திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07

அம்பாறை மாவட்டம் தம்பிட்டிய என்னும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 12.45 மணியளவில் விடுதலைப்புலிகள்  பதுங்கியிருந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 3சிறிலங்கா அதிரடிப்படைவீரர் உட்பட 4பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 அதிரடிப்படைவீரர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின்போது இராணுவத்தினரிடமிருந்து

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 04

ரவைக்கூடு - 12

ரவைகள் - 180

கோல்சர் - 02

தொலைத்தொடர்பு சாதன கருவி தொகுதி - 01

உள்ளிட்ட இராணுவ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் தரப்புத் தகவல்களின்படி 2 ஊர்காவல்படையினரும் ஒரு பொலிஸாரும் பலியானதாகவும் ஒரு ஊர்காவற்படை வீரர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் 

--
People Of Thambiluvil www.thirukkovil.com

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை படையினர் இரவு வேளைகளில் பெயர் பட்டியலுடன் வீடுகளுக்கு சென்று விசாரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இருமருங்கினையும் உள்ளடக்கியதாக கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் படையினர் புதிய இராணுவம் முகாம்களை அமைத்துள்ளனர். இப்படைமுகாம்களிலிருந்து இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்றே முன்னாள் போராளிகளை தேடிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களையே படையினர் இவ்வாறு தேடிவருகின்றனர். இவர்களில் சிலர் இறந்துள்ளனர். ஏனையோர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் வேளையில் அவர்கள் இராணுவத்தினரால் இரவு வேளைகளில் தேடப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கிரான்குளம் பகுதியில் இரவு வேளையில் ஓடாவி வேலை செய்து கொண்டிருக்கையில் அங்கு வந்த படையினர் இரு இளைஞர்களை கடுமையாகத் தாக்கி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். எனினும், படை முகாமிலிருந்து வரும் எவரும் வெளியில் செல்லவில்லை என படையினர் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு இளைஞர் ஒருவர் கடத்தி செல்லப்பட்டார். இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது எனினும் தாங்கள் எவரையும் கடத்தவுமில்லை, கைது செய்யவுமில்லை என இராணுவத்தினர் தெரிவத்த போதிலும் ஐந்து தினங்களின் பின்னர் அந்த இளைஞன் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, இப்பகுதிகளுக்கு பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிளில் வரும் படையினர் வீதியால் செல்லும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை தீவிரமாக விசாரிப்பதுடன் அவர்கள் மீது சந்தேகமென்றால் முகாமிற்கும் அழைத்து செல்கின்றனர். படையினரின் கெடுபிடிகளினால் நாளாந்தம் மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

--
People Of Thambiluvil www.thirukkovil.com

1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!

3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க
பிழைச்சுடுவீங்க

5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களை சந்தித்த பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினையை பற்றிக் கேட்டபோது மு. கருணாநிதி அவர்களால் வழங்கிய பதில்கள்.

கேள்வி:-  பா.ம.க. தலைவர் கோ.க. மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப் புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் நேற்றைய தினம் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற கோணத்தில் பார்ப்பது சரியல்ல என்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்:-  விடுதலைப்புலிகள் பற்றி தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் பற்றி ராஜீவ் காந்தி மறைவுக்கு முன், மறைவுக்குப்பின் என்று இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை நான் இன்றல்ல,  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேரவையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். போர் நிறுத்தம் என் பதிலே கூட - போர் நிறுத்தம் என்பது போரிலே ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யக்கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

அதனால் தான் இலங்கைப்பிரச்சினை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்தி வைக்கப்பட்டு - நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக் கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட 

--
People Of Thambiluvil www.thirukkovil.com

அம்பாறை மாவட்டம் தம்பிட்டிய என்னும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 12.45 மணியளவில் விடுதலைப்புலிகள்  பதுங்கியிருந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 3சிறிலங்கா அதிரடிப்படைவீரர் உட்பட 4பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 அதிரடிப்படைவீரர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின்போது இராணுவத்தினரிடமிருந்து

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 04

ரவைக்கூடு - 12

ரவைகள் - 180

கோல்சர் - 02

தொலைத்தொடர்பு சாதன கருவி தொகுதி - 01

உள்ளிட்ட இராணுவ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் தரப்புத் தகவல்களின்படி 2 ஊர்காவல்படையினரும் ஒரு பொலிஸாரும் பலியானதாகவும் ஒரு ஊர்காவற்படை வீரர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் 

--
People Of Thambiluvil www.thirukkovil.com

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களை சந்தித்த பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினையை பற்றிக் கேட்டபோது மு. கருணாநிதி அவர்களால் வழங்கிய பதில்கள்.

கேள்வி:-  பா.ம.க. தலைவர் கோ.க. மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப் புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் நேற்றைய தினம் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற கோணத்தில் பார்ப்பது சரியல்ல என்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்:-  விடுதலைப்புலிகள் பற்றி தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் பற்றி ராஜீவ் காந்தி மறைவுக்கு முன், மறைவுக்குப்பின் என்று இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை நான் இன்றல்ல,  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேரவையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். போர் நிறுத்தம் என் பதிலே கூட - போர் நிறுத்தம் என்பது போரிலே ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யக்கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

அதனால் தான் இலங்கைப்பிரச்சினை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்தி வைக்கப்பட்டு - நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக் கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட 

--
People Of Thambiluvil www.thirukkovil.com

கருத்துகள் இல்லை: