அன்பிற்கினிய பதிவர்களே, தோழமைகளே!
வன்னி பெருநிலத்தில் வல்லாதிக்க நாடுகளின் வழிகாட்டுதலோடு சிங்கள பேரினவாதத்தால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன் தாக்குதலானது... ஒரு முடிவை எட்டியிருக்கிறது.
இறுதிகட்ட போர் என்ற பெயரில் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்திருக்கும் 10,000 முதல் 15,0000 ஈழதமிழர்களின் தடயங்களை மறைக்கவும்... உலகத்தின் பார்வையில் இருந்து திசை மாற்றவும்... போரியல் குற்றங்களை மறைக்கவும்... சிங்கள பேரினவாதம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று வதந்திகளை பரப்பி வருகிறது.
தங்களுடைய அண்ணன், தம்பி, சிற்றப்பா, மாமா, தாய், தமக்கை,... என்று ஏதோவொரு உறவுகளை இழந்து கண்ணீரோடும், வாழ்வின் அடுத்த கணத்தை பற்றிய கேள்வி குறியோடும் திறந்த வெளி சிறைசாலை கூடாரங்களில் அடைப்பட்டு கிடக்கும்... வன்னி மக்களுக்கும்... அவர்களின் உறவுகளாக உலகெங்கும் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயரங்களில் பங்கெடுப்போம். அவர்களுக்கு ஆறுதல் என்பது நம்மிடையே இல்லை... ஆனால் அவர்களை காயப்படுத்தாமல் அமைதியாக இருப்போம்.
பேரினவாதத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே!
உங்களுடைய உறவுகளை இழந்து துயருற்று கிடக்கும் வேளையில்... எம்மால் உமக்கு என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை...!
கடைசி கணம் வரை போராளிகளுடன் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகள் இவர்கள் என்று மடிந்த மக்களை எண்ணி கண்ணீர் வடிப்பதை தவிர என்னிடம் ஏதுவுமில்லை...!
இவ்வளவு துயரங்களுக்கு ஊடாகவும் புலிகள் தங்களால் இயன்றவரை வன்னி மக்களின் மரணத்தை கடைசி சில நாட்கள் வரை பதிவு செய்திருந்தார்கள்... இப்பொழுது இந்த கடமை உங்கள் கைகளில் வந்திருக்கிறது....
வன்னி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி... இறுதி போர் என்று பெயரால் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்த மக்களின் தடயங்களை பதிவு செய்வதும்... அவர்களின் வாழ்க்கை, வரலாற்றை பதிவு செய்வதும் அவசியம்! காலத்தின் கட்டாயம்!.
துயரங்களுக்கு மத்தியிலும் துளி நம்பிக்கையுடன் துடித்தெழுவோம்!
நதியின் பயணத்திற்கு நாணல்களா தடை!
பேரினவாதம் இருக்கும் வரை உரிமைக்கான போராட்டம் தொடரும்!
கண்ணீருடன்...
அரசு

என் துணிவு
நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.
நான் கண்டதை, அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
---------------------சாமிமலையில், 24.1.1960இல் தந்தைபெரியார் அவர்கள் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம். பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன. இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.
முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.
கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...

நம் அனைவருக்குமே பிரபாகரனைப் பிடிக்கும். அல்லது சிறுவயதில் பிடித்திருக்கும். இங்கே முக்கியமாக அனைவர் என்று குறிப்பிடுவது, 25 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளாக இருக்கும் இளைய சமூகத்தினரைப் பற்றி! திக அல்லது திமுக பற்று கொண்ட குடும்பங்களில் பிறந்திருந்தால் ஈழத்தில் நடக்கும் போராட்டம் பற்றியும், பிரபாகரன் யாரென்றும் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். அதாவது, புருஸ்லீ அல்லது ஜாக்கிசான் ஒரு படத்தில் சண்டைப் போட்டால் எப்படி ரசித்து பார்ப்போமோ அப்படி நம் அனைவருக்குமே பிரபாகரன் தேவையாயிருக்கிறார்.பெருமைப்படுவதற்கும், "தமிழண்டா" என்று மார்தட்டிக்கொள்வதற்கும்!
அவர் போரிடுவது/போராட்டத்தை வழிநடத்துவது நமக்கு பார்க்கப் பிடித்திருக்கிறது. உணவு இடைவேளைகளில் உலக அரசியல் பேசும்போது ஊறுகாய் போல ஈழத்தை தொட்டுக் கொள்ள, போராட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ ஓரிரு நிமிடங்கள் பேச!! நான் பார்த்த, சந்தித்த மனிதர்களைக் கொண்டுத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த இரு தினங்களாக எல்லோரும் ஒரு வித பரபரப்புக்குள்ளாவதைக் காண்கிறேன். சேனல்கள் மாற்றிப் பார்ப்பதும், விவாதிப்பதுமாக - எதோ ஒரு தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியைப்
பார்ப்பது போல!
ஆனால் சென்ற வாரம் வரை, இப்படி ஒரு போராட்டமோ,அங்கு இன்னலுக்குள்ளாகும் மக்களைக் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவையோ/பிரக்ஞையோ இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள். "இலங்கையில் சண்டை" என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த மாக்ஸிமம் நியூஸ்! ஆனால், அங்கிருந்து வந்து இங்கு தங்கியிருக்கும் ஈழ மக்கள் குறித்தோ, அவர்தம் வாழ்வு குறித்தோ ஒரு எண்ணமுமிராது (எண்ணினால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றுக் கேட்காதீர்கள்!). ஆனால், நமது முந்தைய தலைமுறைக்கு இதுக் குறித்து இருந்த விழிப்பும், பற்றும், நமது இனம் என்ற சிந்தனையும் இன்றைய இந்த குறிப்பிட்ட தலைமுறையில் இல்லை என்பதே என்னை இப்படி ஒரு இடுகையை எழுதத் தூண்டியது. இங்கும் ஆண்/பெண் வேறுபாடு இருக்கிறது. ஆண்கள், ஓரளவிற்கு அரசியல் ஆர்வம் கொண்டவர்களாயிருந்தால் கொஞ்சமேனும் போராட்டம் குறித்தும் இனஅழிப்புக் குறித்தும் விழிப்புக் கொண்டிருக்கிறார்கள். (இது எனது பார்வை மட்டுமே. பல நண்பர்கள் இரண்டு நாட்களாகக் கூடிகூடி பேசுவதும், இணையத்தை செக் பண்ணுவதுமாக இருக்கும்போது, பெண்தோழிகள் மருந்துக்குக்கூட வாய் திறக்கவில்லை (கஷ்மீர் பிரச்சினையோ அல்லது யூதர்கள் குறித்தோ பேச்சு வந்தால் பிய்த்து உதறிவிடுவார்கள்). அதுவும் சொற்பமே. மேலும், போட்டி நிலவும் பள்ளிச்சூழல், கல்லூரி வேலை என்று எப்போதும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை குறை சொல்லவும் முடியாது போல்!ஆனால், ஈராக்கிலோ,பாலஸ்தீனத்திலோ பிரச்சினை வந்தால், ஆராய்ந்து அலச முடியும் அளவிற்கு ஈழம் குறித்த பார்வை பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. இதில் நானும் அடக்கம்!
தினமும் போராட்டத்தில் இத்தனை பேர் பலி என்று செய்தியில் ஓரிரு வரிகள் கேட்பதோடு முடிந்துவிடுவதும் ஒரு முக்கியக் காரணம். ஆயிரக்கணக்கில் அல்லலுறும் அப்பாவி பொதுமக்கள் குறித்தோ அல்லது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெண்டிர்/ குழந்தைகள் நிலை குறித்தோ எதுவும் சொல்லாத மீடியாக்களும் காரணம். ஈழத்தமிழர்களின் எழுத்துகள் வெகுசன பத்திரிக்கைகளில் வருகிறதாவென்று எனக்குத் தெரியாது. யுகாமாயினியில் தற்போது வருகிறது, ஆனால் எத்தனைப் பேருக்கு அதைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். சந்தரவதனா அவர்களின் "கரண்டி" படைப்பை என் தோழிகளுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறேன்! மீடியாக்கள் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கும் இந்த நேரத்தில், அங்கு நடக்கும் இனப்படுகொலையைக் குறித்தும் பேச வேண்டும். நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும். நாம் எவ்வாறு நமது குழந்தைகள் விளையாடவும், சாக்லேட் ருசிக்கவும் உரிமை இருப்பதாக எண்ணுகிறோமோ அதே உரிமையும் வாழ்வின் சுகங்களும் தமிழர்களாய் பிறந்த/போராட்ட மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக