கோவையில் பயிற்சி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை பெரியார் தி.க. - ம.தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர்... இலங்கை ராணுவத்துக்குத் தேவையான டேங்கர்கள், லாரிகள் மூலம் கோவை வழியே, கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக நினைத்து பயிற்சி முடிந்து திரும்பிய ராணுவ வீரர்களை தாக்கியுள்ளனர்...
அடப்பாவிங்களா... உங்க அரசியல் ஸ்டண்டுக்கு ஒரு அளவில்லையா... ராணுவ வீரர்களை போய் அடிக்கறிங்களே... அப்படியே இருந்தாலும் ராணுவ வீரர்கள் என்ன செய்வார்கள்... தலைமை சொன்னதை தானே செய்வார்கள்...
உண்மையிலேயே உங்களுக்கு இலங்கை தமிழர் மீது பற்று இருந்தால் இந்திய அரசை வலியுறுத்துங்கள் அல்லது இலங்கை ராணுவ வீரர்களை போய் தாக்குங்கள்...அதைவிட்டு நம் ராணுவ வீரர்களிடமா உங்கள் அரசியல் ஸ்டண்டை வைத்துக்கொள்வது...

அகில இந்திய அளவில் அலைகள் ஏதும் இல்லை எனக் கருதப்படும் இந்தத் தேர்தல் நம் முன் சில வாய்ப்புக்களை வைக்கின்றன. அவை:
1.ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையை (governance) மதிப்பிடுவது
2.இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்துவது
3,காங்கிரஸ், பாஜக ஆகியவற்றிற்கு மாற்றாக உருவாகி வரும் அரசியல் வெளியை நிலைப்படுத்துவது (To increase and stabilse a political space for a third alternative)
அலை வீசுகிற தேர்தல்களில் இதற்கு வாய்ப்புக்கள் இல்லை.அலை வீசுகிற நேரங்களில் ஒரு பிரசினை மீது மக்கள் உணர்ச்சி பூர்வமாக உந்தப்பட்டு, ஆட்சிக்கு நேர்மறையாக (உ-ம்:1984 நாடாளுமன்றத் தேர்தல், இந்திரா படுகொலை ராஜீவ் ஆதரவு) அல்லது எதிர்மறையாக (2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் வாக்களித விதம்) வாக்களிக்கிறார்கள் என்பதால் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவோ பன்முகத்தன்மையையோ, மாற்று அரசியல் தளங்களை வலுப்படுத்தவோ வாக்குகள் பலனளிப்பதில்லை. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். இந்தக் கருதுகோளின் அடிப்படையிலேயே நான் வாக்களிக்க இருக்கிறேன்.
அதே நேரம் இந்த முறை நாம் நம் முன் இருப்பவற்றில் சிலவற்றை நீக்குவதன் மூலம் மற்றொன்று தேர்வு (Selection by elimination) பெறும் முறையைத்தான் கடைப்பிடிக்க முடியும்.
எனவே நாம் முதலில் தீர்மானிக்க வேண்டியது யாருக்கு வாக்களிப்பது என்பதை அல்ல. யாருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதைத்தான்.
நம் முன் காங்கிரஸ் தலைமையேற்கும் ஒரு அணி, பாஜக தலைமையேற்ற்கும் ஒரு அணி, கூட்டுத் தலைமை கொண்ட இன்னொரு அணி ஆகியவை உள்ளன.லாலு பிரசாத்தின் நான்காவது அணிக்கு தமிழகம் பங்களிக்கவில்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது. தமிழகத்தில் விஜயகாந்த்தின் அரசியல் கட்சி,யும், வேறு சில கட்சிகளும் வாக்குக் கோருகின்றன. இவை தவிர சுயேட்சைகள் சிலரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆளும் கட்சியாகத் தேர்தலை சந்திப்பதால் நான் முதலில் காங்கிரஸ் அணியை பரிசீலனைக்கு எடுத்துக் கொல்கிறேன். அதனுடைய ஆட்சி, அந்தக் கட்சி, அதன் அணியில் உள்ள கட்சிகள் என்று மூன்று அம்சங்களாகப் பகுத்துக் கொண்டு பரிசீலிக்க விரும்புகிறேன்
ஆட்சி:
சகிக்கமுடியாத சமரசங்கள்
கடந்த ஐந்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சி நிலையானதாக இருந்தது என்பது ஒன்றுதான் அதன் பிளஸ் பாயிண்ட். ஆனால் இந்த நிலைத்த தன்மையைப் பெற அது பலவிதமான சமரசங்களையும் மேற்கொண்டது என்பதும் உண்மை. ஆட்சியைக் காப்பாற்ற அது கூட்டணிக் கட்சிகளுடன் மேற்கொண்ட சமரசங்களை விட அது ஆளுகையில் (governance) செய்து கொண்ட சமரசங்கள் கவலை தருபவை. அணுசக்தி ஒப்பந்தம் ஓர் உதாரணம்.
ஹைட் சட்டத்தின் ஷரத்துக்கள் இந்தியா மீது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றன. அவை இந்தியாவை அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் நிலையில் (accountable to US) வைக்கின்றன. சில இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சுயேச்சையான முடிவுகள் எடுக்க இயலாத நிலையை ஏற்படுத்துகின்றன.அதைவிட மோசம் அமெரிக்கா எடுக்கும் நிலையைக் கட்டாயமாக ஆதரித்தாக வேண்டும் என்கின்றன அப்படி இந்தியா ஆதரிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது ஹைட் சட்டம்.(India is working with and supporting the United States and international efforts to prevent the spread of enrichment and reprocessing technology to any state that does not already possess full-scale, functioning enrichment or reprocessing plants Section 104-b-5, Henry J. Hyde United States-India Peaceful Atomic Energy Cooperation Act of 2006') இந்தச் சட்டப்பிரிவு வெறுமனே working என்று மட்டும் கூறாமல் supporting எனக் கூறுவதையும் கவனிக்க வேண்டும். எனவே ஈரான், கொரியா போன்ற விஷயங்களில் இனி இந்தியா தனித்து முடிவு எடுக்க முடியாது
இதே ஹைட் சட்டம் இந்தியா இனி அணு ஆயுதங்கள் செய்வதற்கும் தடை விதிக்கிறது. அப்படி செய்தால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் சலுகைகளும் ரத்து செய்யப்படும் ("shall cease to be effective if the President determines that India has detonated a nuclear explosive device..." Sec.106) எனத் திட்டவட்டமாகத் தெளிவாகக் கூறுகிறது சட்டம்.
இந்தியா அணு ஆயுதங்கள் செய்யக் கூடாது என்பதுதான் என் நிலையும். ஆனால் அந்த முடிவை நாம் சுயேச்சையாக எடுக்க வேண்டும். இன்னொருவரின் நிர்பந்தத்தின் காரணமாக அந்த முடிவு எடுக்கப்படக்கூடாது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு விரிவாக விவாதிக்க இடமில்லை. ஆனால் ஒரு உதாரணம். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஊடகங்களுக்குச் சில சுய நெறிகள் வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அதுவே அரசுத் தணிக்கை மூலம் வற்புறுத்தப்படுமானல் அதை எதிர்ப்பேன்.
இது இப்படியிருக்க இந்தியா அணு ஆயுத சோதனை செய்ய எந்தத் தடையுமில்லை என பிரதமர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார். ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என பிராணாப் முகர்ஜி சொல்கிறார். ஆனால் காண்டலீசா ரைசின் கருத்து அதற்கு நேர்மாறாக இருந்தது.( It will have to be completely consistent with the obligations of the Hyde Act… ) சரி, ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்ற வைத்துக் கொள்வோம். ஆனால் அது அமெரிக்க ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும். அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில் அவர் அதற்குக் கட்டுப்பட்டவர். அமெரிக்க அரசின் அதிபர் என்ற வகையிலும் கட்டுப்பட்டவர். அப்படிக் கட்டுப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்தியா இன்னென்ன செய்ததா என அறிக்கை அளிக்க வேண்டும் என அந்தச் சட்டம் சிலவற்றை வகுத்திருக்கிறது.அதன் காரணமாக அது இந்தியாவை மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது.
மூடி மறைத்தல்
இதில் சினமூட்டும் இன்னொரு அம்சம் என்னவென்றால் அரசு இந்த ஒப்பந்தம் பற்றி வெளிப்படையாக இல்லை. இத்தனை கடுமையான ஷரத்துக்கள் கொண்ட ஒப்பந்தம் குறித்து, அது கையெழுத்திடப்படும் முன் பெரிய அளவில் விவாதிக்கப்படவோ, மக்கள் கருத்தறியவோ முயற்சிகள் மேற்கொள்ளவில்லை
இதே போன்ற வெளிப்படையான அணுகுமுறையை அது இலங்கை விஷயத்திலும் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காண்கிறோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்ல அதற்குத் தயக்கம் ஏன்? ஆனால் அது அதற்கு மாறாக ஒருபுறம் இலங்கை அரசுக்கு உதவிக் கொண்டு, மறுபுறம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற இலங்கை அரசோடு சமாதானப் பேச்சுகள் நடத்துவது போல பாவனை செய்து கொண்டிருந்தது.
இந்தியாவின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதை அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக் கொண்ட இந்தியா, இலங்கையின் இறையாண்மையில் தான் தலையிட முடியாது எனச் சாக்குச் சொல்வது ஏமாற்று வேலை. இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது என்றால் அதை ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கொடுத்திருக்கலாம், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தாக தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்க முடியுமே?
சேதுக் கால்வாய் திட்டத்திலும் இது போன்ற ஒரு இரட்டை நிலையைப் பார்க்க முடிந்தது. அது உச்ச நீதி மன்றத்தில் முதலில் தாக்கல் செய்த பிரமாண[ப்பத்திரத்தில் ஒரு நிலையையும், பின்னர் அதற்கு நேரெதிரான நிலையையும் மேற்கொண்டது.
அடித்தள மக்கள் மீது அக்கறையின்மை
இவற்றையெல்லாம் விட ஐக்கிய முன்னணி அரசின் மன்னிக்க முடியாத மாபெரும் தவறு அது அடித்தள மக்கள் வாழ்வின் மீது அக்கறை காட்டாமல் ஆட்சி நடத்தியது.அநேகமாக அது அந்த மக்களைக் கைவிட்டுவிட்டது. ஒரு உதாரணம்: அமைப்புசாரா தொழில்கள், தொழிலாளர்கள் குறித்து ஆராய அரசு டாக்டர் சென்குப்தா தலைமையில் அமைத்த National Commission on Enterprises in the Unorganised Sector- (NCEUS) 2007ல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அது இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை 83 கோடியே 60 லட்சம் பேர் என்கிறது. 110 கோடி மக்கள் உள்ள ஒரு தேசத்தில் 83 கோடிப் பேருக்கு மேல் இநத நிலையில் வாழ்கிறார்கள் என்றால் அது அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் பலன்கள் அடித்தள மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
வறுமையை ஒழிப்பதற்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்து, நான் தினமணி ஆசிரியராக இருக்கும் போது அவற்றை வற்புறுத்திக் கட்டுரைகள் வெளியிட்டு வந்தேன். (தினமணி ஆகஸ்ட் 2, 1994) தீர்வுகளில் ஒன்று வேலை உத்தரவாத சட்டம், மற்றொன்று விவசாயம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் (தினமணி ஆகஸ்ட் 2 1994). இதற்கு ஆதரவு சேர்க்க, மேதா பட்கர் போன்றவர்களை பேட்டி கண்டு பிரசுரித்து வந்தேன்
இன்று இந்த இரண்டு தீர்வுகளும் 13 ஆண்டுகளுக்குப் பின் ஏதோ ஒரு வடிவில் நிஜமாகி விட்டன. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் இரண்டும் இந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் வந்துவிட்டன. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசு சொதப்புகிறது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய அதிகாரம் வழங்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்கள் மசோதாவில் குறைந்த பட்சக் கூலி, ஓய்வூதியம் இவை நிர்ணயிக்கப்படவில்லை
வறுமை என்பதை அரசு புத்தகப் பார்வையிலேயே (academic outlook) அணுகுகிறதோ என எண்ணும் விதமாகவே அது நடந்து கொள்கிறது
அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அரசுக்கு ஏதும் தெரியாதோ என்ற கேள்வி அதன் செயல்பாடுகளைக் காணும் போது எழுகிறது. விவசாயிகளுக்கு அது அறிவித்த கடன் தள்ளுபடி ஒரு உதாரணம். வங்கிகளில் கடன் பெற்றுப் பயிர்த் தொழில் செய்யும் 'விவரமான' விவசாயிகளைவிட, தனியார்களிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திணறும் விவசாயிகள்தான் கை தூக்கிவிடப் பட வேண்டியவர்கள். ஆனால் அரசின் கடன் தள்ளுபடி எந்த விதத்திலும் பயன் தராது என்பதுதான் வருத்தமான விஷயம்
ஜனநாயகத்தில் ஒரு நல்ல அரசின் லட்சணம் என்பது, அதன் சுயாதீனம், (soverignity) வெளிப்படையான அணுகுமுறை (Transperancy) பதில் சொல்லும் கடமை (accountability) ஆகியவையே. இந்த மூன்றிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மிக மோசமாகத் தோற்றுவிட்டது. அத்துடன் அது அடித்தள மக்களைக் கை விட்டுவிட்டது
கட்சி பற்றி அடுத்த பதிவில்

இலங்கை பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார், அதை இங்கு தருகிறேன்
அவ்வறிக்கையில், ''விடியலுக்கு முன்பே திருச்சியிலிருந்து எழுதுகிறேன் இந்தக் கடிதம்- அந்த ஏப்ரல் 27 அதிகாலை ஐந்து மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன்.
அதுவரையில் நான் தூங்கிக் கொண்டிருந்தால் அல்லவா; எழுந்து உட்கார்ந்தேன் என்று சொல்ல முடியும். இரவு முழுவதும்தான் உறக்கம் கிடையாதே! இரவு 10 மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. தம்பி கவிப்பேரரசு பேசினார்.
இலங்கையிலிருந்து ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்-இந்தப் பதிலுடன் நிறுத்தி விட்டேன். மீண்டும் இரண்டொரு செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
நல்ல சேதியையே எதிர்பார்ப்போம் என்று ப.சிதம்பரம் சந்திப்புக்குப் பிறகு; நல்லதே நடக்குமென நம்புவோம் என்றீர்களே; அது என்ன ஆயிற்று? என்பதே தொடர்ந்து கேள்விகளாக ஒலிக்கத் தொடங்கின. இன்று ஓர் இரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன்.
என் மனோநிலை இரவு உணவு எடுத்துக் கொள்ள இடந்தரவில்லை. சுருண்டு கொண்டு படுத்தேன். என் அவசர அவசிய உதவிகளுக்காக என்னுடன் இருந்த மருத்துவ நண்பர் ஜம்பு என் முகத்தைப் பார்த்து விட்டு; என்ன தலைவரே; இன்று காலை முதல் ஏதோ கவலையில் இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது "ஒன்றுமில்லை ஜம்பு- உடல் நிலையைப் பற்றிய வேதனைதான் என்று கூறி சமாளித்துக் கொண்டேன்.
ஆனால் என் காதுகளில் கடந்த காலத்தில் என்னுடன் நேச பாசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொதுமேடைகளில் என்னைப் பற்றிப் புழுதி வாரித் தூற்றுகின்ற அந்த ஒலி முழக்கம்; ஓராயிரம் உளி கொண்டு தாக்குவது போலிருந்தது.
தமிழ்ப்பால் குடித்து வளர்ந்து, 13-ஆம் வயதிலேயே எனக்கும் என் போன்ற இளைஞர்கள் சிலருக்கும், தமிழ் வேல் வடித்துக் கொடுத்து;ஓடி வந்த கட்டாய இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!
வாருங்கள் எல்லோரும் இன உணர்வுப் போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும் இந்தித் திணிப்பை விரட்டித் திரும்பிடுவோம் என்று நான் இயற்றிய பாடலை நாள்தோறும், திருவாரூர் தெருக்களில் குழு முழக்கமாக (கோரஸ் பாட்டு) இசைத்துக் கொண்டு, புலி, வில், கயல் பொறித்த கொடிகளைத் தோளில் தாங்கி- இந்தி ஆசிரியரால் அடிபட்டு விரட்டப்பட்டு, அல்லற்பட்ட அந்தக் காலத்திலிருந்து பெரியாரின் பிள்ளையாக அண்ணாவின் தம்பியாக வளர்ந்து விட்ட எனக்கு;
அவர்கள் வழங்கிய வலிமையும், உறுதியும், வாய்மையும் எப்படி என்னை விட்டு அகன்று விடும்? பாலப் பருவம் கடந்தும் பல தடவை;
எனக்குப் பாலுடன் கலந்தூட்டிய என் தமிழுக்காக அளவிட முடியா அடக்கு முறைகளைத் தாங்கியிருக்கிறேன். பாதி இரவில் என்னைக் கைது செய்து, பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில்- மதுரை ராணுவ முகாமில் நான் நெஞ்சு வலியால் துடித்தபோது- சிகிச்சையளித்து, அந்த இரவோடு இரவாக பாளைச்சிறையில் கொண்டு போய்- அங்கே 24 கொட்டடிகள் காலியாக இருக்க - ஒரே ஒரு கொட்டடியில் என்னைத் தன்னந்தனியாக அடைத்து வைத்தார்கள்.
ரெயில் ஓட்டியவர் ஒருக்கணம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்தால்-நானும், முல்லை சத்தியும், கஸ்தூரிராஜும், குழந்தைவேலனும், குமாரவேலனும் கல்லக்குடியில் தண்ட வாளத்தில் தசைக்குன்றுகளாகத்தான் காட்சியளித்திருப்போம்.
தமிழ்காத்திடத் தண்டவாளத்தில் தலை வைத்தமைக்காக அரியலூர் நீதிபதி அளித்த தண்டனை ஆறு மாதக் கடுங்காவல்.
இலங்கையில் 1956-ல் தந்தை செல்வா தொடங்கிய தமிழர் சமஉரிமைக் கானப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அண்ணா முன்னிலையில் சிதம்பரம் பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அதைப் பொன்னம்பலனார் வழிமொழிந்திட- அதனையொட்டி நான் செய்த அறப்போர் முழக்கம் இன்னமும் எல்லோரின் செவிகளிலும் எதிரொலித்துக் கொண்டு தானே இருக்கிறது?
1983-ல் குட்டிமணியைக் குருடாக்கி கொன்று குவித்தபோதும்-ஜெகன், தங்கதுரை போன்றோர் செத்தொழிந்த போதும்- அரை நாள் அறிவிப்பில் சென்னை குலுங்கிட ஆறு லட்சம் பேர் நடத்திய அணிவகுப்புக்குத் தலைமை தாங்கியதும்- அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பய், என்.டி.ராமராவ், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங்,
ராச்சையா போன்றவர்களை மதுரை டெசோ மாநாட்டுக்கு அழைத்து, தமிழ் ஈழம் மலர்வதற்கு வலியுறுத்தியதும்- அதனைத் தொடர்ந்து போராளிகளுக்குள் ஏற்பட்ட பூசல்களால்; சபாரத்தினம் முதல் சமரச சன்மார்க்க சீலராம் அருமை நண்பர் அமிர்தலிங்கனார் வரையில் சவங்களாக்கப்பட்டதும்- இந்தத் தமிழ் நெஞ்சில் ஆணிகள் கொண்டு அடித்து இன்னமும் ரத்தம் வழியும் காயங்கள் அல்லவா?
இந்தியாவின் ஈடற்ற இளந் தலைவர் ராஜீவ் காந்தியை வீழ்த்தி சின்னாபின்னப்படுத்திய பிறகும் - அதற்கு முன்பே சட்டமன்றப் பதவிகளை இலங்கைப் பிரச்சினைக்காகத் துறந்த எனக்கும், எனதருமைப் பேராசிரியருக்கும் எத்தகைய துயரம் ஏற்பட்டு எங்களைத் துவள வைத்தது என்பதை யார் அறிவார்?
வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் "விடுதலைப் போர்'' என்று பெயரிட்டு அழைத்தாலும்-இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார்; களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு!''என்று குறிப்பிட்டுள்ளார்.

கடும் காய்ச்சல் காரணமாக, முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக கடும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு முதுகுதண்டு வட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிதுகாலம் ஓய்வு எடுத்த அவர் மீண்டும் அலுவலக பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த வாரம் அவர் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். போராட்டத்தை 6 மணி நேரத்தில் முடித்துக்கொண்டாலும், அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் அதிக தூரம் பயணம செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
எனினும், திருச்சியில் நடைபெற்ற மே தினவிழா மற்றும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் திருச்சி சென்றார். மாலையில் அங்கு நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, நீண்டதூரம் பயணம் செய்ததான் காரணமாக, நேற்றிரவு முதல்வர் கருணாநிதிக்கு மீண்டும் முதுகுவலி ஏற்பட்டது. கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டது.
இதன் காரணமாக, இன்று காலை 7.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் கருணாநிதி அழைத்துவரப்பட்டார். கடுமையான காய்ச்சல் இருந்ததால், அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்று முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்கு ராயபுரம் சுழல் மெத்தையிலும், இரவு 7 மணிக்கு மயிலாப்பூர் மாங்கொல்லையிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இந்த இரு கூட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)

அரியானா மாநிலம் அகெரா கிராமத்தை சேர்ந்தவர் இஜாஸ்கான். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் படித்து கொண்டு இருந்த அவருக்கும் அரியானா மாநிலம் பரத்பூரை சேர்ந்த இலியாஸ் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை பரத்பூரில் திருமணம் நடந்து முடிந்ததும் மருமகனுக்கு புதிததாக வாங்கிய மாருதி ஆல்ட்டோ காரின் சாவியை மாமனார் இலியாஸ் கொடுத்தார். அதற்கு இஜாஸ் ஸ்கார்ப்பியோ காரும் ரூ.15 லட்சம் பணமும் தந்தால் தான் வாங்குவேன்.அதற்கு குறைந்து எதையும் வாங்க மாட்டேன் என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண் உறவினர்களும் ஊர் மக்களும் இஜாசையும் அவரது தந்தையும் அடித்து உதைத்தனர். இருவரின் தலையையும் மொட்டை அடித்து பணய கைதியாக சிறை வைத்தனர்.
ஊர்பஞ்சாயத்து கூடி ரூ.8 லட்சம்பணம் தந்தால் தான் இருவரையும் விடுவிப்பது என்று முடிவு செய்தது. வேறு வழி இல்லாமல் ரூ.8 லட்சம் கொடுத்தது இருவரும் மீட்கப்பட்டனர். திருமணமும் முறிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக