வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-11

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமில்லாமல் இயங்கும் வரை பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மன்மோகன் சிங்தெரிவித்தார். எந்த அரசாக இருந்தாலும், மானியம் கொடுப்பதற்கென்று ஒரு அளவு இருக்கிறது. அதனை கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது. எனவே நஷ்டமில்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் இயங்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான் என்றார். எப்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களால் மானியம் கொடுக்காமலும் இயங்க முடிகிறதோ, அது தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சரியான நேரமாக இருக்கும். மூன்று நாள் பயணமாக அரபு நாடுகளுக்கு சென்றுவிட்டு புதுடில்லி கிளம்பி வந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பத்திரிக்கையாளர்களிடையே பேசிய சிங், இவ்வாறு தெரிவித்தார். இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விற்பனையின்போது லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் டீசல் விற்பனையில் தொடர்ந்து நஷ்டம்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசு அதிகப்படியான மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. எனினும் எவ்வளவு காலத்திற்குதான் மானியம் கொடுப்பது என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது என்றார். இப்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்கும் போதும் ரூ.4.12 லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் டீசல் விற்கும்போது ரூ.0.96 நஷ்டமடைகின்றன.
நன்றி : தினமலர்

"நவம்பர் 11"

இந்நாள் வெகு முக்கியமான நாள் - இந்நாளில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆந்திர மாநிலத்தில் (11.11.2004 வியாழன் இரவு) கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜெயேந்திர சரஸ்வதிமீது குற்றப்பிரிவு 302, 120-பி, 34, 201 (கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்யான சாட்சி களைச் சமர்ப்பித்தல், கொலை) ஆகியவை சுமத்தப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. காலதாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு என்றெல்லாம் வித்தாரமாகப் பேசப்பட்டாலும் நடைமுறையில் தாமதிக்கப்பட்ட தீர்ப்புகளாகவே உள்ளன.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கோ 16 ஆண்டுகாலமாக நீதிமன்றத்தால் அடைகாக்கப் படுகிறது. அதன் எதிர்வினையாக மும்பையில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணமாக இருந்தவர்கள் எல்லாம் தண்டிக் கப்பட்டு விட்டனர்; மூலவழக்கு - மூலக்கிரகத்தில் பத்திரமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலத்திலே வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார் சங்கராச்சாரியார். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு புதுச்சேரிக்கு வழக்கு மாற்றப் பட்டது.

தமிழக வழக்கறிஞர்கள் அரசு சார்பில் வாதாடக் கூடாது என்று ஒரு வழக்கு - உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்து, நீண்ட காலத்திற்குப்பின் தூக்கம் கலைந்து, சங்கராச்சாரியார் கோரிக்கை ஏற்கப்பட்டது.

அதற்குப் பிறகும் வழக்கு வக்கணையாகத் தானிருக்கிறது. விசாரணைகள் தொடங் கப்படவில்லை! இதற்கிடையே புதுவை அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு புது வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். அது மர்மமாகவே இருக்கிறது.

எந்த ஒரு விசாரணைக்கும் வராமல், ஏதாவது ஒரு காரணம் சொல்லி லோக குரு தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்பொழுது ஊர்வலம், நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏதோ சாதனை வீரர் ஒருவர் வருவது மாதிரி வண்ண வண்ணமாக வரவேற்புச் சுவரொட்டிகள் இவருக்கு! பதாகைகள் வேறு!

ஆன்மிகக் குருவே வருக! இந்து மதத்தின் காவலரே வருக என்று காரைக்கால் வட்டாரத்தில் பராக்குகள் கூறும் சுவரொட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்கும் ஏதாவது ஊறுகாய் அளவுக்காவது தொடர்பு உண்டா? அதுதான் கிடையாதே!

நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. தண்டனை இருக்கட்டும் - விசாரணை நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது!

---------------- மயிலாடன் அவர்கள் 11-11-2008 "விடுதலையில் எழுதிய கட்டுரை

More than a Blog Aggregator

by திகழ்மிளிர்

அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று

குசேலன் படுத்துவிட்டாலும் ,அதைச்சுற்றிய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. நஷ்டப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என சூப்பர்ஸ்டார் அறிவித்த பின்னும்  , தற்போது தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் குசேலனை  எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தி இருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. என்ன காரணம் என கோடம்பாக்கத்தை தோண்டிப்பார்த்ததில் :- விசயம் இது தான் குசேலன் தமிழ்நாடு முழுவதும் படுத்துக் கொண்டாலும் ஒரு சில தியேட்டர் உரிமையாளர்களுக்கே ரஜினி  பணத்தை வழங்கியுள்ளார். முக்கால்வாசி தியேட்டர் உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. குறிப்பாக அதிகம் விலை கொடுத்து, அதிகம் நஷ்டப்பட்ட வட ஆற்காடு, கோவை, திருச்சி போன்ற இடங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களை கண்டு கொள்ளவேயில்லை. இதனால் இவர்கள் அனைவரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நவம்பர் 13-ஆம் தேதி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் அண்ணாமலைத் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படுமெனத் தெரிகிறது. கொசுறு செய்தி: கோடம்பாக்கத்துக்குசும்பன் நம் காதில் இன்னொரு செய்தியை போட்டார். ரஜினி பணம் கொடுத்ததாக கூறும் தியேட்டர் உரிமையாளர்கள் பொய் கூறுகிறார்கள். உண்மையில் ரஜினி யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. அடுத்த படத்தை ரஜினியிடம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் தங்களது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் -----என்றார். நமக்கு தலைச் சுற்றியது தான் மிச்சம்

கருத்துகள் இல்லை: