செவ்வாய், 11 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-10

அமெரிக்கத் துணை தூதரகம் அதிரடி நடவடிக்கையாக சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமாரை(35), அமெரிக்கா செல்ல ஆயுள்கால தடை விதித்துள்ளது.


என் இனிய வலைத்தமிழ் மக்களே,..

உங்கள் பாசத்திற்குரிய அதிஷா மீண்டும் மெரினா பீச்சின் சுண்டல் பாக்கட்களுடனும் மாங்காய் கீத்துக்களுடனும் வந்திருக்கிறேன்.. ( டே நாயே மேட்டர சொல்லு என்று நீங்கள் கேட்பது புரிகிறது ) .

வெகு நாட்களாக சென்னையில் பதிவர்சந்திப்பு நடத்தலாமென ஒரு யோசனை இருந்தாலும் , அதற்கு சரியான நேரம் வாய்க்க காத்திருந்தோம் . ஏனென்றால் பல புதியபதிவர்கள் மற்றும் பிரபல பதிவர்கள் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி இருப்பது தெரிகிறது . விரைவிர் பிரமாண்டமான பதிவர்பட்டறை அதி விரைவில் நடக்க இருக்கும் சூழலில் , இப்பதிவர் சந்திப்பு மிக முக்கியத்துவம் பெருகிறது .

அதனால் இந்த வார இறுதியில் சென்னையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பை நடத்த பல மூத்த பதிவர்களின்(அது யாருனுலாம் கேட்டா வீட்டிற்கு ஆட்டோ வரும் ) ஆலோசனைப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சந்திப்பில் பழம்பெரும் பதிவர் '' பாரி அரசு ''( வரும்போது பழம் கொண்டு வரவும் பெற்றுக்கொள்வார் ) . இவர் சிங்கப்பூரிலிருந்து எழுதிவரும் பதிவர் . நம்மை காண அங்கிருந்து வந்திருக்கிறார்.

இது தவிர நண்பரும் பிரபல பதிவர் மற்றும் எழுத்தாளருமான திரு.பரிசல்காரன் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார் .

மேற்ச்சொன்ன பதிவர்கள் தவிர இன்னும் பல பிரபல பதிவர்கள் மற்றும் சில எழுத்தாளர்களும் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
இச்சந்திப்பில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . புதிய பதிவர்கள் தயக்கமின்றி இச்சந்திப்பில் கலந்து கொண்டு பதிவுகள் குறித்த சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம் .

பதிவர்கள் தவிர பதிவுலக வாசகர்களும் கலந்துகொண்டு தங்கள் மனம் விரும்பும் பதிவர்களை நேரில் சந்தித்து உரையாற்ற இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் .

இதுதவிர இச்சந்திப்பில் இதுதான் பேசவேண்டும் என்கிற எந்த விடயமும் குறிப்பாக இல்லை , எது வேண்டுமானாலும் பேசலாம் , விவாதிக்கலாம் .

சந்திப்பு குறித்த விபரங்கள் :

சந்திப்பு தேதி : 15-11-2008 சனிக்கிழமை

நேரம் : மாலை 5.30 லிருந்து - 8.30 வரை (அல்லது அதற்கு முன்பும் முடியலாம் )

இடம் : மெரினா பீச் காந்திசிலை பின்புறம் உள்ள தண்ணீரில்லாத குட்டை அருகில் .
*இச்சந்திப்பு அனைவருக்குமான சந்திப்பு அதனால் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு...

மின்னஞ்சலில் - dhoniv@gmail.com

அலைப்பேச - அதிஷா - 9884881824
லக்கிலுக் - 9841354308
முரளிக்கண்ணன் - 9444884964
வாங்க மக்கா மெரினாவில் சந்திக்கலாம்...
தவறு.11.
சிறு நீர், மலம் கழிக்கக் குழந்தைகள் அவசரப்படுத்தும்போது திட்டுவது

காரணம்
சிறுநீர் மற்றும் மலத்தை தேவையான நேரம் வரும் அடக்குவதற்கு சில தசைகளின் ஒத்துழைப்புத் தேவை. ஆனால் இத்தசைகள் 3 வயது வரை குழந்தையின் கட்டுப்பாட்டிற்கு வராது. ஆகவே தேவையான நேரம் வரை அடக்குவது குழந்தைகளால் இயலாது.

தீர்வு
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

தவறு.12.
இரவில் படுக்கையில் சிறுநீர் போய் விடுவதை திட்டுவது மற்றும் கேலி செய்வது

காரணம்
3வயது வரை படுக்கையில் சிறுநீர் போய்விடுவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன
1.சிறுநீரை அடக்குவதற்கான தசைகள் கட்டுப்பாட்டிற்குள் வராமல் இருப்பது
2.அதிகப்படியான பயம் மற்றும் அச்சம் கலந்த சுபாவம்
3.குழந்தைகளின் பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு
4.வியாதி உ.தா: காய்ச்சல்
மேலும் கேலி செய்வதால் இந்தப் பழக்கம் அதிகமாகும். அதற்குப் பதிலாக அன்பும், அரவணைப்பும் இப்பழக்கத்திலிருந்து விடுபட உதவி செய்யும்.

தீர்வு
1.மேற்கண்ட காரணங்களில் ஏதேனும் ஒன்றால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறாரா என ஆராய்ந்து அதற்கான தீர்வு காணுங்கள்.
2.இரவு படுக்கும் முன் திரவ உணவுப் பொருளைத் தவிர்த்து விடுங்கள்.
3.நடு இரவில் ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள்.
4.அன்பும் அரவணைப்பும் வழங்குவது.
மேற்கண்ட வழிகளில் தீர்க்க முடியாமல் 3 வயதிற்கு மேலும் இப்பழக்கம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.


தவறு.13.
பாலுறுப்பில் கையை வைத்துக்கொண்டு இருந்தால் திட்டுவது.

காரணம்
எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் திட்டுவதால் திருத்த முடியாது. திட்டும்பபோது, "அப்படி என்னத்தான் இருக்கிறது இந்த செயலில், அம்மா/அப்பா திட்டுகிறார்கள்" என்று எண்ணி அந்தச் செயலின்மீது மேலும் ஆர்வம் அதிகரிக்கும்.

தீர்வு
1.ஆடை எதுவும் அணிவிக்காமல் சும்மா விடும்பொழுதே இந்த மாதிரி பழக்கம் ஏற்பட காரணமாகிறது. ஆகவே ஆடை இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க விடாதீர்கள்.
2.ஆடைகள் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
3.தினமும் 2 நேரம் குழந்தைகளைக் குளிக்கவையுங்கள்.
4.'பால் உறுப்பில் அடிக்கடி கை வைத்தால் அழுக்கு ஒட்டி புண்ணாகும் 'என்று சொல்லுங்கள். 'நான் சின்ன வயதாக இருக்கும்போது எனது நண்பன் X இப்படித்தான் செய்து புண்ணாகி ஆஸ்பத்திரி சென்று 10 நாள் ஊசி போட்டார்கள்' என்று சொல்லுங்கள்.

மரு.இரா.வே.விசயக்குமார்
ல்லதைக் கெட்டது என்றும், அநியாயத்தை நியாயம் என்றும் வெகுஜன ஊடகங்களில் தனது வக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் நோயுள்ளத்துக்குச் சொந்தக்காரரான இந்த ஞானி யார்..?

இதோ அவரை நன்கு அறிந்த ஒரு பிரபலத்தின் வரிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...

ஒரு விதத்தில் இதுதான் அவருக்கு முறையான அறிமுகமும் கூட!


போலி ஞானிகள்!

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…

கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவு பார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…

புலிகளின் சீருடை போட்டுக் கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்து விட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்ட சிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்…
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

------- ------ -----
------- ------ -----

…எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம்!

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!
எங்களால் முடியாது!

நன்றி: கவிஞர் அறிவுமதி

குறிப்பு: இந்தக் கவிதை ஞானியின் இரட்டை... அல்ல அல்ல... பன்முக வேஷத்தை உரித்துக்காட்ட கவிஞர் அறிவுமதி எழுதியது. எழுதப்பட்ட நோக்கம், சூழல் மற்றும் எழுதியவர் இயங்கும் தளம் வேறாக இருந்தாலும், ஞானி என்ற போலி பகுத்தறிவுவாதியின் நிஜ முகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்ட வரிகள் இவை.

கவிஞருக்கு மீண்டும் நன்றி!
http://www.envazhi.com

பா.ராகவன்

தீவிரவாத இயக்கங்கள், குற்றவாளி, அரசியல் அமைப்பு பற்றிய குறிப்புகள் என்று வாசகர்களின் தேடலுக்கு கிழக்கு பதிப்பகம் சங்கம்மாக இருக்கிறது. குற்றவாளிகளை ஹீரோவாக்காமல் அவர்கள் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் தனி சிறப்பு கிழக்கு பதிப்பக நூல்களுக்கு உண்டு. பா.ராகவன் அவர்கள் எழுதிய 'டாலர் தேசம்', 'பாக்- ஒரு புதிரின் சரிதம்', '9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி' நூல்களை படித்ததில் இருந்து அவர் எழுத்துக்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. இந்த நூலும் அப்படி தான். சர்வதேச கடத்தல்க்காரன் 'பாபிலோ எஸ்கோபர்' பற்றிய வரலாறு.

பெரிய கொள்கையோ லட்சியமோ எதுவுமில்லை. பணம் மட்டும் தான் குறிக்கொள். அதற்காக எதையும் செய்பவன். யாரையும் கொல்ல தயங்காதவன் . நாலாயிரத்து மேற்ப்பட்டவர்களின் மரணத்துக்கு நேரடியாக சம்மந்தப்பட்டவன். கொலும்பியா அரசாங்கத்தை அச்சுருத்திய தனி மனிதன் பாபிலோ எஸ்கோபர்.

கார் திருடனாக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு கொகெய்ன் கடத்தலில் ஈடுப்படத் தொடங்கினான். கொலும்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பியாவுக்கும் 'கொகெய்ன்' கடத்தலில் அதிக லாபம் சம்பாதித்தான். தன் கடத்தல் முகத்தை மறைக்க அரசியலில் இறங்கி எம்.பி யாக பொறுப்பேற்றார். ( நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இவர் தான் முன்னோடி )

தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 20 நாள் கேஷூவல் லீவு, ஆறு மெடிக்கல் லீவு. 50 வயதில் ஓய்வுதியம், பி.எஃப், பென்ஷன் போன்ற எல்லா வசதிகளும் உண்டு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் கடத்தல் தொழிலை கார்ப்பிரேட் நிறுவனத்தை நடத்துவது போல் நடத்திக் கொண்டு இருந்தான். தன் கடத்தலை தடுக்க நினைத்த அரசு அதிகாரி, போலீஸ், நீதிபதி உட்ப்பட யாராக இருந்தாலும் பட்டியல் போட்டு கொளை செய்துள்ளான்.

எஸ்கோபரின் கொகெய்ன் கடத்தலால் அமெரிக்க இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால், அவனை கொலை செய்ய சி.ஐ.ஏ மேற்க் கொண்ட நகைச்சுவை நடவடிக்கைகளை அழகாக பா.ராகவன் அவர்கள் சொல்லியுள்ளார்.

எல்லா கடத்தல்க்காரர்களும் ஒரே மாதிரி தான். எஸ்கோபர் மட்டும் அப்படி என்ன பெரிய வித்தியாசமானவனாக இருக்க முடியும் என்று நினைத்தேன். தன் சமந்தப்பட்ட கோப்புகளை அழிக்க எம் - 19 இயக்கத்தின் உதவியுடன் நீதிமன்றத்தை முற்றுக்கையிட்டு, பல நீதிபதிகளை கொன்று கோப்புகளை அழித்தான். பல கடத்தல்க்காரர்களுக்கு அவனுடைய வாழ்க்கை பயணம் தான் 'வெற்றி கைட்' (Guide).

தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் முதல் முறையாக அவனுடைய ஒன்பது கோடி ரூபாய் சரக்கு எங்கு போனது என்று அவனுக்கேதெரியாது. அதற்காக கவலைப்படும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை. Search Bloc சுட்டுக் கொள்ளப்பட்டு பரிதாபமாக இறந்தான்.

தொன்னூறு ஆரம்பத்தில் இருந்த பயங்கரவாத கடத்தல்காரனை பலர் மறந்திருக்க கூடும். என்னை போன்ற புது வாசகர்கள் எஸ்கோபர் யார் என்று கூட தெரிந்திருக்காது. எல்லா வாசகர்களுக்கு புரியும் படி பா.ராகவன் எழுதிருப்பது தான் இந்த நூலின் தனி சிறப்பு. ஆரம்ப முதல் முடிவு வரை ஒரு கதை விளக்குவது போல் நன்றாக விளக்கியிருக்கிறார்.

பக்கங்கள் : 224 ,
விலை : 90.
கிழக்கு பதிப்பகம்

கருத்துகள் இல்லை: