியான 'ஜெயம் கொண்டான்' படத்தின் மூலம் தனது நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் அவர்.

ஆனாலும், அவருக்கு உள்ள வருத்தம் எல்லாம் கிசுகிசுக்கள் தான். வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகள் அவரைப் பற்றி தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகிறார்களாம்.

ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த கவலைகளை மறந்து வருகிறார். இதற்காக அம்மணி கவிதை எழுதவும் கற்றுக் கொண்டுவிட்டார்.

படப்பிடிப்பு இடத்தில் மட்டுமில்லாமல் வீட்டிலும் தினம் ஒரு கவிதையாவது எழுதி வைத்துவிட்டுத்தான் தூங்கச் செல்கிறார்.

ஒரு கவிதை, கவிதை எழுதுகிறது!

(மூலம் - வெப்துனியா)
" சோ " வளர்க்கும் துக்ளக் கழுதைகளின் புலப்பம். படம்.


More than a Blog Aggregator

by புதியவன்



நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
ஒரு இரவு
ஒரு பகல்
என்னைக் கடந்து செல்கிறது தெரியுமா ?




சொர்க்கம்
நரகம்
எல்லாம்
கற்பனை
என்று தான்
எண்ணியிருந்தேன்
உன் இதழின் ஈரத்தில்
சொர்க்கத்தையும்
உன் விழியின் ஈரத்தில்
நரகத்தையும்
காணும் வரை...




இலக்கணம் மீறி
எழுதப்படும்
கவிதைகள் கூட
சில நேரம்
அழகாகத்தான்
இருக்கின்றன
பெற்றோர் சொல் மீறும்
சில காதலைப் போல....!



நித்தம் நித்தம்
உன் விழிகளைத்
தழுவிச் செல்லும்
இமைகளைப் போல
உன் இதழ்களை
தழுவும் இமையாக
என்னை எப்படியாவது
பொருத்திக் கொள்ளேனடி ...!


கருத்துகள் இல்லை: