இரவு நேரத்தில் நீ இன்றி நானா ? நெஞ்சம் பதைபதைக்கிறது...
உன் உடல் கொண்டு என் உடல்
மறைப்பதில் தான் எத்துனை சுகம்...!
உன்னை அணைத்து உறங்கிய சில
இரவினில் மூச்சு திணறலும் உண்டு...
ஆயினும்,
எனை குளிர் பயத்திலிருந்து காக்கும்
உன் பணி உயர்வானது
யார் இவள் தெரிகிறதா???
.
.
.
.
வேறு யார்... என் இரவு காதலி சால்வை தான்!!!
புனேவிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நமது மூதாதையர்களின் அற்புத கலை படைப்பு தான் எல்லோரா குகை கோவில்கள்,சைவம்,புத்த மற்றும் சைன மத கடவுளர்களை, மலைகளைகுடைந்து தத்துருபமாக செதுக்கி இருக்கிறார்கள்.பண்டைய மனிதர்களின் இக்கலை படைப்பை காண கண் கோடி வேண்டும்.எல்லோரா குகை கோவிலை காண புனேயிலிருந்து ஔரங்கபாத்திற்கு பேருந்து அல்லது ரயிலில் சென்று ,அங்கிருந்து 30 கிமீ தொலைவுள்ள எல்லோரா குகை கோவில் எனும் மனிதனின் அற்புத கலை படைப்பை வாடகை வாகனத்தில் சென்றடையலாம்.மேலே இணைக்க பட்டுள்ள புகைபடம் , கடந்த வாரம் நான் அந்த அற்புதத்தை பரவசபட்டப்போது கிளிக்கியது......

அன்பு நண்பா உனக்கு,
எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்
மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது
கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்
உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !
புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்
மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது
சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்
மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !
கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்
தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது
கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்
இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !
ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,
என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்
துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக