வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-13

 

     1917ம் ஆண்டு நவம்பர் 7 உலக வரலாற்றில் போற்றத்தக்க சாதனைகளை தன்னுள் கருக்கொண்ட நாள். முதன்முதலாக பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்ட நாள். சுரண்டல் ஒழிந்து சுரண்டப்பட்ட மக்கள் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியதிகாரத்தை புரட்சியின் மூலம் தூக்கி வீசிவிட்டு தோழர் லெனின் தலைமையில் உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரஷ்யாவின் மொத்த வளங்களும் நாட்டுடமையாக்கப்பட்டன. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கைப்பற்றி வைத்திருந்த பண்ணைகளின் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மக்கள் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. திட்டங்கள் தீட்டப்படவும் அதை செயல்படுத்தவும் கூடிய அதிகாரம் பெற்றவையாக அந்த மன்றங்கள் செயல் பட்டன. தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களிடமே தரப்பட்டது. அதுவரை தனிமனிதனின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலை மாறி மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டது. அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டது. உலகப்போரினால் நிம்மதியிழ‌ந்து அமைதியற்றிருந்த மக்களுக்கு லெனின் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தம் மகிழ்சியை ஏற்படுத்தியது....

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அறிவித்தார்.

http://vinavu.wordpress.com/2008/11/13/tmstar4/

பல கருத்துகளுடன் உடன்பட்டாலும், சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. உதாரணம்
//பொறியியல், மருத்துவம் போன்ற வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள்.//

அதே போல் சில கருத்துகள் முற்றிலும் தவறானது
//தலித் மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். //

மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து, பணம் இல்லை என்பதால் யாரும் படிக்காமல் இருக்கவில்லை.

தமிழகத்தில் மருத்துவக்கல்லூரியில் SC மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று தெரியாதா.

பிற செலவுகளுக்கும் உதவ பலர் தயாராகவே உள்ளனர்

இந்த மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள்
http://www.payanangal.in/2008/07/blog-post_26.html

அவருக்கு உதவி கிடைக்கிறது
http://daseindia.blogspot.com/2008/11/doctors-participating-in-educational.html

இது ஒரு உதாரணம் தான்.

No tags for this post.

Related posts

  • No related posts.
புரியப் படாத பிரபஞ்சத்தின்
இயக்கத்தின் ஒரு புள்ளியான
நமக்கு பிரபஞ்சத்தைக்
காப்பாற்றும் வேலை......??

களைத்துக் கிடந்தவன் வந்து
இளைப்பாறத் தோள் எனும்
களம் கொடுத்துக் கனிவுடன்
களைப்பாற்றுங்கள்

மணல் எடுத்து
மணல் கொடுத்துப்
போவதைத் தவிர
வேறொன்றறியேன்
எனும் கடல் அலை
போல அன்பு செய்யுங்கள்

சுவர்கள் நடுவில் வாழும்
மனங்களை சுவர் உடைத்து
வெளிக் கொணரும்
சூழ்ச்சிகளைக்
கண்டு பிடியுங்கள்

மூச்சு விட முடியாத
கண்ணாடிக் குடுவைக்குள்
மாட்டிக் கொண்ட மீன்களை
விழுங்கும் மீன்களாய்.....
மனிதர்களைத் தின்னும்
மனிதர்களாய் மாறிக் கொண்டிருக்கும்
மனிதர்களை மீன் உருவிலிருந்தும்
கண்ணாடிக் குடுவையிலிருந்தும்
வெளிக் கொணருங்கள்

எதைத் தொலைப்போம்
அடுத்தது எனத் தெரியாமலே
ஒவ்வொன்றாய்த்தொலைத்து
முகம் தொலைத்து முழுதாய்த்
தொலைந்து போகும் முன்
மனிதம் காப்போம்....

மனத் திருப்தி மகத்தான பலம்.
அது கொண்டு ஊற்றெடுக்கும்
அளவிலாச் மனச்சக்தியைப் பெருக்குங்கள்
அனல் சக்தி பெறுங்கள் வைக்கும்

வெடிகுண்டுகள் பூக்காடாகும்
வித்தைகண்டு பிடியுங்கள்
தேசம் தொலைத்த மக்கள்
உலகம் தொலைக்கும் முன்
கண்டு பிடியுங்கள்
முயன்றால் முடியாதது இல்லை

பிரபஞ்ச்சத்தின் கோடி நட்சத்திரங்களின்
முதல் ஒளித்துகள்
எங்கிருந்துபுறப்பட்டது
பயமில்லாமல்?
முயன்றால் முடியாதது இல்லை

வீழும் விழுதுகளுக்குத் தெரியாது
மரம் தாங்குவது அதுவென்று.....
அப்படித் தாங்குங்கள் பிரபஞ்சத்தைத்
தன்னம்பிக்கையென்னும் விழுது கொண்டு....
முயன்றால் முடியாதது இல்லை


More than a Blog Aggregator

by sharehunter


இன்னொரு சந்தேகம் என்ற கவலை வேண்டாம். இது சற்றே ஆக்கபூர்வமான ஒரு விடயம். அண்மைக்காலமாக ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் குரல் குடுப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது.

வெளிநாடு வந்த எம்மவர்களில் சிலரே எம் மக்களின் துயரை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் போது, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய, நன்றி சொல்ல கூடிய ஒரு விடயம்.

இது நாள் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காட்டிய ஆதரவு எனும் பலம் எம் தமிழக சகோதரங்கள் மூலமும் வர ஆரம்பித்திருப்பதையிட்டு மகிழாமல் இருக்க முடியுமா? அரசாங்கங்கள், தலைவர்கள் என்பதை தள்ளி வைத்து விட்டு, 'எம்மினம்' / 'மனிதாபிமானம்' என சிந்திக்க ஆரம்பித்திருப்பது ஈழத்தில் தினமும் அல்லல் படும் உறவுகளுக்கு நிச்சயம் ஓர் இனிப்பான செய்தி தான்.

"எமக்கு யாருமே இல்லையா?" என்பதற்கு; "நாம் இருக்கின்றோம்" என தமிழகம் உரக்க சொல்லிக் கொண்டிருக்கின்றது. இப்போராட்டங்கள் எந்த அளவுக்கு அரசாங்கங்களின் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதை குறிப்பிடும் அளவிற்கு எனக்கு அரசியம் ஞானம் இல்லை. ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு இது ஓர் பெரும் பலமே. "நாம் அநாதைகள் இல்லை" என்ற எண்ணம் எத்தனை பெரிது என்பது அவர்களால் மட்டுமே உணர முடியும் என்பது என் கருத்து.

அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என உட்காராமல் தாமே எழுச்சியில் பங்குபெறும் உறவுகளின் அன்பிற்கு ஈடேது. போராட்டங்களில் கலந்து கொள்ளும் உறவுகள் கைதாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் தொடரும் பங்களிப்புகள் கண்டு மலைத்து போகின்றேன். போரில் பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவது பெரிதல்ல. போரினால் பாதிக்கப்படாத உறவுகள் போராடுவது நிச்சயம் பெரிது தான்.

அங்கு அவர்கள் ஒன்றும் சொர்க்கத்தில் வாழவில்லையே. அரசியல்கட்சிகள், மின்சார பிரச்சனை, விலையேற்றம், மக்கள் தொகை, வேலை, இப்படி பல தலைவலிகள் அவர்களுக்கு இருந்தும்; ஈழத்தில் சாவது என் உறவடா, நான் அக்கிரமங்களை எதிர்த்து கேள்வி கேட்பேன் என வருவது என்பது இலகுவான காரியமா!!!

'நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்' என சொல்வதோடு நிற்காமல் எமக்காக குரல் குடுக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் எமக்கு தெரிந்த முறையில் நன்றி தெரிவிக்க வேண்டும். அண்மையில் கூட தமிழகத்தில் எமக்காய் குரல் குடுத்த மாணவர்களுக்கு, கனடாவில் இருக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்திருந்தார்கள். இப்படியான நன்றி அறிவிப்புகள் நிச்சயம் வேண்டும்.

எமக்காக கைது, மழை என எதையும் பொருட்படுத்தாது நிற்கும் எம் தொப்புள் கொடி உறவுகளை 'நன்றி' எனும் ஒரு வார்த்தையில் பிரிக்கலாமா? 'அன்பான நன்றிகள்' என சொல்லலாமா?

உலகெங்கும் போராட்டங்கள், பேரணிகள், எழுத்துக்கள் என பல வழிகளிலும் ஈழத்தில் அல்லல்படும் உறவுகளுக்காக குரல் குடுக்கும் அத்தனை உறவுகளுக்கும் ஈழத்து மக்கள் சார்பாக நான் சொல்ல விரும்புவது 'அன்பான நன்றிகள்'

கருத்துகள் இல்லை: