வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-14





வேலைக்காகப்
போனீங்க இன்டர்வ்யூ,
ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
எங்களுக்கு இன்டர்வ்யூ!
*

நலுங்காமல் நாலு வயசில்
நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!
நாலைந்து நோட்டுதான்
நாலாவது வகுப்பு வரை.
*

எம் மழலை மாறும் முன்னே
ப்ளே ஸ்கூல் அறிமுகம்!
வருஷங்கள் ஆக ஆக நிரம்பி
வழிகின்ற புஸ்தகங்கள்.
*
அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?
*

ஏழாவது வகுப்பிலே நீங்க
வாசிச்ச விஷயமெல்லாம்
எல்கேஜியிலேயே நாங்க
யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
*

இருபது வயசிலே நீங்க
வியந்து பார்த்த மானிட்டரிலே
இப்போதிலிருந்தே நாங்க
புகுந்து கேம் ஆடறோம்.
*

கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*

கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.
*** *** *** *** ***

குழந்தையின் குரலாய் நம்பிக்கை கவிதையை
அனுப்பி வைத்த ராமலக்ஷ்மிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்





சென்னையில் இருந்து தமிழ் அலை

அன்பு நண்பர்களுக்கு

புலம்பெயர்ந்து வாழுகிற நண்பர்களில் பலர் சமூக உணர்வோடு இணையங்களில்
எழுதியும், இயங்கியும் வருகின்றனர். அவற்றில் பல அச்சு நூல்களாகி தமிழ்
மக்களின் பார்வைக்கு செல்ல வேண்டிய தகுதி மிக்கவை. அப்படியான தகுதியோடு
எழுதுகிற தோழர்களின் கருத்துகள் அச்சு நூல்களாக தமிழ் உலகின் பார்வைக்கு
செல்ல முழுமையான பங்களிப்பை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது தான்
தமிழ் அலை ஊடக உலகம்.

விரைவில் செந்தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து தமிழ் அலை
செயல்பட உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்வமிக்க அன்பர்கள் தொடர்புக்கொளுங்கள்.

ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குங்கள்

மிக்க தோழமையோடு
இசாக்
தமிழ் அலை

--
I.Ishaq
Thamiz Alai Media World
http://www.thamizalai.blogspot.com
Cell: +91 9786218777
+971 50 4804113
+971 55 4804113
¾?¢?? ???? §???? ¾?¢? ¾?? ???? §?÷


சமைக்கத் தெரியும் என்கிறாய்
துவைக்கத் தெரியும் என்கிறாய்
வீட்டை அழகு படுத்தத் தெரியும்
என்கிறாய். ஆனால்,
முத்தமிடத் தெரியாது என்கிறாய் எப்படி ?
நான் இதற்கு முன் சமைத்திருக்கிறேன்
துவைத்திருக்கிறேன் 
வீட்டை அழகு படுத்தியிருக்கிறேன்
அதனால் தெரியும்
ஆனால்,  
இது வரை யாரையும்
முத்தமிட்டதில்லை
அதனால் தெரியாது என்கிறாய் !
மேலும் உனக்கு முத்தமிடத்தெரியுமா ?
என்று என்னை வேறு கேட்கிறாய்
இதற்கு நான் என்ன பதில் சொல்ல....?

நண்பர்களே...

இந்தப் புறக்கணிப்பு தேவைதானா... இவ்வளவு தீவிமாக, பகிரங்கமாக நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா என்று நம்மைக் கேட்ட நண்பர்கள் கூட இப்போது, 'விடக்கூடாது. ஒரு கை பார்த்துவிடலாம் இந்த விஷமிகளை!' என்று சொல்லும்அளவுக்கு நாளுக்குநாள் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்டு வருகின்றன இந்த பத்திரிகைகள்.

தினமலர் – விகடன் புறக்கணிப்பு குறித்த ரசிகர்கள் மற்றும் ரசிகரல்லாத வாசகர்களிடமிருந்து தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தவண்ணமுள்ளன. இவர்களில் சிலருடைய விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலமும் ரசிகர்கள் - வாசகர்கள் தங்கள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவை அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு நாளைய பதிவில் வெளியிடப்படும். இதற்கென்ற தனி பகுதி ஒன்றும் ஒதுக்கப்படும்.

அடுத்து ஒரு விளக்கம்...

தினமலர் – விகடன் புறக்கணிப்பை பகிரங்கமாகக் கோருவதால் அதுகுறித்து சில மிரட்டல் பாணி மின்னஞ்சல்களும், தொலைபேசி எச்சரிக்கைகளும் நமக்குக் வந்துள்ளன. அவர்களின் விவரமும் தனியாகத் தரப்படும்.

நமது நோக்கம் தெளிவானது. தினமலர்- விகடன் குழுமத்துடன் நமக்கு நேரடி மோதலோ, கொடுக்கல் வாங்கலோ கிடையாது!

யார் சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் என்ன... நடுநிலையாகக் கொடுக்க வேண்டியதுதானே அவர்களின் கடமை...? ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, பல லட்சம் மக்கள் படிக்கும் ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம்.

ரஜினி எதிர்ப்புச் செய்திகளை மட்டுமே அவர்கள் பிரதானப்படுத்துகிறார்கள். ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக கருத்துத் திரிப்புகளை வெளியிடுவதில் மட்டுமே தனி கவனம் செலுத்துகிறார்கள். எனவே ரசிகர்கள் சார்பில் காட்டப்படும் காந்தீய வழியிலான எதிர்ப்பு இது.

இது அவர்கள் போட்டுக்கொடுத்த ரூட்டுதான்!

ரஜினி என்பவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல... சினிமா என்கிற ஒரு தொழிலையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்பவர். தன்னால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும் அவர், தன் பின்னால் உள்ள மக்கள் சக்தியை ஒருபோதும் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதவர். அத்தகைய மனிதருக்கு எதிராக வேண்டுமென்றே இன துவேஷத்தையும், தனிமனித தாக்குதல்களிலும் இவ்விரு பத்திரிகைகளும் இறங்கியதாலேயே, ரசிகர்களின் கோபத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நாடறிந்த ஒரு நல்ல மனிதரையே இந்த அளவு குறிவைத்து, பாரபட்சமாக செய்தி வெளியிடும் இவர்கள் எப்படி பொதுநலத்துடன் செயல்படுவதாக நம்ப முடியும்... சமூக விரோதிகளுக்கும் இந்த நடுநிலையற்ற பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ரசிகர்களின் கோபம் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்பதை இந்த இரு பெரு வியாபாரிகளுமே நன்கு புரிந்தவர்கள் என்பதால் உடனடியாக அவர்களைக் குளிரவைக்கும் முயற்சிகளில் இறங்கக் கூடும்...

பாக்கெட்டை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்!!

-என்வழி

ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என நாகர்கோவிலில் இல.கணேசன் பேட்டியளித்தார். 

கருத்துகள் இல்லை: