புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15

முதலில் மத்திய சுகாதார அமைச்சருக்கு நன்றி சொல்லியே
ஆகவேண்டும்.இது தனி மனித உரிமையின் குறுக்கீடு என்ற
போதிலும் இந்த முடிவினால் பெண்கள், குழந்தைகள் புகை பிடிக்காதோர் மிக்க பயன் அடைவர்.

அதிலும் இப்போதைய இளைய சமுதாயம் புகை பிடித்தலை ஒரு அந்தஸ்தாகவே நினைக்கும் ஒரு கேவல நிலையில் உள்ளனர்.
இச் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் சில தடுமாற்றம் இருக்குமெனினும், சில மாற்றம் கண்டிப்பாய் நிகழும்.

இந்த மாதிரியான புகைத் தடை அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா-விலும் போன மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஏச்சுபேச்சு-க்கிடையில் புகைமட்டு படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது ஒரு முன் மாதிரியான சட்டம்.இதுவெற்றி அடைந்தால் இயற்கைக்கே வெற்றி.
காற்றை சுத்தமாக்குவோம்.....???
புகைக்கு எதிரான ஒரு விளம்பரம்.....கீழே!

அன்புடன்,
முகு
அதிர்ச்சி அடைய வேண்டாம் மக்களே...உண்மை.

ஒவ்வொரு மாதமும் புதுவை அருகில் உள்ள "பஞ்சவடி"ஆஞ்ஜநேயருக்கு 1000லிட்டர் பால் ஊற்றி அபிசேகம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருளை பாழக்குகின்றனர் இதன் நிர்வாகிக‌ள்.

இவர்களை பக்தர்கள் என்பதை விட அயோக்கியர்கள் என்றுதான் கூற வேண்டும்.ஊரில் எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது....இவர்களின் செயலை வேறு எப்படி கூறுவது.
ஒரு லிட்டர் பால் 12ரூபாய்....ஆக ரூ.12,000/= பாலை அத்தியாவசிய பொருளை வீணாக்குவது குற்றம் தானே...

ரசிகர்கள் தான் தங்கள் கட்‍ அவுட் கதாநாயகனுக்கு பால்ஊற்றி அசிங்கம் செய்வதை பார்த்திறுக்கிறோம்.ஆனால் இந்த செயலை என்னவென்று சொல்வது....

ஒருசில தினசரிகள் இந்த பால் படத்தையும் பத்திரிகையில் போட்டு பக்தர்களை பாழாக்கி கொண்டுள்ளன.
கடைசி வெறி:
இதில் என்ன கூத்து என்றால், இந்த அபிசேகம் உலக‌ நன்மைக்காக நடத்தப் படுகிறதாம்.
Thanks: Dinamalar Photo
ஆமாங்க....நம்ம இயக்குநர் சிம்புதேவனை தேவலோக
கடவுள்கள் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்களாம்.
ஒவர் பாராட்டு மழையில் குடையே புடிக்க வேண்டியதாப்
போச்சாம்.அவர்கள் எடுக்கும் படத்துக்கு "கால்சீட்'' கேட்டு நச்
அரிப்பு வேறாம்.

இதுல ஒரு தமாசு பாருங்க, எமலோகத்து கடவுள்கள் நம்ம
சிம்பு தேவனுக்கு ''டின்னு'' கட்டிட்டாங்களாம்.ஏன் திருட்டு 'விசிடி' ய எங்களுக்கு அனுப்பலன்னு....கடவுள்களின் தொல்ல தாங்காம ஒடினவர், திடுக்கிட்டு (?) அங்க இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவ்ளோதான் சர,சரன்னு பறந்தவர்....கூவத்துல வந்து தொப்புன்னு....நல்ல வேலை சிம்புதேவனுக்கு ஒன்னும் ஆகலை,விழுந்தது குளிச்சிட்டிருந்த ரெண்டு
பன்றி-யின் மேல என்பதால் அந்த பன்னிகள் எமலோகம் போவ வேண்டியதாப் போச்சு.

இப்ப நம்ம உலகத்துக்கு வருவோம்...."அறை எண் 305-ல் கடவுள்" என்ற நகைச்சுவை படத்துக்கு சிம்பு தேவனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இரண்டரை மணி நேரம் நம்மை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த பிரகாஷ்ராஜ்,சந்தானம்,என அனைத்து நடிகர்களுமே அசத்தியிருக்கின்றனர்.

படத்தின் சின்ன செய்தி:
''உழைத்தால் உயரலாம்"

முக்கிய செய்தி:
IT மக்களா....படம் பாக்கப் போகும் போது கைய பாக்கட்டுல வச்சுகோங்க(உங்க பாக்கட்டுல மட்டும்)....நெறய பேருக்கு விரல் காணாம போயிடிச்சாம்.

சிம்புதேவன் திடுக்கிட்டு விழக் காரணம்:
தேவலோகத்துலயும் நம்ம மலயாளிகள் ''சாயாக் கடை''யும்''சாராயக்கடை''யும் வைத்திருந்ததைப் பார்த்து.?
சட்டசபையில் ஒரு காங்கிரசு உறுப்பினர் கத்திபாரா பாலத்திற்கு நேரு
பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த நாட்டின் சாலைகளுக்கும், பாலங்களுக்கும், கல்லூரிகளுக்கும்,ஆய்வு கூடங்களுக்கும் இந்த பெயர்களை விட்டால் வேறு கிடையாதா?....இந்த நாட்டிற்கு வேறு யாரும் தியாகமே செய்யவில்லையா?...

காங்கிரஸ்காரர்களே இந்த பெயர்களைச் சொல்லி இத்தனை ஆண்டு வியாபாரம் செய்தது போதாதா?தமிழ்நாட்டு பாலத்திற்கு ஒரு தமிழனின் பெயர் வைக்க நமக்கு அருகதை கிடையாதா? அப்படி ஒரு தமிழனும்
தரம் உள்ளவன் இல்லை என்றால் அந்த பாலம் கட்ட வியர்வை விட்ட நம் சகோதரன்"உத்திர பிரசேதம் அல்லது பீகார்" தொழிலாளி பெயர் வைத்தால் கூட பெரு மகிழ்ச்சி அடையலாம்.

அதுவும் நம்ம வூரு காங்கிரஸ்காரர்களுக்கு ரொம்ப பாசம்....இந்த பெயர்களின் மேல்....என்ன செய்ய வாழனுமுள்ள? இன்னும் கொஞ்ஜம் நாள் போனா "ராகுல் பாலம்" வேனும்னு கேட்டாலும்,கேப்பாங்க.....
ஞானசேகரன் என்ற ஒருவன் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்ற போர்வையில் நடமாடிக்கொண்டு இருக்கின்றான். மந்திரி பதவியோ, வாரியத் தலைவர் பதவியோ கிடைக்கும் என்ற நப்பாசையில் தி.மு.கவின் காலை நக்கி கொண்டு இருந்த நாய் அது. அது கிடைக்கவில்லை என்பதால் புலி , ராஜீவ் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு திரிகின்றது அந்த சொறி நாய்.

இப்போது தினமலம் பத்திரிக்கையில் வந்த வாந்தியை வழித்து எடுத்து குடித்து விட்டு சட்டசபைக்கு சென்று கழிந்து விட்டு வந்திருக்கிறது. இது போன்ற சொறி நாய்களை கல்லால் அடித்து வேலூர் மாவட்டம் முழுவதும் ஊர்வலம் விடவேண்டும்.

மக்கள் சேவை என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை Tender மூலம் சம்பாதித்த உத்தமன் தான் இந்த கபோதி. இருக்கிற பணம் பத்தாது என்று நகர உலா போக ஸ்கார்பியோ கார் அரசாங்கம் வழங்க வேண்டுமாம். என்ன கொடும சார் இது!!!.


More than a Blog Aggregator

by வெண்தாடிதாசன்
சட்டக் கல்லூரி பிரச்சனையில் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள் என்று எல்லா பதிவர்களும் போலீஸ் மீது பாய்கின்றனர். போலீசாரால் என்ன செய்ய முடியும். அவர்கள் கல்லூரியின் உள்ளே சென்று இருந்தால், சட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று எல்லா ஊடகங்களும் அவர்கள் மீது பாய்ந்து இருக்கும். எல்லா கருப்பு கோட்டுகளும் வக்கீல்களை தாக்கிவிட்டனர் என்று நாடு முழுவதும் கோர்டுக்கு போகாமல் தர்ணா செய்வார்கள்.

ஏற்கனவே சில முறை போலீசார் சட்ட கல்லூரி பிரச்சனையில் தலையிட்டு மூக்கறுந்த அனுபவம் உண்டு. எதற்கு நமக்கு பொல்லாப்பு என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். ஜாதி வெறி பிடித்த மிருகங்கள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து குதறி கடிபட்டு அழியட்டும்.

ஊசிப் போன பதார்த்தம் ஒன்று சந்தடி சாக்கில் கோட்டா என்று புலம்பி தன் ஜென்ம புத்தியை காட்டி இருக்கின்றது. இவையெல்லாம் என்றுதான் திருந்துமோ தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: