வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-14

உருப்புடாதது அணிமா அண்ணன் செஞ்ச முத உருப்புடாத காரியம் என்ன இந்த மாதிரி உருப்படியான பதிவெழுத கூப்பிட்டதுதான்.சத்தியமா சொல்றேன் எனக்கு பிரவுசர உட்டா எந்த உருப்பிடியான மென்பொருளும் தெரியாதுங்க.

இருந்தாலும் ஒரு லிஸ்ட்.

mozila firebox - என்னோட பேவரிட் பிரவுசர், அதுனாலயே தங்கமணி IE தான் உபயோகிக்கிறாங்க.

vlc media player : எந்த video வையும் பிளே பண்ற ஒரு பிளேயர்.

e-kalappai தமிழ்ல பிளாக் எழுத எனக்கு பயங்கர உபயோகமா இருக்கு.

www.uptoten.com - இதுவும் ஒரு மென்பொருள் கணக்கில எடுத்துக்கங்க, ஒன்று முதல் பத்து வயது வரை உங்க வீட்ல குழந்தைங்க இருந்தா, நல்ல கதை,விளையாட்டு, வரைதல் எல்லாமே இருக்கு. குறிப்பா பூவா& குவாளா கேரக்டர் கதைகள்.

என்னையெல்லாம் எழுத கூப்பிட்ட எங்க அணிமா அண்ணனை மன்னிச்சு விட்டிருங்க.

வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமாய் தவமிருந்து + அழகி

ஆனால் தமிழில் இது வரை இப்படி எந்த படத்திலும் வாரணம் ஆயிரத்தில் சொன்னது போல முழுமையான திரைகதை சொல்லி இருக்கிறார்களா??

அதுவும் ஒரு குடும்பத்தின் இரு தலைமுறையின் கதைகளை எந்த வித நெருடலும் இல்லாமல் ??

வாரணம் ஆயிரம் -- தமிழில் இது வரை இப்படி ஒரு கதை திரைகதையோடு முழுமையான படம் வந்து இருக்குமா?

ஆயிரம் யானைகள் பலத்தோடு சூர்யா ...............

'நேருக்கு நேரி'ல் பார்த்த சூர்யாவா பிதாமகனில் இப்படி கலக்கினார் என்று இதுவரை சொன்னோம்??!!

இனி பிதாமகனில் நடிப்பில் ஒரு படியை தாண்டிய சூர்யா போல்வால்ட் ஜம்பில் பல சிகரங்களை தாண்டி இருக்கிறார்..

சூர்யா சான்ஸே இல்லை... 15 வயது முதல் 30 வயதை தொடும் ஒரு பாத்திரம்.. 20 முதல் 60 தொடும் அடுத்த கதாபாத்திரம்.. எவ்வளவு கனசக்சிதமாக செய்து இருக்கிறார்.. அதுவும் முதல் பாதியில் காதல் காட்சிகளில் வாவ் சும்மா கலக்கி இருக்கிறார்...



காட்சிக்கு காட்சி எத்தனை வித்யாசம்..எத்தனை வித வித மான உறுத்தாத அதே நகைசுவை கலந்த இதமான நடிப்பு..

எத்தனை விதமான நடிப்பு வித்யாசங்கள்....

கூடவே தன் உடலை காட்சிக்கு ஏற்றவாறு எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறார்.. அதுவும் தன் வயதை பாதியாக குறைத்து 15 வயது டீன் ஏஜ் மாணவனாக சூர்யா ...இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத முயர்ச்சி.. வெகு அழகாக எந்த வித உறுத்தலும் இல்லாமல் அப்படியே ஸ்கூல் போகும் பையன் போல இருக்கீங்க..


ஜோதிகா மேடம் சாருக்கு இன்னும் 108 நாளைக்கு தினமும் திருஷ்டி சுத்தி போடுங்க....

இது வரை தமிழ் சினிமாவில் சொல்லபடாத கதை...ஒரு குடும்பத்தின் இரு தலைமுறையை எந்த வித ஜோடிப்பும் இல்லாமல் அழகான திரைகதையில் சொல்லி இருக்கிறார்கள்.


அதுவும் முதல் பாதி ஜெட் வேகம் கூடவே வெகு அழகான காதல் கதை.... அழகான சமீரா ரெட்டி.. அழகான அமெரிக்கா....கூடவே அழகான அருமையான பாடல்கள். ரத்தினவேலின் ஒளிப்பதிவு..மிக மிக அருமை.. எடிட்டர் ஆண்டணியும் மிகவும் கடின உழைப்பு உழைத்து இருக்கிறார்.

ஹாரீஸ் சார் அது என்ன கெளதம் படத்துக்கு மட்டும் சூப்பர் ஹிட் பாட்டுகளாக போட்டு கொடுக்கிறீங்க.. பாடல்கள் கேட்க்க மட்டும் அல்ல பார்க்கவும் மிக நிறைவு.

தாமரை + ஹாரீஸ் + கெளதம் கூட்டணியில் இன்னும் ஓர் மகுடம்..

சிம்ரன், ரம்யா @ திவ்யா என எல்லாரும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்கள். இவர்களில் ஸ்கோர் செய்வது சமீரா ரெட்டிதான்..

கெளதம் சார் நீங்க என்னை போல திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்..நம்ம பசங்களை போல நீங்களும் நம்ம காலேஜை இன்னமும் மறக்கவில்லை.. ரொம்ப நன்றி சார்..

தில்லியில் வரும் காட்சிகளில் விஜய்காந்த் படங்களில் வருவது போல இந்தி ஆட்களிடம் தமிழில் பேசும் அபத்தம் இல்லை மாறாக மொழி தெரியாமல் இருந்தாலும் காட்சிகளை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்து இருக்கிறார்கள்..

கூடவே கதை நகரும் எல்லா இடங்களிலும் நாம் படத்தை மட்டும் ரசிக்கிறோம்..

தல அஜித் இந்த படத்தை பார்த்து விட்டு ஏண்டா கெளதம் மேனன் படத்தை மிஸ் செய்தோம் என்று நொந்து போய் இருப்பார்..

வாரணம் ஆயிரம் உண்மையான ஆயிரம் யானைகள் பலத்தோடு...
தமிழில்: அனுசூயா சிவநாராயணன் ஒரு குரங்கு -விளாடிஸ்லாவ் கொடசேவிச் ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கலத்தில்: விளாடிமிர் நபோகோவ் அன்று வெப்பம் தகித்தது பெரும் காடுகள் பற்றி எரிகின்றன நேரம் தன் கால்களைப் புழுதியில் இழுத்தது பக்கத்து முற்றத்தில் ஒரு சேவல் கூவுகின்றது. நான் தோட்டத்துப் படலையைத் திறக்கும் போதுதான் கவனித்தேன் தெருவோரத்து பெஞ்சின் மீது ஒரு சேர்பியன் தூங்கிங்கொண்டிருக்கிறான் மெலிந்தும் கறுத்துமிருந்த அவன் மேனியில் பாதி திறந்த மார்பில் ஒரு பெரிய வெள்ளிச் சிலுவை வழியும் வியர்வையை பாதை மாற்றி விட்டது அவன் தலைக்கு மேலே வேலியில் அமர்ந்து சிவப்பு அங்கி அணிந்த ஒரு குரங்கு பசியுடன் தூசி படர்ந்த இலைகளை மென்றுகொண்டிருந்தது. சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த தோல்பட்டி அதன் கழுத்தை [...]

ஐஸ்லாந்து என்ற பணக்கார நாடு திவாலாகின்றது, என்ற செய்தி கேள்விப்பட்டு பல சர்வதேச ஊடகங்கள் ஐஸ்லாந்தை மொய்த்தன. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் காட்சியை படம் பிடிக்க ஓடோடி வந்தன. ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறாத படி ஐஸ்லாந்து மக்கள் தமது நிதி நெருக்கடியை மறைத்துக் கொண்டனர். தாம் வாங்கிய வீடுகளுக்கு இரண்டு மடங்கு கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், தொழில்களை இழந்தபோதும், இறக்குமதி பொருட்கள் அருமையாக கிடைத்த போதும், உள்ளூர் மதுவை குடித்து நெருக்கடியை தமக்குள் மறைத்துக் கொண்டனர்.

தற்போது வரும் செய்திகளின் படி திவாலான பொருளாதாரத்தால் செய்வதறியாது தவிக்கும் ஐஸ்லாந்து அரசானது, அமெரிக்க தேசங்கடந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இயற்கைவளத்தை விற்க முன்வந்துள்ளதாக தெரிகின்றது. அலுமினியத்தின் மூலப்பொருளான பொக்சீட்டை, ஐஸ்லாந்தின் இயற்கையான பனி ஆறுகளால் சுத்திகரித்து, அலுமினியத்தை பிரித்தெடுக்கும் கம்பெனிகளுக்கு, ஐஸ்லாந்தின் சில பகுதிகள் தாரை வார்க்கப் பட்டுள்ளன. மிக இரகசியமாக நடந்துள்ள இந்த ஒப்பந்தமானது, ஐஸ்லாந்தை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்தும் மூன்றாம் உலகைப் போல மற்ற வழி வகுத்துள்ளது.
மூலப்பொருளான போக்சீட்டில் இருந்து அலுமினியத்தை பிறப்பதற்கு ஆகும் செலவு, பிரேசிலை விட ஐஸ்லாந்தில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தவிச்ச முயல் அடித்த கதையாக, பொருளாதார நெருக்கடியால், பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்தை அமெரிக்க அலுமினியம் கம்பனிகள் பயன்படுத்துகின்றன.

ஐஸ்லாந்தின் இடதுசாரி இயக்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, ஐஸ்லாந்து அரசுக்கெதிரான போராட்டமாக முன்னெடுத்துள்ளன. வெகுஜன போராட்டத்தில்
செங்கொடிகளும் பயன்படுத்தப்பட்டது, ஐஸ்லாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேசத்தை திவாலாக்கிய ஐஸ்லாந்து வங்கிகளை கொளுத்துவோம், என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறாத, அந்த ஆர்ப்பாட்ட வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
.



முன்னைய பதிவுகள் :
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
< ?xml version="1.0" encoding="UTF-8" ?>Burned Feeds for kalaiy

14.11.2008. கியூபாவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் நலமுடன் இருப்பது ரஷ்ய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. தற்போது 82 வயதாகும் காஸ்ட்ரோ, அந்தப் புகைப்படத்தில் நின்ற நிலையில் காட்சியளிப்பதாகவும், அவரது வெண்ணிற தாடி சீர்செய்யப்பட்டு உள்ளதுடன் அவரது சிகையலங்காரமும் கம்பீரமாக காணப்படுவதாக ரஷ்ய ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் மூத்த அயலுறவு விவகார அதிகாரி கிர்ரில் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஹவானாவில் கட்டப்பட்ட தேவாலயத்தை [...]

கருத்துகள் இல்லை: