திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
போலீஸ் வேலைக்கான எழுத்துதேர்வில் தகுதிபெற்ற வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 2,975 பேருக்கு வேலூரில் இன்று உடல்திறன் தேர்வுகள் தொடங்குகின்றன. தேர்வுப்பணிகள் ஐ.ஜி. தமிழ்செல்வன் மேற்பார்வையில் நடக்கின்றன.

வாலு போயி கத்தி வந்திச்சு டும்டும்டும்... ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் Rajinikanthமுடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். தலைக்கு ஹெல்மெட் மாதிரி வாய்க்கு ஏதாவது ஹெல்மெட் இருந்தால் சொல்லுங்க என்கிற அளவுக்கு வெறுத்து போயிருக்கிறார் ரஜினி.

'கடமையை செய், பலனை எதிர் பார்' இப்படி ஒரு ஸ்லோகனுடன் தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது, பகவத் கீதையில் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று கண்ணன் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை என்ற ரீதியில் கருத்து சொல்லப் போக, கொதித்து எழுந்துவிட்டார்கள் சில இந்து மத அமைப்பினர்.

கருத்து சுதந்திரத்தை குருத்தோடு வெட்டிப்போடும் இவர்கள், இப்போது தனது பேச்சுக்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இலங்கையின் வவுனியா பகுதியில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகளின் விமானம் வருவதாக வெளியான தகவலையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.

"குளங்கள் யாவும் சிங்கள மன்னர்கள் நிர்மாணித்தவை'

-கே. பாலசுப்பிரமணியம், டிட்டோ குகன்-

கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்றுப் பொக்கிஷம். அங்குள்ள குளங்கள் எல்லாம் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்டவை. கிளிநொச்சி பௌத்தர்களின் பூர்வீக இடமென உரிமை கோரினார் தொல்லியல் சக்கரவர்த்தியும் ஹெல உறுமய எம்.பி.யுமான எல்லாவல மேதானந்த தேரர்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பரதர் என்ற இனம் ஆட்சி புரிந்ததாலேயே இந்தியா பாரதம் என்றழைக்கப்படுகின்றது. எனவே, சிங்களவர்கள் ஆளும் நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் வேறு எப்படிக் கூறுவது?

இலங்கைக்கு சிங்களவர்களுக்கு முன் தமிழர்கள் வந்ததாகக் கூறப்படும் கதை விகாரமானது. அதற்கு அடி முடி இல்லை. இலங்கை சிங்களவர்களின் நாடு. ஆனால், அங்கு ஏனைய இனத்தவர்களும் வாழமுடியும். மதம் என்பது ஒன்று. உரிமை என்பது இன்னொன்று.

நாம் இனவாதிகளென்றால் தெற்கில் ஒரு தமிழன் கூட இருக்க முடியாது. தமிழர்கள் தமது தலைவரென போற்றும் செல்வநாயகம் தான் இனவாதி. தற்போது தமிழர்களில் உச்சக்கட்ட இனவாதியாக பிரபாகரனே உள்ளார்.

ஹெல உறுமய இனவாதத்தை தூண்டிய ஒரு சம்பவத்தையேனும் எவராலும் நிரூபிக்க முடியுமா? நாம் தமிழ் அகதி சிறுவர்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்திருக்கிறோம்.

கிளிநொச்சி என்றால் சிவந்தமண் என்று அர்த்தம். கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்று பொக்கிஷம். அது பௌத்த மக்களின் பூர்வீக இடம். அங்கு கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் படிவங்கள் அதனை உறுதி செய்கின்றன.

அங்குள்ள குளங்கள் எல்லாம் சிங்கள மன்னர்களாலேயே கட்டப்பட்டன. அந்த இடத்தை மீட்பதற்குத் தான் இப்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

தினக்குரல்


எத்தனை இரவுகள் நனைந்திருப்பாய்
எத்தனை பகல்களில் உலர்ந்திருப்பாய்
உலர்ந்து போன உன்னில்
உறைந்து போயிருக்கும்
என்னின் சோகங்களை
சோகங்களின் ஈரங்களை
ஈரங்களால் கரைந்து போயிருக்கும்
என் வாழ்வின் வசந்தங்களை
எப்படிப் புரியவைப்பேன் அவளுக்கு

என்னை சந்தேகித்திருந்தால்
ஒரு வேளை சகித்திருப்பேன்
என் அன்பையல்லவா சந்தேகித்துவிட்டால்
பொறுக்க முடியவில்லை என்னால்
ஆண்கள் அழுவது அவமானம்
என்று சொல்லும் நானே அழுதிருக்கிறேன்
அழும் என் கண்களே
கரைந்து போகும் அளவிற்கு

நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?
நான் அழுத கண்ணீரை
'தலைணையே'
உனையன்றி யாரறிவார்....!

கருத்துகள் இல்லை: