திங்கள், 18 மே, 2009

2009-05-18



More than a Blog Aggregator

by kanchana Radhakrishnan

தேவையானவை:

பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.


More than a Blog Aggregator

by kanchana Radhakrishnan

தேவையானவை:

பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.
---------------------------------------------------------
தீபச்செல்வன்

---------------------------------------------------------------
பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று.
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
-----------------------------------------------------------
(20.04.2009 தங்கச்சி வேங்கனிக்கு)
---------------------------------------------------------
தீபச்செல்வன்

---------------------------------------------------------------
பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று.
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
-----------------------------------------------------------
(20.04.2009 தங்கச்சி வேங்கனிக்கு)
பெரியாரை கொச்சைப்படுத்திய ஈ.வி.கே.எஸ். : மன்னிப்புகேட்க 48 மணி நேர கெடு!


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது, ''பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லிவருகிறார்.


உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது''என்று பேசினார்.


இளங்கோவனின் இத்தகைய பேச்சால் இளந்தமிழர் இயக்கத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள். இந்த இயக்கத்தின் அமைப்பாளர் செந்தமிழன், ''பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.


அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்'' என்று அறிவித்துள்ளார்.


இதனால் போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை வலைவீசி தேடி கைதுசெய்துவருகின்றனர். ''கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்''என்று மீண்டும் அறிவித்துள்ளார் செந்தமிழன்


வழக்கமாக கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது பாட்டுகளை ஓட விட்டுத் தான், மற்ற விசயங்களுக்கே போவேன். இங்கு நான் இரவு நேரங்களில் மிகவும் விரும்பிக் கேட்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்ந்தெடுத்த பாடல்களின் தொகுப்பை பகிர்ந்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இரவு தூங்கப் போகும் முன் AUTO SHUT DOWN கொடுத்துவிட்டு, இந்த மெல்லிசை தூறலோடு கரைந்து தூங்கிப் போவது என் வழக்கம்.

இங்கு 35 பாடல்கள் உள்ளன. இந்த Player-ல் வலதுபுறம் மேல் மூலையில் உள்ள SUFFLE Option இதில் சிறப்பு அம்சம்!
  1. முத்து- விடுகதையா இந்த வாழ்க்கை
  2. இந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு
  3. கிழக்கு சீமையிலே - தென்கிழக்கு சீமையிலே செங்காத்து மூலையிலே
  4. மே மாதம் - என் மேல் விழுந்த பனித்துளியே

இந்த பாடல்களின் இணைப்புகள் இணையத்தில் எனக்கு அகப்பட வில்லை. அவை இந்த தொகுப்பில் விட்டுப் போனதில் சிறு வருத்தமே.

மற்றபடி TamilBeat.com ம், Playlist.com ம் இந்த தொகுப்பு உருவாக்கதில் மிகவும் உதவின. அத்தளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! நீங்களும் கூட உங்களுக்கு பிடித்தமான பாடல்களை வரிசைப் படுத்தி இங்கு தொகுத்து வைத்துக் கொள்ளாலாம்.

பாடல்களை கேட்டு தூறலில் நனைந்து செல்லுங்கள்!

மேற்கூறிய விடுபட்ட பாடல்களை ஒரு சிறு தேடுதலில் பிடித்து இணைத்துவிட்டேன். Tamilwire.com, thenisai.com ஆகிய தளங்களுக்கு என் நன்றிகள்!
PlayList Updated on May 11,2009

கருத்துகள் இல்லை: