திங்கள், 18 மே, 2009

2009-05-18

'பாதுகாப்பு வலையம்' என்று அறிவித்த கொலை வலையத்தில் நேற்று ராஜபக்சேயின் கொலைவெறியாட்டத்தை மறைக்க தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளி பிரபாகரனை கொலைசெய்ததாக அறிவித்து பால்ச்சோறும், சம்பலும் சாப்பிடுகிறார்கள் சிங்களர்கள். பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.




மீண்டும் ஊடகங்கள் முகத்தில் ஒருமுறை கரிபூசி ஈழப் போராட்டத்தின் அடுத்த அத்தியாயத்தை எழுத பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். வன்னியில் நடத்தப்பட்ட படுகொலை, இரத்தக்குளியலுக்கு தண்டனை கொடுக்க சர்வதேச நாடுகளை நோக்கி போராடுவோம் தமிழர்களே. கொல்லப்பட்ட நம் மக்களுக்கும் அவர்களது இழப்பிற்கும், களத்தில் வீழ்ந்த போராளிகள், தளபதிகளுக்கும் வணக்கங்களும். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக உழைப்போம்.

உலகத்தமிழர்களின் முயற்சியால் வன்னி மக்களுக்கான மனிதாபிமான உணவு, மருந்து பொருட்களுடன் வணங்காமண் கப்பல் சூயஸ்கால்வாயை கடந்து வன்னியை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறது. கப்பலின் பயணம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வணங்காமண் இணையத்தளத்தை பார்வையிடுங்கள்.
[திங்கட்கிழமை, 18 மே 2009,]

பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பொட்டம்மான், சூசை, கபில் அம்மான், ரட்ணம் மாஸ்ரர், ஜெயம், வேலவன், லோரன்ஸ் போன்ற தளபதிகளும் தேசியத் தலைவருடன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று அதிகாலை நந்திக் கடலில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலை தொடர்ந்து தேசியத் தலைவரும் தளபதிகளும் முற்றுகையை உடைத்திருக்கலாம் என்று சிறிலங்காப் படைத் தரப்பு மட்டத்தில் பேசப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், கைது செய்யப்பட்டு விட்டதாகவும், அவருடைய உடல் பனகொடை முகாமில் உள்ளதாகவும் பல வதந்திகள் சிங்கள மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டுள்ள நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

இதில் உண்மையான செய்தியை அறிவதற்கு சில மணித்தியாலங்களோ, சில நாட்களோ, சில மாதங்களோ காத்திருக்க வேண்டி வரலாம் என்றே படுகின்றது.

தற்பொழுது இன்று (18.05.09) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டு விட்டதாக பன்னாட்டு ஊடகங்களில் செய்தி பரவ விடப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 18 மே 2009]

தமிழ் மக்களுக்கு பாதகமான பல தகவல்களை சிங்கள படையினர் பரப்பிவருவதனால் தமிழ் மக்களை வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவாய்க்கால் பகுதியில் சிங்கள படையினரின் தாக்குதலில் தலைவர் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டதாக சிங்கள படையினர் வதந்தியான தகவல்களை தமது ஊடகங்கள் மூலம் பரப்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் எஞ்சியுள்ள மக்களை முழுமையாக அழித்து தான் மேற்கொள்ளும் மிக மோசமான படுகொலையை வெளியுலகிற்கு மறைப்பதற்காக பல்வேறு கதைகளை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது.

சிறிலங்காவின் இந்தப் பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள சர்வதேச ஊடகங்கள் அங்கு கொல்லப்படுகின்ற மக்களின் நிலை குறித்து எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது, சிறிலங்கா வெளியிடுகின்ற விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன.

சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்த மக்களையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களையும் குழப்புகின்ற பாரிய திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பரப்புரை குறித்து தமிழ் மக்கள் விழிப்போடு சேயற்படுங்கள். ஒரு இன அழிவை மறைப்பதற்கு சிறிலங்கா மேற்கொண்டுள்ள பாரிய இந்த ஊடகப் போரை கவனமாக எதிர்கொள்ளுங்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது இவ்வாறு கூறியுள்ளார் . பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார். நண்பர்களுக்கு இந்தப் பதிவை [...]
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது இவ்வாறு கூறியுள்ளார் . பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார். நண்பர்களுக்கு இந்தப் பதிவை [...]

கருத்துகள் இல்லை: