டைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம்.
ராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..???.
இப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார். வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.
குத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி.. முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்.. சூப்பர். இப்படியே காம்னா, கத்தாழ கண்ணாலே ஸ்னிகிதா என்று எல்லோருமே படம் பூராவும் கட்டுடைத்திருக்கிறார்கள்.
லாரன்ஸ் தன்னை ஒரு ரஜினி ஜெராக்ஸ் என்றே நினைத்து கொண்டு இம்சை படுத்தி கட்டுடைக்கிறார். கருணாஸ் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லியா ஒல்லி மும்தாஜ்.. அவரது தமில் நல்ல கிக். ஆவூன்னா பொடவைய உருவிட்டு, உருவிட்ட உடம்பை காட்டிட்டி நிக்கிறது ஷோக்காக்கீதுபா.. படம் முழுக்க எபக்ட் காரர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் உஷ். புஷ். என்று ஒரே சத்தம் கொடுத்து.
இயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும், படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
டிஸ்கி:
பின்நவீனத்துவம், கட்டுடைத்தல் போன்ற எழவுகள் என்றால் என்ன..? என்று கேட்பவர்களுக்கும் ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் ஒரு வழமையை தவிர்த்து அதற்கு எதிராய் செய்வது. சமீப காலமாய் நல்ல படங்களாய் வந்து கொண்டு இருக்கும் காலத்தில் மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய் அதையே புதிதாய் கட்டுடைத்து கொடுப்பது தான் .. என்ன எழவுடா.. எனக்கே ஒண்ணும் புரியல..
பசங்க படத்துக்கு இருந்த கூட்டத்தை விட இந்த நவீன பின்நவீனத்துவ படத்துக்கு நல்ல கும்பல். நம்ம மக்களும் பின் நவீனத்துவக்காரர்கள் ஆயிட்டாங்க..
சந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.
பணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.
அதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.
அவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.
காகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.
தவிர கடற்கரையோரத்திலும், மலைமுகடுகளிலும் கட்டிப்பிடித்து, ஊரெல்லாம் விரகத்தை கூவி கூவி விற்கும் பாடல்கள் போக, தங்க மாளிகை, டூட் பேஸ்ட் விளம்பரங்கள் காட்டிய நேரம் போக, புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்றும், பங்குச் சந்தையில் வரலாறு காணாத எழுச்சி எனவும், தோல்வியால் எரியும் கட்சிகள் மீது எண்ணெய் ஊற்றியும் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 24 மணி நேரமும் வீடுகளுக்குள் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆதரவுக்காக காற்றில் துழாவும் விரல்களைப் பிடிக்கும் நம்பிக்கை மிக்க ஒரு சொல்லுக்காக பிச்சைக்காரனைப்போல நான் என் வீட்டின் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறேன்.
*
ஜார்க்கண்ட், கர்நாடகத்திலிருந்து மட்டும் தலா 4 முன்னாள் முதல்வர்கள் லோக்சபாவுக்கு செல்கின்றனர். அவர்கள் சிபு சோரன்[^] , பாபுலால் மரான்டி, அர்ஜூன் முன்டா, மது கோடா (நால்வரும் ஜார்க்கண்ட்), குமாரசாமி, வீரப்ப மொய்லி, தரம்சிங், தேவெ கெளடா (நால்வரும் கர்நாடகா).
ராம் விலாஸ் பாஸ்வானை வென்று முன்னாள் பீகார் முதல்வர் ராம் சுந்தர் தாஸ், லோக்சபாவுக்கு செல்கிறார்.
இன்னொரு பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ்[^] சரன் தொகுதியில் வென்றார், பாடலிபுத்திராவில் தோல்வியுற்றார்.
டெல்லி முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜ், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லால், உ.பி. முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங் யாதவ்[^] , கல்யாண் சிங் ஆகியோரும் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
31 குற்ற எம்.பிக்கள்...
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 80 எம்.பிக்களில் 31 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அதிலும் 22 பேர் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக உ.பியிலிருந்து தேர்வாகும் எம்.பி்க்கள்தான் அதிக குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள். அதை இம்முறையும் உ.பி. மாநிலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது உ.பியிலிருந்து 28 எம்.பிக்கள் குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்தனர். தற்போது இது அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 150 எம்.பிக்கள் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர். இது கடந்த லோக்சபாவில் 128 ஆக இருந்தது.
சாதாரண குற்றப் பின்னணி உடைய எம்.பிக்களின் எண்ணிக்கை 17.2 சதவீதம் உயர்ந்துள்ளது. கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை 30.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா 2வது இடத்தில் உள்ளது. இங்கு 23 எம்.பிக்கள் கறை படிந்தவர்கள். இவர்களில் 9 பேர் மீது கடுமையான குற்றப் பின்னணி உள்ளது.
டாப் 10 'கேடி'களில் உ.பிக்கு முதலிடம்..
அதேபோல இந்தியாவின் டாப் 10 குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள் பட்டியலில் 3 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் லாலு பிரசாத் யாதவின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி பாஜகதான். அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களின் எண்ணிக்கை 42. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் உள்ளது. இதன் பங்கு 41 ஆகும். சமாஜ்வாடி கட்சிக்கு 8, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 பேரும் உள்ளனர்

சென்னை: விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற விவகாரங்கள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்னும் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யம் அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் மீறி வெளிவந்துள்ளன. விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்னும் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யமே.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி[^] 4 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு ஓரளவு வாக்குகளைப் பெறமுடிந்தது. வெற்றி தோல்விகளை பற்றி சிந்திக்காமல், பணபலத்தை மட்டுமே நம்பாமல் இந்த தேர்தலில் நாங்கள் கடுமையாக உழைத்தோம்.
இருப்பினும், மீண்டும் மீண்டும் பணபலம் எந்த அளவு உண்மையான ஜனநாயக உணர்வுகளை சிதைத்து வருகிறது என்பதை இந்த தேர்தலிலும் உணர முடிந்தது. இருப்பினும் இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, வெற்றி பெற்றவர்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி[^] யின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்தியில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறுகளை மீண்டும் தொடராமல், செய்யத் தவறிய பணிகளை செய்து மக்கள் நல்வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள்[^] கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்துவதை ஆட்சி பொறுப்பேற்றதும் முதற்கட்டமாக செய்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எதிர்கட்சியில் இருப்பவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ஆணித்தரமான விவாதங்களில் பங்கேற்று மக்கள் நலச் சேவையில் அரசை வழி நடத்தி செல்ல வேண்டும்.
வெற்றி பெறாதவர்கள் தோல்வியில் துவண்டு விடாமல், மக்கள் பிரச்சினைகளை ஆளும் கட்சிக்கு எடுத்துச் சொல்லி அவர்களது குறைகள் நீங்க அயராது பாடுபட வேண்டும். பதவியில் இருந்தால் மட்டுமே மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்பதில்லை.
தோல்வி என்பது முடிவல்ல, வெற்றிக்கான ஆரம்பம் என்பதை கருத்தில் கொண்டு சமத்துவ மக்கள் கட்சி[^] தொண்டர்கள் முன்னிலும் வேகமாக மக்கள் சேவைப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை இப்போதே மேற்கொண்டு அயராது உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் சரத் குமார் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக