போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள்.
பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா.
எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா
தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
http://www.boston.com/bigpicture/2009/04/r..._sri_lanka.html
பார்த்திட்டு போயிராதிங்க... கருத்து போட்டுடு போங்கோ
இப்படி சந்தர்பம் இனி கிடைக்காது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இப்பகுதியின் நீண்டகால வாசகர் என்பது குறிப்பிடத்தக்கது
இறக்குவானை மகோற்சவம் நிறுத்தப்பட்ட சம்பவம்பேரினவாதிகளால் தொடரும் அச்சுறுத்தல்வடக்கு கிழக்கில் அல்லது கொழும்பில் பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. பெரும்பான்மை விஷமிகளின் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழர்கள் இருக்கவேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் அவர்களை விட்டகல்வதாய்
These three photos display the present situation in Mullivaikkal, the last stronghold of the LTTE by May 01. They were taken from AP news agency of United States.
The area is considered seven square kilometers. LTTE says that around 100,000 - 120,000 civilians live under their control. Some other pro-LTTE elements say that there are 50,000 civilians. Sri Lanka Army estimates the number some 10,000 to 15,000. Daya Master that surrendered recently says the number of civilians is 10,000.


The area is considered seven square kilometers. LTTE says that around 100,000 - 120,000 civilians live under their control. Some other pro-LTTE elements say that there are 50,000 civilians. Sri Lanka Army estimates the number some 10,000 to 15,000. Daya Master that surrendered recently says the number of civilians is 10,000.


சுவிற்சலாந்திலுள்ள தனது உறவினர்களிடம் சேர இருந்த 14 வயதுடைய இலங்கைத் தமிழ் சிறுவன் மலேசியாவில் அடிமையாக்கப்பட்டு 8 மாதங்களாக வேலைவாங்கப் பட்டார் என்ற திடுக்கிடும் செய்தி அம்பலத்திற்கு வந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த டில்றுக்சன் என்ற இளைஞனே இவ்வாறு பாதிக்கப்பட்டவராகும். சுவிற்சலாந்தில் வாழும் டில்றுக்சனின் பேத்தியான எஸ். புஸ்பரத்தினம் என்பவர் தனது பேரனை சுவிற்சலாந்து கொண்டுவருவதற்காக பரிஸில்வாழும் மலேசிய நண்பரொருவரின் உதவியை நாடியுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த அந்த நண்பரின் ஏற்பாட்டில் மலேசியாவிற்கு அனுப்பட்ட சிறுவன் சாந்தி என்பவரின் மேற்பார்வையில் இருந்தபோதே அவர் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்
தனது பேரன் குறித்த நேரத்தில் வராதது கண்ட பேத்தி புஸ்பரத்தினம் கவலையடைந்து பரிசிலிருந்த தனது மலேசிய நண்பரை அணுகினார். அவர் மேலும் 2000 யூரே தந்தால் பையனை சுவிற்சலாந்துக்குக் கொண்டு வந்து தருவதாகக் கூறினார். ஒரு மாதத்திற்குப் பிறகு மேலும் 3000 யூறோவைத் தரும்படியும் அதை உண்டியல் மூலம் சாந்தி என்பவருக்கு அனுப்பும்படியும் கோரியுள்ளார்.
இந்நிலையில் டில்றுக்ஸ்சன் தனது பேத்திக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தனது உயிருக்கு ஆபத்து வரப்போவதாகக் கூறியுள்ளார்.
பேரனின் தொலைபேசித் தகவலில் அச்சமடைந்த புஸ்பரத்தினம் ஏப்ரல் 26 மலேசியாவுக்கு சென்று மலேசிய இந்தியக் காங்கிரஸ்சின் உதவியை நாடினார். மலேசிய இந்தியக் காங்கிரஸ் அங்கத்தவரான ஜி.குணம் என்பவரது உதவியுடன் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மலேசியப் பொலிஸாரும் எம்சிஐ என்று சொல்லப்படும் மலேசியன் இந்தியன் காங்கிரஸ்சும் சேர்ந்து நடாத்திய தேடுதல் வேட்டையில் அடிமையாக்கப்பட்ட 14 வயதுடைய டில்றுக்சன் சென்துல் பஸார் என்ற உல்லாசப் பிரயாணிகள் விடுதியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் இரு அகதிகடத்து முகவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய இந்தியக் காங்கிரஸ்சின் இளையோர் நலன்புரி இணைப்பாளர் ரி.மோகன் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், இந்த இளைஞனுக்காக சுவிற்சலாந்து விசா எடுப்பதற்கு 15000 யூறோ பணமாகக் கொடுப்பதற்கு ஒழுங்காகி இருந்தது. பணம் கொடுக்கப்பட்ட பின்பே சிறுவன் மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளான். மலேசியா கொண்டுவரப்பட்ட சிறுவன் சாந்தி என்பவரின் மேற்பார்வையில் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளான் என கூறியிருந்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், டில்றுக்சன் தன்னைப் பொறுப்பெடுத்த பெண்ணான சாந்தி தன்னை அடித்ததாகவும் தன்னை வீட்டுவேலைகளைச் செய்ய எட்டுமாதங்களாக நிர்ப்பந்தித்ததாகவும் கூறினார். தன்னைப் பல வீடுகளுக்கு அழைத்தச் சென்று வேலை வாங்கியதாகவும் தான் தனது பெற்றோருடனும் பேத்தியுடனும் கதைக்கக் கேட்டபொழுது தன்னை மிரட்டியதாகவும் டிலிறுக்சன் கூறினார் என்றார்.
மலேசியாவில் Selangor என்ற இடத்தின் CID உதவித்தலைவர் Datuk Hasnan Hassan அகதி கடத்து முகவரும் அவரது மைத்துனரும் 30 வயதே மதிக்கப் படுபவர்கள் என்றும் அவர்கள் ஆட்கடத்தல் சம்பந்தமாக இப்பொழுது குற்றச் சாட்டப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டிலுள்ள 'ஹிரோஷிமா' நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் 'சின்னப் பையன்' (LITTLE BOY) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து 'நாகசாகி' நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு 'குண்டு மனிதன்' (FAT MAN) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். 'இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்' என்று ஆய்வறிக்கை கூறியது.
அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.
"அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை" என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.
'எனோலாகே' என்ற விமானம் 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை காலை 8.15 மணீக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது .அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான 'பால்டிப்பெட்ஸ்' என்பவரின் தாயார் பெயர்தான் 'எனோலாகே' என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.
ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.
ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.
நாகசாகி மீது போடப்பட்ட 'ஃபேட்மேன்' அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை "சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன" என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.
மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
http://www.keetru.com/history/world/japan.php
ஹிரோஷிமா - நாகசாகி
திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். "பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.
"அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். "மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்."
காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.
சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய 'மரகதலிங்கம்' முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை 'பாதுஷா லிங்கம்' என்றே அழைக்கின்றனர்.
திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை 'பிரதிஷ்டை' செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. "அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.
தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. "இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்" என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.
http://keetru.com/history/india/thippu.php
http://www.youtube.com/watch?v=HHnjq4-Ixck



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக